'பிள்ளையானும் கருணாவும் என்னை முடிக்க திட்டம் போடுகிறார்கள்' அதிர்ச்சி தகவலை வெளியிட்ட வைத்தியர் அர்ச்சுனா.!


வைத்தியர் அர்ச்சுனாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக அவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் பின்வருமாறு குறிப்பிடுள்ளார்..

''நான் அரசியலில் எங்கு நிற்கிறேன் என எல்லாருமே கேட்டார்கள்.. நான் அடிப்படையாக ஒரு தமிழ் உணர்வு மிக்கவன்..

அப்பாவிடம் அடிக்கடி கேட்பேன் 1985 ஆம் ஆண்டு நீங்கள் ஏன் ஜெர்மனியில் இருந்து திரும்பி வந்து யாழ்ப்பாணத்திலே போராட்டத்திலே இணைந்து கொண்டீர்கள் என்று, அதற்கு அவர் எனக்கு சொன்ன பதில் தமிழும் தாய் நிலமும் எங்கள் மூச்சு..இரு கண்கள் என்றார். அவனுடைய மடிக்கில் இருந்து வளர்ந்தவன் நான்.

அண்ணாவிடமும் சொல்லி இருக்கிறேன் அண்ணா நான் இன்றோ நாளையும் மரணித்தால் அந்த 44 ஆயிரத்து ஒன்றாக என்னை இணைத்துக் கொள் தம்பி செத்துப் போய்விட்டேன் என்று கவலைப்படாதே என்று..

தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமை எங்களை நாமே ஆள வேண்டும் என்பதில் மட்டுமே எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

போலி தமிழ் தேசியம் கதைத்து பாராளுமன்றத்தில் ஒன்றை கதைத்து மக்களிடம் ஒன்றை கதைத்து மீண்டும் மீண்டும் வாக்குகளை எண்ணிக்கொண்டே இருப்பவன் அல்ல நான். நெஞ்சில் துணிவு இருப்பவர்கள் தயவு செய்து இதை எழுதிக் கொள்ளுங்கள்..

எனது கார் இலக்கம் NPCAT 8798, ஒரு வெள்ளை VEZEL என அழைக்கப்படும் கார்.நான் எனது காரில் தான் சாகும்வரை பயணிப்பேன். நான் பொய்யாக கூட்டம் கூட்டி ஆக்களுடன் செல்வதில்லை. உங்களைப் போல் போலீசாரின் பாதுகாப்பில் இருந்து கொண்டு மக்களிடம் மக்களை பகைத்துக் கொண்டு ஒளித்து ஓடிய அரசியல் செய்ய வேண்டிய எந்த தேவையும் எனக்கு இல்லை..

எனது உயிர் இன்றோ நாளையோ பிரிந்து போனால். அது இன்றோ நாளையோ? ஒரு தமிழனின் கையாலே நான் சாவேன். ஆனால் அதுவரை தமிழுக்காக வாழ்வேன் எனது தந்தையும் அவ்வாறே வாழ்ந்தார்.

என்னை சுடுவதற்காக ஐந்து லட்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக நேற்று தான் ஒரு குரல் பதிவு மூலம் அறிந்து கொண்டேன். அவற்றை நான் புலனாய்வு போலீஸ் இடம் கொடுப்பதற்காக இருந்தேன். ஆனாலும் மீண்டும் யோசித்தேன் அதன் மூலம் பாதிக்கப்படுவது மீண்டும் ஒரு தமிழ அரசியல்வாதியே.

மட்டக்களப்பு மண் இதுவரை நான் பார்த்ததில்லை, மட்டக்களப்பு வாசம் எனக்கு தெரியாது மீண்டும் மட்டக்களப்பிலோ, திருகோணமலையிலோ, இல்லை முல்லைதீவிலோ வெகு விரைவில் நாங்கள் சந்திப்போம்.

எனது கண்கள் மூடப்படுவதற்கு முன்பாக என் கண்களால் மட்டக்களப்பையும் திருகோணமலையும் மீண்டும் ஒருமுறை பார்க்க ஆசைப்படுகிறேன். தலைவரின் கையால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் மட்டக்களப்பில் இருக்கிறார்கள் என்பது நன்றாகவே தெரியும்.

தலைவரின் இதயத்தை குத்தியவர்களும் அங்கே தான் இருக்கிறார்கள் என்று எனக்கு நன்றாகவே தெரியும். தனியே தான் வருகிறேன் ஆகையால் தயவுசெய்து முதுகில் சுட வேண்டாம். உங்களால் முடிந்தால் நேருக்கு நேரில் வந்து சுட்டுப் பாருங்கள்.

