நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >💼 வணிகம்
  3. >ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை; 5.25 % தொடரும் - ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு
💼 வணிகம்

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை; 5.25 % தொடரும் - ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு

புதன், ஏப்ரல் ௮, ௨௦௨௬|15 மணி நேரம் முன்|webdesk|The Indian Express
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை; 5.25 % தொடரும் - ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு

இந்திய ரிசர்வ் வங்கியின் 2026-27 நிதியாண்டிற்கான முதலாவது இருமாத நிதிக் கொள்கை முடிவுகளை ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று வெளியிட்டார். கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கிய மூன்று நாள் நிதிக் கொள்கை குழு (MPC) கூட்டத்தின் முடிவில், முக்கிய வட்டி விகிதமான ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ரெப்போ விகிதம் தொடர்ந்து 5.25 சதவீதமாகவே நீடிக்கும். வளர்ந்து வரும் பேரியல் பொருளாதார சூழல் மற்றும் நிதிநிலை மாற்றங்களை விரிவாக ஆய்வு செய்த பின்னர், வட்டி விகிதத்தை மாற்றமில்லாமல் தொடர நிதிக் கொள்கை குழு ஒருமனதாக வாக்களித்துள்ளதாக ஆளுநர் தெரிவித்தார். இதன் காரணமாக, எஸ்.டி.ஆர் (SDR) விகிதம் 5 சதவீதமாகவும், எம்.எஸ்.எஃப் (MSF) மற்றும் வங்கி விகிதங்கள் 5.5 சதவீதமாகவும் தொடர்ந்து நீடிக்கின்றன. மேலும், ரிசர்வ் வங்கியின் கொள்கை நிலைப்பாடு நடுநிலை என்றே தொடர்கிறது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க க்ளிக் செய்யவும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்துப் பேசிய ஆளுநர், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 6.9 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். காலாண்டு வாரியான வளர்ச்சியில், முதல் காலாண்டில் 6.8 சதவீதம், இரண்டாம் காலாண்டில் 6.7 சதவீதம், மூன்றாம் காலாண்டில் 7 சதவீதம் மற்றும் நான்காம் காலாண்டில் 7.2 சதவீதம் என வளர்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு ஆசியாவில் நிலவி வரும் பதற்றமான சூழல் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல்கள் ஹார்முஸ் ஜலசந்தி போன்ற முக்கியமான எரிசக்தி விநியோகப் பாதைகளைப் பாதித்துள்ளன. இது கச்சா எண்ணெய் விலையில் பெரும் உயர்வை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தற்காலிக இரண்டு வார கால போர்நிறுத்தம் சற்றே நிம்மதி அளித்தாலும், உலகளாவிய மற்றும் உள்நாட்டுச் சந்தைகளில் இதன் தாக்கம் தொடர்ந்து உணரப்படுகிறது. உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்கனவே எதிரொலிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ரிசர்வ் வங்கி இந்த முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

The Indian Express இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க

தொடர்புடைய செய்திகள்

இந்த ஒரு திட்டத்தில் முதலீடு செய்தால் போதும்.. உங்கள் பெண் குழந்தையின் எதிர்காலம் Settle!
வணிகம்

இந்த ஒரு திட்டத்தில் முதலீடு செய்தால் போதும்.. உங்கள் பெண் குழந்தையின் எதிர்காலம் Settle!

Sukanya Samriddhi Yojana Scheme Investment | அரசு அஞ்சலங்கள் மூலம் பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் பெண் குழந்தைகளின் நலனை பாதுகாக்கும் உதவும் இந்த சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம். இந்தச் செய்தி Tv9 Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்
ரெப்போ வட்டியில் மாற்றம் இல்லை.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு.. கடன் EMI எப்படி இருக்கும்?
வணிகம்

ரெப்போ வட்டியில் மாற்றம் இல்லை.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு.. கடன் EMI எப்படி இருக்கும்?

நாணயக் கொள்கை கூட்டத்தின் முடிவில் ரெப்போ வட்டியில் மாற்றம் இல்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார். இந்தச் செய்தி Samayam Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்
Repo Rate | வீடு, வாகன கடன் வட்டி குறைந்ததா? ரெப்போ வட்டி விகிதம்.. ஆர்பிஐ ஆளுநர் கூறியது என்ன?
வணிகம்

Repo Rate | வீடு, வாகன கடன் வட்டி குறைந்ததா? ரெப்போ வட்டி விகிதம்.. ஆர்பிஐ ஆளுநர் கூறியது என்ன?

Repo Rate | ஈரான் போரால் உலக பொருளாதாரத்தில் நிலைத்தன்மை இல்லை. இந்தியாவின் பொருளாதார ஆதாரங்கள் வலுவாக உள்ளது. இந்தச் செய்தி Tamil News 18 ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

15 மணி நேரம் முன்