விவசாய நிலங்களை விற்பனை செய்யும் போது அதன் வழிகாட்டி மதிப்பை உயர்த்தி பத்திரப்பதிவு கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை கோரிய வழக்கு - பதிவுத்துறை தலைவர் பதிலளிக்க அமர்வு உத்தரவு. விவசாயிகள் தற்கொலை முடிவை எடுக்கின்றனர். மதுரை துவரிமான் பகுதியை சேர்ந்த மூர்த்தி, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "விவசாய நிலங்களை தங்களின் பிள்ளைகளின் கல்வி, திருமணம் போன்ற விஷயங்களுக்கு விவசாயிகள் விற்கும் நிலை ஏற்பட்டால், சந்தை மதிப்பை விட வழிகாட்டி மதிப்பை பல மடங்கு உயர்த்தி பதிவு கட்டணம் மற்றும் முத்திரைத்தாள் கட்டணம் ஆகியவை பல மடங்கு கூடுதலாக பெறப்பட்டு பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. இதனால் அந்த விவசாய நிலங்களை கூடுதல் விலைக்கு வாங்குவதற்கு யாரும் முன்வருவதில்லை. இதனால் பொருளாதார ரீதியாக பின்னுக்கு தள்ளப்படும் விவசாயிகள் தற்கொலை முடிவை எடுக்கின்றனர். பத்திரப்பதிவுத்துறை தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். பதிவுத்துறை தனது சொந்த ஆதாயத்திற்காக, விவசாய நிலங்களின் வழிகாட்டி மதிப்பை நியாயமற்ற முறையில் உயர்த்துவது சட்டவிரோதமானது. எனவே நிலத்தின் வழிகாட்டி மதிப்பை உயர்த்தி பத்திரப்பதிவு கட்டணத்தை பெறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், "சில நேரங்களில் விவசாய நிலத்தை வீட்டுமனைகளாக காட்டி முத்திரைத்தாள் மற்றும் பதிவுக்கட்டணம் வசூலிக்கின்றனர்" என தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த மனு குறித்து பத்திரப்பதிவுத்துறை தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


