யார் இந்த கனேமுல்ல சஞ்சீவ..? ஏன் கொல்லப்பட்டான்.?

எம்.ஏ.சுமந்திரனை கொலைசெய்ய திட்டமிட்ட குற்றவாளியும் 39 கொலைகளைச் செய்த நபருமாகிய கனேமுல்ல சஞ்சீவ இன்று கொல்லப்பட்டார்

பாராளுமன்ற உறுப்பினர்  எம்.ஏ. சுமந்திரனை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக 2019 ஆண்டளவில் கைது செய்யப்பட்ட  பிரபல பாதாள உலகக்குழு உறுப்பினரான கனேமுல்ல சஞ்சீவ அல்லது' மாலிங்கமுவே சஞ்ஜீவ ' எனப்படும் சஞ்சீவ குமார சமரரத்ன  கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் 2021 விடுவிக்கப்பட்டு இருந்தார். 

இறக்கும் வரையும் 39 கொலைகளைச் செய்துள்ள கனேமுல்ல சஞ்சீவ இன்று கொலைசெய்யப்பட்டமை பலருக்கு அதிர்ச்சியையும் பலருக்கு மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பினால் கடந்த யுத்த காலத்தில் வடக்கு, கிழக்கில் புதைக்கப்பட்டிருந்த கிளைமோர் குண்டுகள், ரீ 56 ரக துப்பாக்கிகள் , ak 47 உள்ளிட்ட ஆயுதங்களை தோண்டியெடுத்து கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளுக்கு கடத்தி இரகசியமான முறையில் பாதாள உலகக்குழு உறுப்பினர்களுக்கு விற்பனை செய்தமை மற்றும் கொள்வனவு செய்தமை, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை கொலை செய்ய சதி செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த விசாரணைகள் இடம்பெற்று வந்தன. 

மேற்படி வழக்கானது வத்தளை பகுதியில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமையவே நடைபெற்று இருந்தது,,,

வேறொரு வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட 2021ஆம் ஆண்டு   இரகசியமாக வெளிநாடு சென்றார். வெளிநாடு சென்று 2 ஆண்டுகளில் 17 கொலைகளை தனது சகாக்கள் மூலம்  செய்துள்ளார்,

சஞ்சீவ குமார சமரரத்ன என அழைக்கப்படும் இவர் 2023 செப்டம்பர் 13 காத்மண்டுவில் இருருந்து இலங்கை திரும்பும் போது கட்டுநாயக்கவில் வைத்து கைது செய்யப்பட்டு 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்,

 மனிதக் கொலைகள், பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல், கப்பம் பெறுதல், கொள்ளை மற்றும் பல குற்றச்செயல்கள் முதலிய குற்றங்கள் இவர்மீது உள்ளன,,,

நான்கு மாதங்களுக்கு முன்னர் கூட பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் வைத்து சஞ்சீவ அவர்களீன் அதிநவீன தொலைபேசி ஒன்றை சிம் இல்லாது STF கைப்பற்றி இருந்தது. 

இலங்கையில் மிகவும் ஆபத்தான நபர் இவர் என்று கணிக்கப்பட்டு சிறையீல் அடைக்கப்பட்டு இருந்தார், இது ஒரு பழிவாங்கல் கொலையாகவே இருக்க வாய்ப்பு உள்ளது. இவர் சிறையில் இருக்கும் போது கொழும்பு நகரில் சென்ற ஆண்டு நான்கு கொலைகள் நடைபெற்றது. தற்போதும் தொடர்ந்து பல கொலைகளை இவர் தனது சகாக்கள் மூலம் செய்து வந்தார்.....

இந்தக் கொலைக்கு கொலையாளி நவீன Pistol பாவிக்காமல் Classical  Revolver பாவித்தமைக்கு காரணம் அதன் அழுத்தமான துல்லியம், எவ்வகையிலும் Technical Fault ஏற்படாத தன்மை. எனவே இந்தக் கொலையாளி நிச்சயம் பல கொலைகளைச் செய்த ஒரு Professional Assasin ஆகவே இருக்க வாய்ப்புள்ளது. 

சஞ்சீவ மரணத்துடன் இந்த கொலைகள் முடிவுக்கு வரும் என்று நினைக்கின்றோம்,,,

ஒருவகையில் இந்த நபரின் மரணத்தை நியாப்படுத்தலாம், ஆனால் அது நிகழ்ந்த இடம் நீதிமன்றம் என்பதனால் பலவகைகளில் நியாயப்படுத்த முடியாது.



கருத்துரையிடுக

0 கருத்துகள்