இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகை சிம்ரன், தற்போது முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடித்து வரும் நிலையில், தமிழ் சினிமாவில் தனது குரு இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தான். என்று நெகிழ்சியாக கூறியுள்ளார். 1997-ம் ஆண்டு வெளியான விஜயின் ஒன்ஸ்மோர், பிரபுதேவாவின் வி.ஐ.பி ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியானது. இந்த இரு படங்களிலும் ஹீரோயினாக நடித்தவர் சிம்ரன். தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகும்போதே 2 படங்களில் ஹீரோயினாக அறிமுகமான சிம்ரன், அடுத்து விஜயகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். தற்போது திரைப்படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதனிடையே தமிழ் சினிமா குறித்து பேட்டி ஒன்றில் பேசிய சிம்ரன், என்னுடைய குரு கே.எஸ்.ரவிக்குமார் சார். ஆமாம், பிரமாதம்! அவருக்குப் பிறகு நிச்சயமாக எஸ்.ஜே. சூர்யா சார் இருக்கார், ஆனால் கே.எஸ். ரவிக்குமார் சார் தான் சிறந்தவர். அவர் வேலை செய்வதில் அதிவேகமானவர் (Super fast), அதே சமயம் ஜாலியான மனிதர். சார் செட்டில் பிரேக் எல்லாம் சரியான நேரத்திற்கு இருக்கும். படப்பிடிப்பு காலை 9 மணிக்கு என்றால், சரியாக 8:59-க்கு முதல் ஷாட் எடுத்துவிடுவார். மதியம் 1 மணிக்கு இடைவேளை, பிறகு 2 மணிக்குத் தொடங்கி 6 மணிக்கு முடித்துவிடுவார். அந்த வேகம் அப்படியே ஒரு மேஜிக் போல இருக்கும். தமிழ் சினிமாவில் இப்படி ஒரு இடமும், புகழும் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இதற்கு நான் முதலில் நன்றி சொல்லிக்கொள்கிறேன். இதில் என்னுடைய சிறப்பான பங்களிப்பு இருக்கிறது என்று நான் நினைப்பதை விட, நான் என்னுடைய வேலையைச் சரியாகச் செய்தேன் என்றுதான் சொல்வேன். நிறைய ஆண்டுகள் உழைத்திருக்கிறேன். ஒரு கட்டத்தில் வேலையை விட்டுவிடலாம் என்று கூட நினைத்தேன், ஆனால் என்னால் வீட்டில் சும்மா இருக்கவே முடியவில்லை. நான் வேலையை நேசிக்கிறேன். சில நேரங்களில் இரண்டு, மூன்று படங்களில் ஒரே நேரத்தில் 24 மணி நேரமும் உழைத்துக் கொண்டிருப்பேன். என் குழந்தைகளை விடவும் நான் என் வேலைக்குத் தான் முக்கியத்துவம் கொடுத்தேன். நான் எதைச் செய்தாலும் அதில் எனது 100% உழைப்பைக் கொடுப்பேன், அதுதான் முக்கியம். எனக்கு சென்னை மீது தனி காதல் உண்டு. நான் தெலுங்கில் நிறைய படங்கள் நடித்தாலும், சென்னை தான் எனக்குப் பிடித்த இடம் என நடிகை சிம்ரன் கூறியுள்ளார்.
இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



