தமிழ் சினிமாவில் கண்ணதாசன், வாலி, வைரமுத்து, நா.முத்துகுமார், யுகபாரதி வரிசையில் கவிதை நடையில் பாடல்களை கொடுத்தவர் சினேகன். தனது வரிகள் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள சினேகன், தமிழ் படத்திற்கு மலையாளத்தில் பாடல்கள் எழுதியுள்ளார். அந்த பாடல் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. 1997-ம் ஆண்டு வெளியான புத்தம்புது பூவே என்ற படத்தின் மூலம் பாடல் ஆசிரியராக அறிமுகமானவர் சினேகன். தொடர்ந்து, மனுநீதி, பாண்டவர் பூமி, பகவதி, சொக்கத்தங்கம், சாமி, தமிழ் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களுக்கு பாடல்கள் எழுதிய நிலையில், 2004-ம் ஆண்டு சேரன் தயாரித்து இயக்கி ஹீரோவாக நடித்த ஆட்டோகிராப் என்ற படத்திற்கு பாடல்கள் எழுதியிருந்தார். இந்த படத்தில் 3 பாடல்கள் எழுதியிருந்த நிலையில், மூன்றுமே பெரிய வெற்றிப்பாடலாக அமைந்தது. அந்த வகையில் சேரன் கோபிகா இருவருக்குமான மனசுக்குளே தாகம் வந்தல்லோ என்ற பாடலை, சினேகன் மலையாளத்தில் எழுதியுள்ளார். தமிழ் படம் என்றாலும் மலையாளத்தில் அமைந்த இந்த பாடல் இன்றைக்கும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலை ரேஷ்மி – ஹரிஷ் ராகவேந்திரா இணைந்து பாடியிருந்தனர். இந்த பாடல் எழுதப்பட்ட விதம் குறித்து பாடகர் ஹரிஷ் ராகவேந்திரா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இந்த பாடலுக்கான மலையாளம் வரிகளை சினேகன் தான் எழுதினார். இந்த பாடலை என்னுடன் இணைந்து பாடிய ரேஷ்மி கேரளாவை சேர்ந்தவர். சினேகன் பாடலை தமிழில் எழுதி கொண்டுவந்து, ரேஷ்மியிடம் கேட்டு சரியான மலையாள வார்த்தைகளை பயன்படுத்தி அந்த பாடலை எழுதி முடித்தார். அவர் சொல்ல சொல்ல, இவர் அப்படியே மெட்டுக்கு ஏற்றதுபோல், வரிகளை மாற்றி மாற்றி எழுதியிருந்தார். தமிழ் படத்திற்கு மலையாளத்தில் வரிகள் எழுதிய ஒரே ஒரு கவிஞர் சேரன் தான் என்று நினைக்கிறேன். அவ்வளவு அழகாக அந்த வரிகளை அமைத்திருந்தார். தமிழில் எழுதி, மலையாளதில் ஒவ்வொரு வார்த்த்தைக்கும் கருத்துக்களை கேட்டு கேட்டு எழுதி அந்த சந்தத்திற்கு சரியாக அமைந்திருந்தார். இந்த பாடல் அவ்வளவு பெரிய கோல்டன் பாடலாக வந்தது. பாடல் பதிவின்போது இயக்குனர் சேரன், சினேகன், நான், ரேஷ்மி என அனைவருமே இருந்தோம். இந்த பாடல் வந்தபிறகு கோபிகா தமிழ் எழுத்துக்கள் இருக்கும் அந்த சேலை அணிந்திருந்தது பெரிய .ஃபேமஸ் ஆனர். படத்தில் வெற்றி விழா போஸ்டரில், அனைவருக்கும் மரியாதை அளிக்கும் வகையில் பாடகர்கள் பெயரையும் வெளியிட்டிருந்தார் சேரன் என ஹரிஷ் ராகவேந்திரா கூறியுள்ளார்.
இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


