விஜய்யின் பிரமாண பத்திரங்களில் பெரம்பூரில் 52 வயது என்றும் திருச்சி கிழக்கில் 51 வயது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல, பெரம்பூர் பிரமாண பத்திரத்தில் வழக்கு ஏதும் இல்லையென குறிப்பிட்டுள்ள நிலையில் திருச்சி கிழக்கில் 2025-ல் ஒரு வழக்கு பதியப்பட்டதாக விஜய் மாறுபட்ட தகவல்களைக் குறிப்பிட்டுள்ளதால் பிரமாண பத்திரங்களில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், அந்த மனுக்களில் குழப்பம் இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக விஜய் தாக்கல் செய்த வேட்புமனு பிரமாணப் பத்திரத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவான ஒரு வழக்கு நிலுவையில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், பெரம்பூர் மனுவில் எந்த வழக்கும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார். அடுத்து, பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக விஜய் தாக்கல் செய்த வேட்புமனு பிரமாணப் பத்திரத்தில தனக்கு வயது 52 என்றும், திருச்சி கிழக்கு வேட்பு மனுவில் வயது 51 என்றும் குறிப்பிட்டுள்ளார். தகவல்களை மறைப்பது அல்லது தவறான தகவல்களை அளிப்பது வேட்புமனு நிராகரிப்புக்கு வழிவகுக்கும். இருப்பினும், கால அவகாசம் இருப்பதால் திருத்தப்பட்ட புதிய மனுவைத் தாக்கல் செய்து விஜய் இந்தச் சிக்கலில் இருந்து தப்பிக்க முடியும். இதனால், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளுக்கு விஜய் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரங்களில் வேறுபாடுகளை சரி செய்ய, த.வெ.க தலைவர் விஜய் திருத்தப்பட்ட பிரமாணப் பத்திரத்தை சனிக்கிழமை (04.04.2026) தாக்கல் செய்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


