நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >📚 கல்வி
  3. >டி.என்.பி.எஸ்.சி குரூப் 1, 1ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு; செக் செய்வது எப்படி?
📚 கல்வி

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1, 1ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு; செக் செய்வது எப்படி?

திங்கள், மார்ச் ௩௦, ௨௦௨௬|23 மணி நேரம் முன்|ambikapathi karuppaiah|The Indian Express
டி.என்.பி.எஸ்.சி குரூப் 1, 1ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு; செக் செய்வது எப்படி?

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 மற்றும் குரூப் 1ஏ முதன்மைத் தேர்வுக்கான முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்வது எப்படி என்பதை இப்போது பார்ப்போம். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், உதவி வனப் பாதுகாவலர் உள்ளிட்ட பதவிகள் அடங்கிய குரூப் 1 மற்றும் 1ஏ தேர்வுக்கான அறிவிப்பை கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டது. மொத்தம் 72 பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஜூன் 15 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை 2.49 லட்சம் தேர்வர்கள் எழுதினர். இந்த குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் ஆகஸ்ட் 28 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு டிசம்பர் மாதம் முதன்மைத் தேர்வு நடைபெற்றது. இந்த முதன்மைத் தேர்வு டிசம்பர் 1 ஆம் தேதி முதல் டிசம்பர் 4 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தநிலையில் குரூப் 1 முதன்மைத் தேர்வுக்கான முடிவுகள் இன்று (மார்ச் 30) தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கான நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு வரும் ஏப்ரல் மாதம் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. முதன்மைத் தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்வது எப்படி? முதலில் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கமான https://www.tnpsc.gov.in/ என்ற பக்கத்திற்குச் செல்ல வேண்டும். முகப்பு பக்கத்தில் குரூப் 1 தேர்வுக்கான முடிவுகளும் குரூப் 1ஏ தேர்வுக்கான முடிவுகளும் தனித்தனியே வெளியிடப்பட்டிருக்கும். அந்த இணைப்புகளை கிளிக் செய்தால் புதிய பக்கத்தில் தேர்ச்சி பெற்றவர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் திரையில் தோன்றும். அதில் தேடுதல் பொறி மூலம் உங்களது பதிவெண்ணை உள்ளிட்டு, தேர்ச்சி விபரங்களை தெரிந்துக் கொள்ளலாம். மேலும், கீழே கொடுக்கப்பட்டுள்ள பி.டி.எஃப் கோப்புகள் மூலமாக நேரடியாகவும் தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம். முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதித் தரவரிசைப் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். அதன் அடிப்படையில், இடஒதுக்கீடு மற்றும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து பணி நியமனங்கள் இருக்கும்.

இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

The Indian Express இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க