நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

ஜோதிடம்

  • 🔮 இன்றைய ராசி பலன்
  • 📅 இன்றைய பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திர பலன்
  • 📆 வார ராசிபலன்
  • 🗓️ மாத ராசிபலன்
  • எங்களை பற்றி
  • 📡 RSS Feed

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🔮 ராசிபலன்
  3. >தேர்தல் நேரத்தில் திடீர் திருப்பம்; 22 நாட்கள் மருத்துவ விடுப்பில் செல்லும் டி.ஜி.பி டேவிட்சன் தேவாசிர்வாதம்: பின்னணி என்ன?
🔮 ராசிபலன்

தேர்தல் நேரத்தில் திடீர் திருப்பம்; 22 நாட்கள் மருத்துவ விடுப்பில் செல்லும் டி.ஜி.பி டேவிட்சன் தேவாசிர்வாதம்: பின்னணி என்ன?

ஞாயிறு, ஏப்ரல் ௧௨, ௨௦௨௬|14 மணி நேரம் முன்|balaji e|The Indian Express
தேர்தல் நேரத்தில் திடீர் திருப்பம்; 22 நாட்கள் மருத்துவ விடுப்பில் செல்லும் டி.ஜி.பி டேவிட்சன் தேவாசிர்வாதம்: பின்னணி என்ன?

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி டேவிட்சன் தேவாசிர்வாதம் உடல்நலக் குறைவு காரணமாக 22 நாட்கள் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். சமீபத்தில் இவரது பணி இடமாற்றம் தொடர்பாகத் தேர்தல் ஆணையம் மற்றும் தி.மு.க இடையே பெரும் அரசியல் சர்ச்சை வெடித்த நிலையில், தற்போது இதயக் கோளாறு மற்றும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக ஏப்ரல் 30-ம் தேதி வரை அவர் விடுப்பு எடுத்துள்ளது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், தேர்தலை நியாயமாக நடத்தும் பொருட்டு, தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் அண்மையில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதத்தை மாற்றியது. அவருக்கு பதில் சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டார். அவரும் உடனடியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் என தெரிவித்து சந்தீப் மிட்டல் நியமனத்தை எதிர்த்து தி.மு.க எம்.பி. டி.ஆர்.பாலு தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, டேவிட்சன் தேவாசீர்வாதம் இடமாற்றம் செய்யப்பட்ட உத்தரவு திரும்பபெறபட்டது. இதனால் சந்தீப் மிட்டல் ஆயுதப்படை டி.ஜி.பி-யாக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டது. மேலும் டேவிட்சன் தேவாசீர்வாதம் லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக தொடர்வார் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில், மூத்த ஐ.பி.எஸ் அதிகாரியும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் முன்னாள் இயக்குநருமான டேவிட்சன் தேவாசீர்வாதம், உடல்நலக் குறைவு காரணமாக 22 நாட்கள் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குநராகவும், கூடுதலாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஆயுதப்படை டி.ஜி.பி-யாகவும் மார்ச் 2-ம் தேதி முதல் டேவிட்சன் தேவாசீர்வாதம் பணியாற்றி வந்தார். தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், கடந்த ஏப்ரல் 8-ம் தேதி இவர் இந்தப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, கட்டாயக் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டார். இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஏப்ரல் 9-ம் தேதி முதல் வரும் ஏப்ரல் 30 தேதி வரை மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். டேவிட்சன் தேவாசீர்வாதம் தமிழக காவல்துறை தலைமை இயக்குநருக்கு (டி.ஜி.பி) எழுதியுள்ள கடிதத்தில், “ஏற்கனவே இதயக் கோளாறு காரணமாக ஆஞ்ஜியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது உயர் ரத்த அழுத்தத்திற்காக சிகிச்சை பெற்று வருகிறேன். சமீபத்தில் ஏற்பட்ட உடல் நல அசௌகரியத்தால், மருத்துவர்கள் முழு ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக, ஏப்ரல் 9-ம் தேதி முதல் ஏப்ரல் 30-ம் தேதி வரை மொத்தம் 22 நாட்களுக்கு அவர் மருத்துவ விடுப்பில் செல்ல அனுமதிக்க வேண்டும்” என கடிதம் எழுதி உள்ளார். இதற்கான மருத்துவச் சான்றிதழ்களையும் அவர் இணைத்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் நேரத்தில், லஞ்ச ஒழிப்புத் துறை டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் 22 நாட்கள் மருத்துவ விடுப்பில் செல்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

மூலச் செய்தி இணைப்பு

தொடர்புடைய செய்திகள்

சனி பிரதோஷம் ஏன் சிறப்பு வாய்ந்தது? முக்கியத்துவம் என்ன?
ராசிபலன்

சனி பிரதோஷம் ஏன் சிறப்பு வாய்ந்தது? முக்கியத்துவம் என்ன?

