அன்பு தம்பி தங்கைகளே இதுதான் எனது கடைசி வீடியோ - டாக்டர் அர்ச்சுனா..!


டாக்டர் அர்ச்சுனா youtube வைத்து தனது தகவலை பகிர்ந்து பணம் சம்பாதிப்பவர்களுக்கு பகிரங்க அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது...

''அன்பு தம்பி தங்கைகளுக்கு எங்கள் பணிவார்ந்த வேண்டுகோள்.

இதுதான் எனது வரலாற்றில் யூட்யூப் மூலம் சமூக செய்திகளை கொண்டு செல்லும் எனது தம்பி தங்கைகளுக்கான கடைசி ஆன ஒரு யூடியூப் வீடியோவாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். 

வழக்குகள் முடியும் வரை எந்த ஒரு youtubeபருக்கும் தனிப்பட்ட ரீதியில் எந்த கருத்தையும் தெரிவிக்கவும் அல்லது வீடியோக்கான நேர்காணல் தெரிவிக்கவும் எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதை நான் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

நேற்றைய தினம் மிஸ்டர்  ரஜித் என்பவர் என்னுடன் பழகிக் கொண்ட விதம் என்னை அவமதித்த விதம் தொடர்பாக நான் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளதால் எனது சட்டவாளரினால் எனக்கு இந்த அறிவுரை கூறப்பட்டு நான் அதை ஏற்றுக் கொண்டுள்ளேன் தேங்க்யூ செலஸ்டின் அண்ணா. மேலும் என் சார்பில் எந்த youtube பேரும் உங்களிடம் பணம் கேட்டு அதை தாங்கள் உதவி செய்கிறோம் என்ற பாணியில் வேண்டுபவர்கள் இருந்தால் அவர்கள் சம்பந்தமாக எனக்கு அறிய தரவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 

கீழுள்ள தம்பி தங்கைகள் என்னிடம் எடுத்துக்கொண்ட youtube தான் நான் கடைசியாக ப்ரொபஷனலாக நான் வழங்கிய யூடியூப் செவியாகும் இதற்குப் பிறகும் என்னால் செவ்விகள் வழங்க கூடிய மனநிலையில் இவர்கள் என்னை வைத்திருக்கவில்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். 

எனது தம்பி தங்கைகள் ஏதோ ஒரு வழியில் முன்னேற்றம் காண அதற்காக நான் ஒரு சிறு துரும்பாக இருப்பேன் என்கின்ற எண்ணத்தில் மட்டுமே இவர்களை அழைத்த நேரம் எல்லாம் இவர்களிடம் சொன்ன இடம் எல்லாம் அவர்களை நம்பி நான் சென்று வீடியோக்களை நேர்காணல் மூலமாக தயாரித்து வெளியிடுவதற்கு உதவினேன். 

கடைசியில் என் கண்கள் என்னையே குத்திவிட்டன. இனிமேல் மேலதிகமாக என்னிடமிருந்து வெளியிடப்படுகின்ற கருத்துக்கள் எனது youtube தளத்தில் மட்டுமே வெளியிடப்படும் என்பதையும் எனது youtube தளத்தில் வெளியிடப்படுகின்ற எந்த ஒரு வீடியோக்களை பகிரவோ அல்லது அதனை கொப்பி பிரதி செய்து அதனை தங்களை யூட்யூபில் பிரதியிடுவதற்கு முற்றிலுமாக தடை செய்துள்ளேன். 

கொப்பி செய்து பிரதியிடுபவர யாராக இருந்தாலும் அவர்களுடைய youtube தளத்தினை youtube மூலமாகவும் இலங்கையிலுள்ள Online protection act மூலமாகவும் தடை செய்வேன் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி'' என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்