நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🎬 சினிமா
  3. >பிரபுதேவா இயக்கத்தில் த்ரிஷா; அதிக மொழிகளில் ரீமேக் ஆன ஒரே இந்திய படம்: 21 ஆண்டுக்கு பின்னும் தொடரும் சாதனை
🎬 சினிமா

பிரபுதேவா இயக்கத்தில் த்ரிஷா; அதிக மொழிகளில் ரீமேக் ஆன ஒரே இந்திய படம்: 21 ஆண்டுக்கு பின்னும் தொடரும் சாதனை

ஞாயிறு, ஏப்ரல் ௫, ௨௦௨௬|14 மணி நேரம் முன்|d. elayaraja|The Indian Express
பிரபுதேவா இயக்கத்தில் த்ரிஷா; அதிக மொழிகளில் ரீமேக் ஆன ஒரே இந்திய படம்: 21 ஆண்டுக்கு பின்னும் தொடரும் சாதனை

பொதுவாக ஒரு மொழியில் வெற்றி பெறும் படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக் செய்வது வழக்கம். இப்படி பல படங்கள் ரீமேக் செய்யப்பட்டு ஒரிஜினல் படங்களை போல் மற்ற மொழகளிலும் வெற்றியை பெற்றுள்ளது. அந்த வரிசையில், தெலுங்கில் வெளியாக ஒரு படம் தமிழ் உட்பட 9 மொழிகளில் ரீமேக் ஆகி சாதனை படைத்துள்ளது. 21 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்த படத்தை பற்றி இன்றும் பேசிக்கொண்டு இருக்கிறோம். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: பிரபல தயாரிப்பாளர் எம்.எஸ்.ராஜு தயாரித்த இந்த படத்தை இயக்க பிரபுதேவாவை கேட்டுள்ளனர். ஆனால், அவர் சம்மதிக்காத நிலையில், வற்புறுத்தி அவரை சம்மதிக்க வைத்துள்ளனர். பிரபுதேவா இயக்குனராக அறிமுகமான இந்த படம் அவருக்கு பெரிய பெயரையும் புகழையும் பெற்று தந்தது. இந்த படத்தின் மூலம் முதல்முறையாக கேமராவிற்குப் பின்னால் இயக்குநராக நின்று படத்தை இயக்கியுள்ளார் பிரபுதேவா. படத்தின் பட்ஜெட் 10 கோடி, ஒரே ஒரு படத்தில் நடித்திருந்த ஒரு இளம் ஹீரோ, தெலுங்கில் நாயகிக்கு 2-வது படம் என 'நூவொஸ்தானந்தே நேனொத்தண்டானா' (Nuvvostanante Nenoddantana) திரைப்படம் இந்தியத் திரையுலக வரலாற்றிலேயே அதிக முறை ரீமேக் செய்யப்பட்ட படமாக மாறும் என்று அப்போது யாரும் நினைக்கவில்லை. ஆனால், அதன் பிறகு தொடங்கிய அந்தப் பயணம், 9 வெவ்வேறு மொழிகளில் அந்த படம் ரீமேக் செய்யப்பட்டு வெற்றியை பெற்றது. திரைப்படம் உருவான விதம் தயாரிப்பாளர் எம்.எஸ். ராஜு தனது முந்தைய தயாரிப்பான 'வர்ஷம்' படத்தில் "நூவொஸ்தானந்தே" பாடலுக்கு நடனம் அமைத்த பிரபு தேவாவை, இயக்குநராக அறிமுகப்படுத்தினார். பிரபு தேவா முதலில் தயங்கினாலும், ராஜுவின் நம்பிக்கையினால் இந்த படத்தை இயக்க ஒப்புக்கொண்டார். 'பாய்ஸ்' படத்தில் சித்தார்த்தின் நடிப்பைக் கண்டு ஈர்க்கப்பட்ட ராஜு, திரையுலகில் அதிக பரிச்சயம் இல்லாத ஒரு முகம் தேவை என்பதால் அவரை நாயகனாகத் தேர்ந்தெடுத்தார். படத்தின் திரைக்கதையை ராஜுவே எழுதினார்; தொய்வில்லாத ஒரு வேகமான திரைக்கதை அமைப்பை அவர் படத்திற்கு வழங்கினார். லண்டனில் வளர்ந்த பணக்கார இளைஞன் சந்தோஷ், ஒரு உறவினர் திருமணத்தின் போது கிராமத்துச் சிறுமி சிரியைக் காதலிக்கிறான். சிரியின் அண்ணன் (ஸ்ரீஹரி) அவனுக்கு ஒரு சவால் விடுகிறார்: கிராமத்திற்கு வந்து, விவசாயம் செய்து, பணத்தை விட உழைப்பு உயர்ந்தது என நிரூபித்தால் மட்டுமே திருமணம் நடக்கும் என்று சொல்கிறார். இந்த சாதாரணக் கதையைத் தாண்டி, ஸ்ரீஹரியின் கனிவான நடிப்பு, சித்தார்த் மற்றும் த்ரிஷாவின் இயல்பான கெமிஸ்ட்ரி, மற்றும் தேவையற்ற நாடகத்தனம் இல்லாத அதன் மென்மையான அணுகுமுறை ஆகியவை இப்படத்தை வெற்றி பெறச் செய்தன. தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை, படம் வெளியாவதற்கு முன்பே அதற்கு ஒரு தனி அடையாளத்தைத் தந்தது. 