சனி பிரதோஷம் ஒரு முக்கியமான நட்சத்திர நாளாகும், இது ஆண்டுதோறும் கணிசமான நேரம் மட்டுமே நடந்தாலும் இந்து சமய மக்களின் பலருக்கும் மக்கள் அனுசரிப்பு கிடைக்கிறது. சனிப்பிரதோஷம் என்பது சனி அல்லது செவ்வாய் அமாவாசையில் காலையில் நடக்கும் பிரதோஷத்தைக் குறிக்கிறது. சமையற்காலத்தில் ஆறாவது நட்சத்திரம் வெளிச்சமாக உள்ளது என்பதால், சனிப்பிரதோஷம் என்பது சனிநெருப்பு அல்லது சனியில் பிரதோஷத்தைக் குறிக்கிறது. சனிப்பிரதோஷத்தில் பல மக்கள் பிரதான சமய முறைகளை ஆராயும் போது, மருத்துவ நோயாளிகள், வினைகளை முடிக்க முடியாத மற்றும் அறிவை மேம்படுத்துவதற்காக முயல்பவர்கள் ஆகியோர் முக்கியமான ஆசிரம நாட்களாக இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்
'கோவை --- 100 சதவீதம் ஏப்ரல் 23' வியக்க வைத்த கல்லுாரி மாணவர்கள்
ராசிபலன்

'கோவை --- 100 சதவீதம் ஏப்ரல் 23' வியக்க வைத்த கல்லுாரி மாணவர்கள்

சூலுார் நகரத்தில் உள்ள கல்லுரி மாணவர்கள் ஏப்ரல் 23 திகதி வரை நுாதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அவர்கள் 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி நகரத்தின் முக்கிய சாலைகளில் உள்ள குழுக்களாக கூடி பேசினர். மாணவர்களின் இந்த முயற்சி நகரத்தின் மக்களிடையே பரவலாக பரவியது. மாணவர்களின் செயல் செய்தியாளர்களின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த விழிப்புணர்வு நடவடிக்கைக்கு திருமணம் மாணவர்கள் மற்றும் மாணவர்களின் சங்கம் மூலமாக ஆதரவு கிடைத்தது. மாணவர்களின் சங்கம் இந்த ஓட்டுப்பதிவு முத்திரையை பெறுவதற்கு குறிப்பிட்ட செயல்பாடுகளை மேற்கொண்டு உள்ளது. இந்த மாணவர்களின் செயல் மாணவர்களின் கல்வித்திறனை பெருக்குவதற்கு இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்
ஜுவல் சாங்கி விமான நிலையத்திற்கு அதிகமான பயணிகள் முன்கூட்டி வருகை
ராசிபலன்

ஜுவல் சாங்கி விமான நிலையத்திற்கு அதிகமான பயணிகள் முன்கூட்டி வருகை

ஜுவல் சாங்கி விமான நிலையத்தில் கடந்த ஆண்டு பயணிகள் அதிகமாக முன்கூட்டியே பயண ஏற்பாடுகளை உறுதிசெய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவல் நிகழ்வு உலகம் முழுவதும் விமான நிலையங்களில் பயணிகள் முன்கூட்டியே பயண ஏற்பாடுகளை உறுதிசெய்வதற்கான பழக்கத்தை குறிக்கும். இந்த நிகழ்வில் பங்கேற்கும் முக்கியவர்களில் ஜுவல் சாங்கி விமான நிலைய நிர்வாகமும், பயணிகளும் அடங்குவர். பயணிகள் அதிகமாக முன்கூட்டியே பயண ஏற்பாடுகளை உறுதிசெய்வதற்கு காரணம் என்ன என்பதை அறிய வேண்டும். இதற்கான காரணம் பயண நாள அதிகரிப்பு, பயண சௌகரியங்கள் அதிகரிப்பு மற்றும் பயணிகள் முன்கூட்டியே பயண ஏற்பாடுகளை உறுதிசெய்வதற்கான விருப்பம் ஆக இந்தச் செய்தி Tamil Murasu ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்