பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள எல்.ஐ.கே (Love Insurance Kompany) திரைப்படம் பல முறை ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்ட நிலையில், தற்போது இப்படம் ஏப்ரல் 10, 2026 அன்று உலகம் முழுவதும் வெளியாகும் என்பதை இயக்குனர் விக்னேஷ் சிவன் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: முதலில் ஏப்ரல் 3 என அறிவிக்கப்பட்ட தேதி, தற்போது ஏப்ரல் 10-க்கு மாற்றப்பட்டுள்ளது. இது இப்படத்தின் வெளியீட்டுத் தேதியில் நடக்கும் பல மாற்றங்களில் லேட்டஸ்ட் மாற்றமாகும். செப்டம்பர் 18, 2025-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இந்த படம் அடுத்து 2025-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு 3-வது முறையாக டிசம்பர் 18, 2025 (பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்துடன் மோதுவதைத் தவிர்க்க) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 4-வது திட்டம்: பிப்ரவரி 2026 காதலர் தின வார இறுதி (இதுவும் நடக்கவில்லை). தற்போதைய தாமதத்திற்கு, மலேசியாவில் 'ஹரி ராயா ஐடில்பித்ரி' கொண்டாட்டங்களுக்காக தணிக்கை வாரியம் மூடப்பட்டிருந்ததால், சரியான நேரத்தில் தணிக்கைச் சான்றிதழைப் பெற முடியாததே காரணம் என்று கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் ரசிகர்கள் இந்த அறிவிப்பை கிண்டலுடன் வரவேற்றுள்ளனர். படத்தின் கதை 2040-ல் நடப்பதால், ஒரு ரோபோ "திரைக்கதை மாற்றம் 10 ஏப்ரல் 2040-ல் ரிலீஸ்" என்று சொல்வது போன்ற கமெண்ட்கள் வைரலாகி வருகின்றன. இந்த படம் விக்னேஷ் சிவன் எழுதி இயக்கியுள்ள ஒரு அறிவியல் புனைவு ரொமாண்டிக் காமெடி (Sci-fi Rom-com) திரைப்படமாகும். #LIK from April-10 Trust Me Bro 😄 An @anirudhofficial musical A Wikki Original @iam_SJSuryah @IamKrithiShetty @7screenstudio https://t.co/9M7YT6zQSY — Pradeep Ranganathan (@pradeeponelife) March 28, 2026 பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா மற்றும் கீர்த்தி ஷெட்டி முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். யோகி பாபு, சீமான், கௌரி ஜி கிஷன், ஷா ரா, மிஷ்கின் மற்றும் ஆனந்தராஜ் ஆகியோர் துணை பாத்திரங்களில் நடித்துள்ளனர். 2040-ஆம் ஆண்டில் நடப்பது போன்ற இக்கதை, காதலை ஒரு வணிகப் பொருளாகக் கருதும் சக்திவாய்ந்த டேட்டிங் தளத்தின் சிஇஓ சூரியனுக்கும் (எஸ்.ஜே.சூர்யா), கதாநாயகனுக்கும் இடையிலான மோதலைப் பற்றியது. மனித உணர்ச்சிகளைக் கணக்கிடும் கார்ப்பரேட் முறைக்கு எதிராகத் தனது காதலை நாயகன் எப்படிக் காப்பாற்றுகிறான் என்பதே கதை. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். 'நானும் ரவுடி தான்', 'தானா சேர்ந்த கூட்டம்', 'காத்துவாக்குல ரெண்டு காதல்' ஆகிய படங்களைத் தொடர்ந்து விக்னேஷ் சிவனுடன் அவர் இணையும் 4-வது படம் இதுவாகும். பிரதீப் ரங்கநாதன் நடித்த அனைத்துத் திரைப்படங்களும் (சமீபத்திய 'டியூட்' உட்பட) பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளதால், கோடை விடுமுறை வெளியீடுகளில் இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்படத்தை நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளன.
இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



