சேலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது பாமக நிறுவனர் ராமதாஸ் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதியில் அருள் எம்.எல்.ஏ மீண்டும் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். இதனை ஒட்டி பகுதியில் சேலம் பள்ளப்பட்டி பகுதியில் இன்று இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் டாக்டர் ராமதாஸ், ஜிகே மணி எம்எல்ஏ, செயல் தலைவர் ஸ்ரீகாந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் சிறப்புரையாற்றி அருள் எம்எல்ஏவிற்கு மீண்டும் வெற்றி பெற பொதுமக்கள் உதவி புரிய வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதன் பின்னர், அவர் ஓமலூர் அருகே உள்ள முத்த நாயக்கன்பட்டியில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பேச மேடையில் இருந்து புறப்பட்டார். அப்போது அவரை இரண்டு தொண்டர்கள் கை தாங்கலாக பிடித்து அழைத்துச் சென்றனர். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் டாக்டர் ராமதாஸ் மயங்கினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது நிர்வாகிகளும் தொண்டர்களும் டாக்டர் ராமதாசை பார்க்க முந்தியடித்துக் கொண்டு கொண்டு முன்னால் வந்தனர். உடனே சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வர வைக்கப்பட்டது. அதில் ராமதாஸ் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டார். உடனே சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தல் பிரச்சாரம் நடந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


