நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🎬 சினிமா
  3. >ஆலக்குடி சக்கரை வாய்க்கால் தூர்வாரும் பணி தீவிரம்! விவசாயிகள் மகிழ்ச்சி!
🎬 சினிமா

ஆலக்குடி சக்கரை வாய்க்கால் தூர்வாரும் பணி தீவிரம்! விவசாயிகள் மகிழ்ச்சி!

சனி, ஏப்ரல் ௪, ௨௦௨௬|17 மணி நேரம் முன்|என்.நாகராஜன்|Abp News
ஆலக்குடி சக்கரை வாய்க்கால் தூர்வாரும் பணி தீவிரம்! விவசாயிகள் மகிழ்ச்சி!

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் ஆலக்குடியில் ரயில்வே கேட் அருகில் ஓடும் சக்கரை பாசன வாய்க்காலில் தூர்வாரும் பணி வெகு மும்முரமாக நடந்து வருகிறது. மேலும் கரைகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பு தூர்வாரும் பணிகளுக்கான துவக்க விழா கடந்த மார்ச் மாதம் முதல்வாரத்தில் தொடங்கப்பட்டது. 1315 கிலோமீட்டர் தூரத்திற்கு மொத்தம் 299 பணிகள் ரூ.26.16 கோடி மதிப்பீட்டில் நடைபெற உள்ளது. நடப்பு ஆண்டில் மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பாக அனைத்து தூர்வாரும் பணிகளும் முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கடைமடை பகுதி வரை தண்ணீர் தடையின்றி சென்று சேர வேண்டும் என்பதற்காக தற்போது பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அந்த வகையில் தஞ்சை மாவட்டம் ஆலக்குடி ரயில்வே கேட் அருகில் ஓடும் சக்கரை பாசன வாய்க்கால் தலைப்பிலிருந்து தூர் வாரும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதில் தூர் வாரும் மண்ணை கரையிலேயே கொட்டு கரையை வலுப்படுத்தி வருகின்றனர். பொக்லைன் இயந்திரத்தை கொண்டு அள்ளப்படும் மண்ணை சக்கரை பாசன வாய்க்கால் இருகரைகளிலும் கொட்டி இயந்திரத்தால் அழுத்தப்படுகிறது. இதனால் கரை வலுவாகிறது. இதனால் கடைமடை வரை தண்ணீர் விரைவாக செல்லும் வகையில் தூர் வாரப்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் சங்க தலைவர் தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ் கூறுகையில், வரும் ஜூன் 12ம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பாக டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் பணிகளை முடிக்க வேண்டும் என்று போர்க்கால அடிப்படையில் விரைந்து நடந்து வருகிறது. விரைவாக பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும் தரமாக நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் மேட்டூர் அணையில் வழக்கம் போல் தண்ணீர் திறந்தால் அடுத்த சில நாட்களிலேயே கடைமடை வரை தண்ணீர் தங்கு தடையின்றி செல்லும் வகையில் இந்த தூர்வாரும் பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. மேலும் தூர்வாரப்படும் மண் பாசன வாய்க்கால்களின் கரைகளை பலப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. இதனால் கரையும் வலுவாகிறது. இந்த பணிகள் மே மாதத்திற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடைமடை விவசாயிகளும் தடையின்றி தண்ணீரை பெற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து விரைவுப்படுத்தியதற்காக பாராட்டும், நன்றியும் அனைத்து விவசாயிகள் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

Abp News இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க

தொடர்புடைய செய்திகள்

கேரளத்தில் சசி தரூரின் பாதுகாவலர், ஓட்டுநர் மீது தாக்குதல்! ஒருவர் கைது!
சினிமா

கேரளத்தில் சசி தரூரின் பாதுகாவலர், ஓட்டுநர் மீது தாக்குதல்! ஒருவர் கைது!

கேரளத்தில் சசி தரூரின் பாதுகாவலர், ஓட்டுநர் தாக்கப்பட்டது குறித்து... இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

16 மணி நேரம் முன்
ரிலீஸ் கன்ஃபார்ம்... இன்று மாலை வெளியாகிறது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ட்ரெய்லர்
சினிமா

ரிலீஸ் கன்ஃபார்ம்... இன்று மாலை வெளியாகிறது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ட்ரெய்லர்

Love Insurance Kompany Movie Trailer: நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி திரையரங்குகளில் வெளியாகாமல் கிடப்பில் கிடந்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியாக உள்ளது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தச் செய்தி Tv9 Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

16 மணி நேரம் முன்
விஜய் கார் மீது ஏறிய தொண்டர்கள்.. பரப்புரைக்கு செல்லும் வழியில் அதிர்ச்சி-சர்ச்சை கிளப்பிய வீடியோ!
சினிமா

விஜய் கார் மீது ஏறிய தொண்டர்கள்.. பரப்புரைக்கு செல்லும் வழியில் அதிர்ச்சி-சர்ச்சை கிளப்பிய வீடியோ!

புதுச்சேரிக்கு பரப்புரை செல்லும் வழியில் விஜய் கார் மீது தவெக தொண்டர்கள் அத்துமீறி ஏறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செய்தி Samayam Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

16 மணி நேரம் முன்