பிரபல வைத்திய நிபுணரான முரளி வல்லிபுரநாதன் என்பவர் டாக்டர் அர்ச்சுனாக்கு ஆதரவாகவும், மற்றும் GMOA மாபியா கும்பலுக்கு எதிராகவும் முகநூலில் பல உண்மைகளை வெளிப்படுத்தி வருகின்றார்,
நேற்றைய தினம் முகநூலில் இவர் பதிவொன்றை மேற்கொண்டு இருந்தார். அதில் பின்வருமாறு கூறப்பட்டிருந்தது.
அதாவது '2021 ஆண்டு ஜனகன் செல்வநாயகம் என்பவர் முகநூலில் எனக்கு நட்பு அழைப்பு விடுத்திருந்தார். அதை விசாரித்த போது அவர் என்னுடைய விரிவுரைகளில் மாணவராக யாழ் மருத்துவ பீட 31 ம் அணியில் இருந்து கலந்து கொண்டவராக இருந்தமையினால் அவரது நட்பு அழைப்பை ஏற்று கொண்டிருந்தேன் (இணைக்கப்பட்டுள்ளது ).
இந்த நிலையில் இன்று காலை என்னுடன் தொடர்பு கொண்ட இவர் இலங்கையில் வைத்தியர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் சம்பளம் குறைவாக இருப்பதாகவும் அதனால் வேலைக்கு வராமல் சம்பளம் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவுகளை பெறுவது நியாயமானது என்று வாதிட்டார்.
அதற்கு நான் அரசாங்கம் உங்களை பலவந்தமாக பணியில் வைத்திருக்கவில்லை உங்களுக்கு சம்பளம் போதவில்லை என்றால் நீங்கள் நேர்மையாக முழுநேரமாக தனியார் துறையில் வேலை செய்யலாம் அல்லது வெளிநாட்டுக்கு செல்லலாம் என்றும் பொய்யான கொடுப்பனவு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பது மருத்துவ ஒழுக்க நெறிக்கு முரணானது என்று தெரிவித்து இருந்தேன்.
அதை ஏற்றுக் கொள்ளாத அவர் பொய்யான கொடுப்பனவு விபரங்களை நான் முகநூலில் பதிவு செய்தால் எனக்கு எதிராக முகநூலில் பதிவிடுவேன் என்று மிரட்டினார்.
குரு நிந்தனை செய்வது சைவம், பௌத்தம் இஸ்லாம் கிறிஸ்தவம் ஆகிய அனைத்து மதங்களிலும் மகா பாவமாக கருதப்படுவதனால் இவரை எனது முகநூலில் இருந்து நீக்கி விட்டேன் (block).
இதையடுத்து உண்மைகளை தெரிவிப்பவராகவும் சமூகத்துக்கு நேர்மையாகவும் இருப்பவராக நான் இருந்தால் ஏன் மற்றவர்களை தடை செய்யவேண்டும் என எனக்கு எதிராக பதிவிடுகிறார்.(இணைக்கப்பட்டுள்ளது) GMOA மாபியாவின் தற்போதைய அடிவருடியாக செயல்படும் எனது பழைய மாணவன்.
குரு நிந்தனை செய்யும் இவரை தொடர்ந்து எனது முகநூலில் நண்பராக வைத்திருக்க வேண்டுமா இல்லையா என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்' என்பதாகும்.
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் கடைசியில GMOA என்பதும் ஒரு ரவுடி Group என்ற நிலமைக்கு வந்து விட்டது. இவ்வாறான சில நபர்களினால் தான் பெரும்பாலான வைத்தியர்களுக்கும் அவப்பெயர்.
குறித்த வைத்தியரும் ஒர் மருத்துவ மாபியாவே. இலங்கையில் வைத்தியர்களுக்கு சம்பளம் காணாது அதற்காக சட்டவிரோதமான முறையில் மக்களின் வரிப்பணத்தை பெற முயல்வது சரியா? இதே இலங்கையில் தற்போதும் மாதாந்தம் 60000 ரூபாய் அரச சம்பளத்துடன் தனது குடும்பத்தை கொண்டு செல்கின்றார்கள்.
வைத்தியத் துறை மட்டுமல்ல, எந்தத்துறையாக இருந்தாலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இல்லாவிட்டால் அது ஆத்ம துரோகமாகும். விசேடமாக வைத்தியத்துறை தெய்வீக சேவை என அறியப்பட்டுள்ளது. இது சீரழியத் தொடங்கிப் பல ஆண்டுகளாகின்றன. எங்கு போய் முடிகிறதோ தெரியவில்லை.
0 கருத்துகள்