முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் சமூர்த்தி திணைக்களத்தில் பல்வேறு ஊழல்கள் நிறைந்த ஒரு திணைக்களமாக காணப்படுகின்றது.
இவ்வாறு ஊழல்கள் செய்த குற்றச்சாட்டில் இதுவரை 5 உத்தியோகத்தர்கள் தற்காலிகமாக பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சமூர்த்தி திணைக்களங்கள் காணப்படுகின்றது பத்து வரையான சமூர்தி வங்கிகள் காணப்படுகின்றன 6 பிரதேச செயலகங்களின் கீழ் இவை இயங்கி வருகின்றன.
இவ்வாறு வறுமைக்குட்பட்ட மக்களின் பணத்தினை மோசடி செய்யும் நடவடிக்கையில் சமூர்த்தி திணைக்கள உதவிப்பணிப்பாளரும் உடந்தையாக செயற்பட்டு வருகின்றார்கள்.
இதுவரை மக்களின் பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் 5 உத்தியோகத்தர்கள் பணி இடை நிறுத்தப்பட்டுள்ளார்கள் (தேவை ஏற்படின் முழுமையான விபரம் வெளியிடப்படும்)
இவ்வாறு சமூர்த்தி திணைக்களத்தின் பணிப்பாளராக செயற்படும் அதிகாரியும் மறைமுகமாக பல்வேறு மோசடிகளில் ஈடு பட்டு வருகின்றமை அம்பலமாகியுள்ளது.
சுமார் வெளிநாடுகளுக்கு இடம் மாற்றங்கள் வழங்குவதற்காக அரச உத்தியோகத்தர்கள் அவர்கள் தங்கள் சலுகைக்காக குறித்த பணிப்பாளருக்கு கையூட்டு வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது இவ்வாறு இருபது உத்தியோகத்தர்கள் சுமார் இருபது இலட்சம் ரூபா பணத்தினை பணிப்பாளருக்கு வழங்கியுள்ளார்கள் திருப்பி கேட்க முடியாத நிலையி அவ்வாறு பணத்தினையோ அல்லது நீதியினையோ திருப்பி கேட்கும் சமூர்த்தி அதிகாரிகள் உயர் அதிகாரியால் பழிவாங்கப்படும் சம்பவங்கள் தற்போதுள்ள சமூர்த்தி பணிப்பாளரால் இடம்பெற்று வருகின்றது.
இதனை விட மாட்டு வத்தல்,மாடுகள் கூட கையூட்டாக வழங்கிவருகின்றமை தெரியவந்துள்ளது. இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சமூர்த்தி உத்தியோகத்தர்கள் ஒவ்வொருவதாக அதிகாரியால் பாதிக்கப்பட்டு வரும் சம்பவங்கள் தொடச்சியாக இடம்பெற்று வருகின்றது.
சமுர்த்தி திணைக்களத்தில் பணியாற்றி இரு உத்தியோகத்தர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு அனுப்பவதாக கூறி பணம் வாங்கிவிட்டு சுமார் தலா 7.5 இலட்சம் சுற்றுலா விசாவில் கட்டாருக்கு அனுப்p வைக்கப்பட்டு (இரண்டு இலட்சம் ரூபா சுற்றுலா விசா) அவர்கள் நிர்கதியான நிலைக்கு உள்ளாகி மீண்டும் நாட்டிற்கு வந்து இன்று வேலைஇல்லாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
சமூர்த்தி வங்கிகள் ஊடாக அதிகளவான இலாபங்கள் ஈட்டப்பட்டு வருகின்றன 2023 ஆம் ஆண்டு உடையார் கட்டு வங்கியால் ஒருகோடியே 20 இலட்சம் வரையான தேறியலாம் ஈட்டி மாவட்டத்தில் முதல் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 10 வங்கிகள் காணப்படுகின்றது 6பிரதேச செயலகங்கள் காணப்படுகின்றது 185 வரையான சமூர்த்தி உத்தியோகத்தர்கள் பணியாற்றி வருகின்றார்கள் கடந்த காலங்களில் அண்ணளவாக 15 ஆயிரம் வரையான சமூர்த்தி பயனாளிகள் குடும்பங்கள் காணப்படுகின்றன.
புதுக்குடியிருப்பு சமூர்த்தி வங்கியில் 25 இட்சத்திற்கு மேல் அறவிடமுடியா கடனாக காணப்படுகின்றது இவ்வாறு அறவிட முடியா கடனாக காணப்படும் பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் அந்த பிரதேசத்தினை சேர்ந்த உத்தியோகத்தர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள சமூர்த்தி வங்கியில் அதிகளவான மோசடிகள் இடம்பெற்றுள்ளதுடன் அதிகளவான பயனாளிகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் வங்கியில் அதிகளவான அறவிடமுடியா கடன் காணப்படுகின்றது.
கடன் முறைகள் ஊடாக சமூர்த்தி உத்தியோகத்தர்கள் மேற்கொள்ளும் மோசடிகள் உதாரணமாக ஒரு சமூர்த்தி மக்கள் குழுவில் பத்து பேர் இருப்பார்கள், அந்த பத்து பேருக்கும் ஒரு இலட்சம் ரூபா கடன் வழங்கப்படும் அதற்கான குழு ஒன்று இருக்கும் பத்து பேரின் பெயர் விபரங்கள் இடப்படும் அவ்வாறு அதனை ஏற்பாடு செய்பவர்கள் ஒரு சிலராக இருப்பார்கள், அவர்களுக்கு சிறுதொகை பணத்தினை கொடுத்துவிட்டு சமூர்த்தி அதிகாரி அந்த ஒரு இலட்சம் ரூபா கடனினை எடுத்துவிடுவார் அது பின்னர் அறவிடமுடியாக்காடனாக மாற்றம் காணப்படும் இவ்வாறு பல மோசடிகள் சமூர்த்தி திணைக்களத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றது இதற்கு தற்போது உள்ள சமுர்த்தி உதவிப்பணிப்பாளரும் உடந்தையாக இருக்கின்றார்.
தற்போது சமூர்த்தி வங்கிகள் ஊடாக ஒரு இலட்சம் ரூபா கடனினை மக்களுக்கு வழங்க பணித்துள்ளதுடன் அவ்வாறு கடன் பெறுபவர்கள் 50 ஆயிரம் ரூபா பணத்தினை சமூர்த்தி பணிப்பாளருக்கு மறைமுகமாக கொடுக்கவேண்டிய நிலைக்கு ஆளாகி வருகின்றார்கள் இவ்வாறு தொழில் எதுவம் நிதந்தராமாக செய்யமுடியாத ஒரு நபர் ஒரு இலட்சம் ரூபா பணத்தினை எடுத்துவிட்டு மீள கட்டமுடியாத நிலைக்கு தள்ளப்படும்போது அது அறவிடமுடியாக்காடனாக சமூர்த்தி வங்கிகளால் நிர்ணயிக்கப்படும் இவ்வாறு மக்களையும் ஏமாற்றி மக்களின் வரிப்பணத்தின சூறையாடும் அதிகாரிகள் மீது சரியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது பாதிக்கப்பட்டதரப்பினரின் கோரிக்கையாகும்.
0 கருத்துகள்