படிப்பதற்கு வயது ஒரு தடையில்லை என்பார்கள். இன்றைய காலத்தில் விடுப்பட்ட படிப்பை தொடர பல வழிகள் உள்ளன. பலர் இதனை பயன்படுத்தி தங்கள் பள்ளி படிப்பை முடித்து வருகின்றனர். அந்த வகையில் மலையாள நடிகர் ஒருவர் தனது 68 வயதில் 7-ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். காக்க வைத்த எம்.எஸ்.வி, கடுப்பான கண்ணதாசன்; ஒற்றை வரியில் அவர் தூக்கத்தை கெடுத்த பாடல்: எம்.ஜி.ஆர் ஸ்பெஷல்! 1981-ம் ஆண்டு மலையாள திரையுலகில் ஒப்பனை கலைஞராக தனது பயணத்தை தொடங்கியவர் இந்திரன்ஸ். இவர் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். பின்னர் இயக்குனர் பார்வை இவர் பக்கம் விழவே புதிய கதாபாத்திரங்கள் பலவற்றில் நடித்தார். இந்திரன்ஸ், நகைச்சுவை மட்டும் அல்லாமல் செண்டிமெண்ட் கதாபாத்திரத்திலும் தனது சிறப்பான நடிப்பை கொடுத்து அசத்தியுள்ளார். தற்போது மலையாள திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தை பெற்றுள்ளார். ’கேரளா கிரைம் ஃபைல்ஸ் 2’ வெப் தொடரில் இந்திரனின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. இன்றைய இளம் இயக்குநர்களின் முதல் தேர்வாக இந்திரன்ஸ் இருக்கிறார். கடந்த 2021-ம் ஆண்டு ‘ஹோம்’ மலையாள திரைப்படத்துக்காக இவர் தேசிய விருது பெற்றார். ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் மே மாதம் திரைக்கு வரும் ‘கருப்பு’ படத்தில் இந்திரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வறுமையான குடும்பத்தில் பிறந்த இந்திரன்ஸ், தனது சிறு வயதில் பள்ளி படிப்பை பாதியில் விட்டுவிட்டு சினிமாவுக்குள் நுழைந்தார். பள்ளியில் படிக்கும்போது புத்தகங்கள், யுனிஃபார்ம் வாங்க காசு இல்லாத காரணத்தால் பாதியில் படிப்பை நிறுத்தியுள்ளார். இதுகுறித்து பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது “நான் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது யுனிஃபார்ம் வாங்குவதற்கு காசில்லை. அதனால் ஓராண்டு பள்ளிக்குச் செல்லவில்லை. அதன் பிறகு புத்தகங்கள் வாங்கவும் காசில்லை. அந்த பள்ளியில் யுனிஃபார்ம் கட்டாயம். அதன் பிறகு வீட்டின் வறுமை காரணமாக பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டேன். எங்கள் வீட்டில் 7 குழந்தைகள். அதில் நான் 3-வது பையன்” என்றார். இந்நிலையில், நடிகர் இந்திரன்ஸ் தனது 68-வது வயதில் 7-ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். அதாவது, கேரள மாநில எழுத்தறிவு இயக்க ஆணையத்தின் மூலம் அவர் இந்த வாய்ப்பை பெற்று தனது கனவுக்கு உயிர்கொடுத்துள்ளார். நடிகர் இந்திரன்ஸ் 10-ஆம் வகுப்பு தேர்வு எழுத விரும்பியுள்ளார். ஆனால், 7-ம் வகுப்பு தேர்வை முடித்து சான்றிதழ் வாங்காமல் 10-ம் வகுப்பு தேர்வை எழுத முடியாது என்பதால் 7-ம் வகுப்பு தேர்வை எழுதியுள்ளார். இவர் அடுத்தடுத்து தனது படிப்பில் கவனம் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


