சரி பிழைகளுக்கு அப்பால் பிணை மறுக்கும் அளவுக்கு அர்ச்சுனா செய்த குற்றம் என்ன? 22 சட்டத்தரணிகள் அர்ச்சுனாவுக்கு எதிராக வாதாடியுள்ளனர்.
22 சட்டத்தரணிகள் அர்ச்சுனாவுக்கு எதிராக வாதாடும் அளவுக்கும் பிணை மறுக்கும் அளவுக்கும் அர்ச்சுனா செய்த குற்றம் என்ன?
பொதுவாக பாரதூரமான கிரிமினல் குற்றங்களுக்கு தான் பிணை மறுக்கப்படுவது வழமை. அர்ச்சுனா யாரையாவது கொ.லை செய்தாரா? அல்லது பா.லி.யல் குற்றம் புரிந்தாரா? ஊழல் மோசடியில் ஈடுபட்டாரா?
தனது வேலை வெட்டி எல்லாவற்றையும் விட்டு விட்டு ஒரு அப்பாவி ஏழை இளம் தாயின் மரணத்திற்கு நியாயம் கேட்க போனதற்கு தமிழ் தேசியம் வழங்கிய மகத்தான வெகுமதி சிறைத்தண்டனை.
இனிமேல் அரச மருத்துவமனைகளில் உங்களது உறவினர்கள் யாராவது மருத்துவர்களின் அல்லது தாதியர்களின் அசண்டையீனம் காரணமாக கொ.ல்லப்பட்டாலோ அல்லது அங்கவீனமடைந்தாலோ நவதுவாரங்களையும் பொத்திக்கொண்டு மருத்துவர்களுக்கு பாதநமஸ்காரம் செய்து விட்டு வெளியேறுங்கள்.
தப்பித்தவறி யாரவது வாயைத்திறந்தால் அவர்களை பிணையில் வெளியே வர முடியாத அளவுக்கு உள்ளே தள்ளுவதற்கு திருட்டுக்கூட்டம் காத்துக்கொண்டிருக்கிறது.
இக்கொ.லையை பெரும்பண்மை இனத்தை சேர்ந்தவர்கள் செய்திருந்தால் முழு நாயும் கத்தியிருக்கும். அரசியல்வாதிகள் செய்ய வேண்டிய வேலையை தனி ஒருவனாக செய்து கொண்டிருக்கும் ராமநாதன் அர்ச்சனாவுக்கு இலங்கை அரசாங்கம் கொடுத்த வெகுமதி சிறை தண்டனை.
எத்தினையோ தமிழ் அரசியல்வாதிகள் பதவியில் இருந்தும் செய்யக்கூடிய அதிகாரம் இருந்தும் சுற்றி ஆட்கள் பாதுகாப்பு இருந்தும் அவனுகளுக்குள்ளையே மாறி மாறி குறை சொல்லிட்டு சண்டை பிடிச்சிட்டு இருக்கானுகளே தவிற ஏழைகளுக்கு ஏதும் செய்வதும் இல்லை அவர்களுக்காய் நிற்பதும் இல்லை, அவர்களுக்காய் பேசுவதும் இல்லை,
தனி ஒருவனாய் யாருடைய உதவியும் இல்லாமல் எந்த விதமான பாதுகாப்பும் இல்லாமல் தன்னுடைய குடும்பம் போல ஏழைகளுக்காய் இரங்கும் ஒரு மனிதன் அரசியலுக்கு வாங்க Doctor உங்களை நேசிக்கும் நிறைய மக்களுடைய ஆதரவு உங்களுக்கு இருக்கு அதிகாரம் பாதுகாப்பு சுற்றி எப்போதும் 10,15 பேர் நினைத்ததை ஏழைகளுக்காய் செய்யலாம் யாராலையும் கேள்வி கேட்கவும் தடுக்கவும் முடியாது.
ஏழைகளின் வாக்கிற்கு அவ்வளவு சக்தி உண்டு.
0 கருத்துகள்