மன்னாரில் இடம்பெற்ற இளம் பட்டதாரி தாயின் மரணம் குறித்து பல யூட்டுபேர்ஸ் தமது வருமானத்திற்க விமர்சிக்க பட்ட பல விடீயோக்களை பதிவிடுவருகின்றனர்.
பிணையில் வந்தவுடன் வைத்தியர் அர்ச்சுனா 5 நாட்களுக்கு பின்னர் இந்த யூட்டுபேர்ஸ் விடீயோக்களை கண்டு தனது மன வருத்தத்தை பின்வருமாறு கூறியுள்ளார்.
அதில்.. ''இப்படியான தரவுகளை இப்போதுதான் நான் ஐந்து நாட்களில் பின் பார்க்கிறேன். சம்பந்தப்பட்ட தகப்பன் மற்றும் உறவினர்களுடன் நான் கலந்துரையாடியுள்ளேன்.
அவர்கள் சம்பந்தமான மேலதிக தரவுகளுடன் நான் பொதுமக்களுடன் இணைந்து கொள்ளும் வரை தயவுசெய்து எந்த யூடியூப் அவர்களும் மற்றும் பொது வழி ஊடகங்களும் சம்பந்தப்பட்ட குடும்பத்தை தங்களுடைய சுயலாபத்திற்காக பாவிக்கும் நிலைமையை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
தயவுசெய்து ஒரு பிஞ்சு குழந்தையின் வாழ்க்கையை தங்களுடைய youtube லாபத்திற்காக பங்காட வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், என்றோ நாளையோ இன்னும் இரு நாட்களிலோ நான் மன்னாரை விட்டு போய்விடுவேன்.
ஆனால் அவர்களுக்கு தொடர்ந்து இன்னும் நூறு வருடம் இந்த மன்னர் நிலத்திலே வாழ வேண்டி இருக்கும்
அவர்களால் தனியே தன்னந்தனியாக இந்த சமூகம் சம்பந்தமான சட்ட ரீதியான சிக்கல்களை எதிர் நோக்க வேண்டி இருக்கும் என்பதால் இவ்வகையான வீடியோக்களை இடுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
இவ்வகையான வீடியோக்களை பார்ப்பதற்காக அல்ல நான் ஐந்து நாட்கள் தவம் செய்து சிறைச்சாலைக்குள் போய்விட்டு வெளியே வந்திருக்கிறேன். தயவுசெய்து வகையான அற்ப விஷயங்களில் தங்களுடைய மூக்கை நுழைக்கும் தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
தொப்பி அளவானவர்களுக்கு மட்டும். இப்படிக்கு மன்னார் மைந்தன் ராமநாதன் அர்ச்சனா'' என குறிப்பிட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
0 கருத்துகள்