நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >💼 வணிகம்
  3. >இனி ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பும் 'போர்டிங் பாயிண்ட்' மாற்றலாம்: ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்தது புதிய வசதி
💼 வணிகம்

இனி ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பும் 'போர்டிங் பாயிண்ட்' மாற்றலாம்: ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்தது புதிய வசதி

வியாழன், ஏப்ரல் ௨, ௨௦௨௬|15 மணி நேரம் முன்|abi sudha m|The Indian Express
இனி ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பும் 'போர்டிங் பாயிண்ட்' மாற்றலாம்: ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்தது புதிய வசதி

இந்திய ரயில்வே தனது பயணிகளின் வசதிக்காக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 1, 2026 முதல் நடைமுறைக்கு வந்துள்ள புதிய விதிகளின்படி, பயணிகள் ரயில் புறப்படுவதற்குச் சற்று நேரத்திற்கு முன்பு வரை தாங்கள் ஏறும் ரயில் நிலையத்தை (Boarding Point) மாற்றிக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை நடைமுறையில் இருந்த விதிகளின்படி, போர்டிங் பாயிண்ட் மாற்ற வேண்டுமென்றால் ரயில் புறப்படுவதற்கு குறைந்தது 24 மணி நேரத்திற்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், புதிய மாற்றத்தின்படி ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு வரை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் நீங்கள் ஏறும் இடத்தைச் சுலபமாக மாற்றிக்கொள்ளலாம். தெற்கு ரயில்வே தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் இந்த புதிய வசதியை உறுதிப்படுத்தியுள்ளது. இரண்டாவது முன்பதிவு அட்டவணை (Second Reservation Chart) தயாரிக்கும் வரை இந்த மாற்றத்தைச் செய்ய பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முக்கிய நிபந்தனைகள்: இந்த வசதி உறுதி செய்யப்பட்ட (Confirmed) மற்றும்ஆர்.ஏ.சி. (RAC) டிக்கெட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். காத்திருப்போர் பட்டியலில் (Waitlisted) உள்ள டிக்கெட்டுகளுக்கு இந்த வசதி கிடையாது. ஒரு டிக்கெட்டிற்கு ஒரே ஒரு முறை மட்டுமே போர்டிங் பாயிண்ட் மாற்ற அனுமதிக்கப்படும். எப்படி மாற்றுவது? ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் அல்லது செயலியில் லாக்-இன் செய்யவும். 'My Account' -> 'My Transactions' -> 'Booked Ticket History' பகுதிக்குச் செல்லவும். தேவையான டிக்கெட்டைத் தேர்ந்தெடுத்து, 'Change Boarding Point' என்பதை அழுத்தவும். புதிய ரயில் நிலையத்தைத் தேர்வு செய்து உறுதிப்படுத்தினால், உங்கள் மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தி (SMS) வந்துவிடும். இணைய வசதி இல்லாதவர்கள் ரயில் நிலைய முன்பதிவு கவுண்டர்களில் அடையாள அட்டையைச் சமர்ப்பித்து நேரடியாகவும் மாற்றிக்கொள்ளலாம். டிக்கெட் ரத்து மற்றும் ரீஃபண்ட் விதிகளிலும் மாற்றம்! போர்டிங் பாயிண்ட் மாற்றத்துடன் சேர்த்து, ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 15 வரை கட்டம் கட்டமாக டிக்கெட் ரத்து விதிகளும் மாற்றப்படுகின்றன: ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாக டிக்கெட்டை ரத்து செய்தால் அதிகபட்ச ரீஃபண்ட் கிடைக்கும் (முன்பு இது 48 மணி நேரமாக இருந்தது). 24 - 72 மணி நேரம், இந்த இடைவெளியில் ரத்து செய்தால் டிக்கெட் கட்டணத்தில் 25% பிடித்தம் செய்யப்படும். 8 - 24 மணி நேரம், இந்த நேரத்தில் ரத்து செய்தால் 50% கட்டணம் பிடித்தம் செய்யப்படும். 8 மணி நேரத்திற்கும் குறைவான நேரம்: ரயில் புறப்பட 8 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் டிக்கெட்டை ரத்து செய்தால், ரீஃபண்ட் தொகை எதுவும் கிடைக்காது. இந்த புதிய விதிமுறைகள் பயணிகளின் கடைசி நேரத் திட்ட மாற்றங்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இனி அவசரத் தேவைகளுக்காக ரயில் நிலையத்தை மாற்ற நினைப்பவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

The Indian Express இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க

தொடர்புடைய செய்திகள்

அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கும் அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!
வணிகம்

அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கும் அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!

மத்திய அரசு ஊழியர்கள் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் செய்தி Samayam Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

12 மணி நேரம் முன்
மத்திய அரசுக்கு ரூ.25,000 அபராதம்; நேரத்தை வீணடிப்பதாக கோர்ட் கோபம்
வணிகம்

மத்திய அரசுக்கு ரூ.25,000 அபராதம்; நேரத்தை வீணடிப்பதாக கோர்ட் கோபம்

-டில்லி சிறப்பு நிருபர்-தேவையற்ற வழக்குகளை தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக, மத்திய இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்
வீட்டுக்கடனுக்கு வட்டியை தவிர்க்க வேண்டுமா? கைகொடுக்கும் SIP முதலீடு – எப்படி தெரியுமா?
வணிகம்

வீட்டுக்கடனுக்கு வட்டியை தவிர்க்க வேண்டுமா? கைகொடுக்கும் SIP முதலீடு – எப்படி தெரியுமா?

Interest Free Loan : இந்தியாவில் வீடு கட்டுவது என்பது பலரின் கனவு. ஆனால் வீட்டுக்கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டி மிகப்பெரிய சுமையாக இருக்கிறது. இந்த நிலையில் அந்த சுமையை SIP திட்டம் வெகுவாக குறைக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்தச் செய்தி Tv9 Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்