சென்னையில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா நிறுவனத்தில் நிர்வாக அலுவலர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.03.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். Administrative Officer காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் அரசு நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். வயதுத் தகுதி: 45 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு. சம்பளம்: ரூ. 90,100 தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு https://kalakshetra.in/wp-content/uploads/2026/03/Recrutiment-Notice-Administrative-Officer.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். முகவரி: Director, Kalakshetra Foundation, Thiruvanmiyur, Chennai - 600041 விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.03.2026 நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Director, Kalakshetra Foundation, Thiruvanmiyur, Chennai – 600 041 இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.
இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