'வர்ஷம்' படத்தின் பாடலில் இருந்து எடுக்கப்பட்ட தலைப்புப் பாடல், தெலுங்கு சினிமாவின் ஒரு அடையாளமாக மாறியது. 'பாரிபோகே பிட்டா' போன்ற பாடல்கள் இன்றும் ஒரு தலைமுறையின் நினைவுகளில் பசுமையாக உள்ளன. இசை இப்படத்தின் பின்னணியாக மட்டுமல்லாமல், கதையின் ஆன்மாவாகவே அமைந்தது. சாதனை படைத்த எண்கள் ஜனவரி 14, 2005 அன்று 90 பிரிண்ட்டுகளுடன் வெளியான இப்படம், ரசிகர்களின் வரவேற்பால் மேலும் பல பிரிண்ட்டுகள் சேர்க்கப்பட்டன. 79 மையங்களில் 50 நாட்களும், 35 மையங்களில் 100 நாட்களும் ஓடி, 2005-ம் ஆண்டின் மிகப்பெரிய தெலுங்கு ஹிட் படங்களில் ஒன்றாக உருவெடுத்தது. ஒரு பெரிய நட்சத்திர அந்தஸ்து இல்லாத ஹீரோவைக் கொண்டு இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றது ஒரு மிகப்பெரிய சாதனையாகக் கருதப்பட்டது. 9 மொழிகளில் ரீமேக் மற்றும் ஒரு முறியடிக்கப்படாத சாதனை இந்தக் கதை தெலுங்குடன் நின்றுவிடவில்லை. இந்தியத் திரையுலக வரலாற்றில் இதுவரை எந்தப் படமும் செய்யாத அளவிற்குப் பல மொழி எல்லைகளைக் கடந்தது. இது தமிழில் 'உனக்கும் எனக்கும்', கன்னடத்தில் 'நீனெல்லோ நானல்லே', வங்காளத்தில் 'ஐ லவ் யூ', மணிப்புரியில் 'நிங்கோல் தாஜபா', ஒடியாவில் 'சுனா சாதேய் மோ ரூபா சாதேய்', பஞ்சாபியில் 'தேரா மேரா கி ரிஷ்தா', வங்காளதேசத்தில் 'நிஸ்ஸாஸ் அமர் துமி', நேபாளியில் 'தி பிளாஷ் பேக்: ஃபர்கேரா ஹெர்டா' மற்றும் இந்தியில் 'ராமையா வஸ்தாவையா' என 9 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. ஒரிஜினல் தெலுங்கு படத்தில் நாயகியாக நடித்த த்ரிஷாவே தமிழ் பதிப்பான 'உனக்கும் எனக்கும்' படத்தில் மீண்டும் அதே கேரக்டரில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தார். கன்னடப் பதிப்பும் நல்ல வரவேற்பைப் பெற்றது. வங்காள மற்றும் ஒடிய பதிப்புகளும் கதையின் அடிப்படை உணர்வை மாற்றாமல் வெற்றி கண்டன. இந்த ஒன்பது ரீமேக்குகளில் 8 படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றன. 2013-ல் பிரபு தேவா தானே இயக்கிய இந்தி ரீமேக்கான 'ராமையா வஸ்தாவையா' மட்டுமே வணிக ரீதியாகத் தோல்வியடைந்தது. இருப்பினும், தொலைக்காட்சிகளிலும் ஓடிடியிலும் மக்கள் ரசிக்கும் ஒரு படமாக அது இன்றும் உள்ளது. இந்தத் திரைப்படம் ஏன் இன்றும் கொண்டாடப்படுகிறது? எளிமையான நேர்மையான காதல் கதை, கேரக்டர்கள் மீதான நம்பிக்கை, மற்றும் தேவையற்ற பிரம்மாண்டங்கள் இன்றி ரசிகர்களை ஈர்த்ததுமே இப்படத்தின் வெற்றிக்கான ரகசியம். இதில் வழக்கமான வில்லன்கள் இல்லை; செயற்கையான மோதல்கள் இல்லை. அண்ணன் கேரக்டர் ஒரு தடையாக இல்லாமல், ஒரு அக்கறையுள்ள மனிதராகக் காட்டப்பட்டது. சந்தோஷின் மாற்றம் மெதுவாகவும், நம்பத்தகுந்ததாகவும் இருந்தது. சிரி ஒரு அமைதியான ஆனால் உறுதியான பெண்ணாகக் காட்டப்பட்டார். இந்த எளிமையும் நேர்மையும் தான் 9 மொழித் திரையுலகினரையும் "இக்கதையை நம் மக்களும் பார்க்க வேண்டும்" என்று நினைக்க வைத்தது. சில கதைகளை மீண்டும் புதுப்பிக்கத் தேவையில்லை, முதல் முறையே சரியாகச் சொன்னாலே போதும் என்பதற்கு இப்படம் ஒரு சிறந்த உதாரணம்.

இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

The Indian Express இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க

தொடர்புடைய செய்திகள்

இதுவரை இல்லாத சாதனைகளை படைக்கும் 'துரந்தர் 2' - 17 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா?
சினிமா

இதுவரை இல்லாத சாதனைகளை படைக்கும் 'துரந்தர் 2' - 17 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா?

வெளியான 17 நாட்களிலேயே துரந்தர் 2ஆம் பாகம் இதுவரை இல்லாத வசூல் சாதனைகளை படைத்துள்ளது. இந்தச் செய்தி Tamil News 18 ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்
“ஆயிரம் அமித் ஷா, பழனிசாமி சேர்ந்தாலும் ஸ்டாலினின் நல்லாட்சியை தடுக்க முடியாது” - செல்வப்பெருந்தகை திட்டவட்டம்
சினிமா

“ஆயிரம் அமித் ஷா, பழனிசாமி சேர்ந்தாலும் ஸ்டாலினின் நல்லாட்சியை தடுக்க முடியாது” - செல்வப்பெருந்தகை திட்டவட்டம்

ஆயிரம் அமித் ஷாக்கள், பழனிசாமிகள் சேர்ந்தாலும் ஸ்டாலினின் நல்லாட்சியை தடுத்து நிறுத்த முடியாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார் இந்தச் செய்தி Hindu Tamil News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்
ஹாய் படத்தில் முதல் காட்சியே அதுதான்.. கவினிடம் நயன்தாரா கேட்ட கேள்வி? – இயக்குநர் விஷ்ணு எடவன் பேச்சு!
சினிமா

ஹாய் படத்தில் முதல் காட்சியே அதுதான்.. கவினிடம் நயன்தாரா கேட்ட கேள்வி? – இயக்குநர் விஷ்ணு எடவன் பேச்சு!

Funny Moment on Hi Movie set: பான் இந்திய சினிமாவில் 20 ஆண்டுகளை கடந்தும் தற்போதும் கதாநாயகியாக நடித்துவருபவர் நயன்தாரா. இவர் அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் ஹாய் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கில் நடந்த காமெடியான விஷயம் குறித்து விஷ்ணு எடவன் பகிர்ந்துள்ளார். இந்தச் செய்தி Tv9 Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்