நான் தமிழின துரோகி அல்ல தமிழர்களின் தம்பி. வால்வோ சாவோ அது இன்றோ அல்லது நாளையோ துணிந்தவனுக்கு தூக்கு மேடையும் பஞ்சு மெத்தை. நாங்கள் மிக விரைவில் சந்திப்போம். நல்லூரில் கூட நீங்கள் என்னை சுடலாம். அங்கு சுட்டால் கூட தியாகி திலீபனின் உயிர் போன இடத்தில் இந்த உயிர் போகலாம்.. எப்படி வசதி? 😁

இப்படிக்கு தமிழ் மக்களின் மைந்தன் - வைத்திய கலாநிதி இராமநாதன் அர்ச்சுனா'' என தனது பதிவில் குறிப்பிடுள்ளார்.

கருணா, அம்மன் பிள்ளையான் தன்னை சுட்டுக்கொல்ல திட்டம் போடுகிறார்கள் - வைத்தியர் அர்ச்சுனா கூறிய மற்றுமொரு அதிர்ச்சி தகவல்..

''என்னைக் கொல்லுவேன் என்று சொன்னவர்களை நேரில் சென்று சந்திக்கும் துணிவு எனக்கு இருக்கிறது. துரோகிகளை அரவணைத்துக் கொள்ளும் எண்ணம் எனக்கு இல்லை ஆனால் அவர்கள் அண்ணனின் பெயரை பாவித்தால் உன்னை கொள்வோம் என்று சொன்னதன் பிறகு கூட ஓடி ஒளித்து தெரிவதற்கு கோழை அல்ல நான்.

பிரதேச வாதம் என்பது ஒரு கொடிய நோய். ஒரு காலத்திலே எங்களுடைய எல்லா வெற்றிகளுக்கும் எல்லா முன்னேற்றத்திற்கும் காரணமாக இருந்தவர்கள் மட்டக்களப்பின் மைந்தர்கள். காலம் சதி செய்தது, நரிகள் சதி செய்தது.

எங்கள் தலைவரால் வளர்க்கப்பட்டவர்கள், அண்ணனிடமே பிரிந்து நின்றார்கள் அப்போது அவருடைய மனது  துடித்துப் போய் இருக்கும் அல்லவா, எவ்வாறு எனது அண்ணனுக்கு உனக்கு துரோகம் செய்ய முடிந்தது என்று நேரிலேயே கேட்க ஆசைப்பட்டேன்.

அண்ணனுக்கு எதிராகவே நின்றார்கள், ஆனால் அவர்கள் போட்டிருந்த அதே உடுப்பு அண்ணன் உடலிலும் இருந்தது. அவர்களையும் ஒரு முறை பார்க்கத் துடிக்கிறேன் கருணா அம்மன் பிள்ளையான் அவர்களின் தொலைபேசி இலக்கம் இருந்தால் தயவு செய்து  அனுப்பி வைக்கவும்.

அவர்கள் சுடுவோம் கொலவோம் என்று சொன்னதன் பிறகு கூட ஒழித்து ஓடுவதற்கு நான் ஒரு கோழை அல்ல. 

அங்கே சென்று அவர்களே சந்திக்க எனக்கு துணிவு இருக்கிறது. என்னதான் இருந்தாலும் ஒரு காலத்தில் அண்ணனால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் அல்லவா? முதுகில் சுட மாட்டார்கள் என்று நினைக்கின்றேன்..

எல்லாரும் துரோகிகள் என்றார்கள்.. அதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை.. எவனொருவன் அன்னமூட்டி வளர்த்தானோ அவனை அவனது நெஞ்சிலேயே சுட்டுப் பார்த்து செத்துவிட்டார்களா என்று உடலை பரிசோதித்து சொன்னார்கள்.

அவற்றைப் பார்க்கும் போதெல்லாம் நெஞ்சம் துடிதுடித்து நின்று போனது. நான் அவர்களுடன் நேரில் கதைக்கவில்லை. கதைத்து விட்டு சொல்கிறேன் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று? வீணாக அங்கேயும் இங்கேயும் 5 லட்சங்கள் 10 லட்சங்கள் கொடுத்து என்னை சுடுவதை விட நேரில் வரும்போது நெஞ்சில் சுடலாம் அல்லவா.. இப்படிக்கு அர்ச்சுனா'' என தனது பதிவில் குறிப்பிடுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்