நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >📚 கல்வி
  3. >10-ம் வகுப்பு அறிவியல் பொதுத் தேர்வு: ஈசியா கேள்விகள் இருந்ததா? ஆன்சர் கீ செக் பண்ணுங்க!
📚 கல்வி

10-ம் வகுப்பு அறிவியல் பொதுத் தேர்வு: ஈசியா கேள்விகள் இருந்ததா? ஆன்சர் கீ செக் பண்ணுங்க!

திங்கள், மார்ச் ௩௦, ௨௦௨௬|22 மணி நேரம் முன்|webdesk|The Indian Express
10-ம் வகுப்பு அறிவியல் பொதுத் தேர்வு: ஈசியா கேள்விகள் இருந்ததா? ஆன்சர் கீ செக் பண்ணுங்க!

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டுக்கான 10-ம் வகுப்பு அறிவியல் பொதுத்தேர்வு இன்று நடைபெற்றது. இந்தத் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் ஒட்டுமொத்தமாக எளிமையாக (Easy) இருந்ததாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பெரும்பாலான கேள்விகள் புத்தகப் பயிற்சிகளில் இருந்தே நேரடியாகக் கேட்கப்பட்டதால், மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பகுதி 1: ஒரு மதிப்பெண் வினாக்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் புத்தகத்தின் பின்புறம் உள்ள (Book Back) வினாக்களிலிருந்தே கேட்கப்பட்டுள்ளன. மேக்னிபிகேஷன் (Magnification)- நேர்மறை அல்லது எதிர்மறை (Positive or Negative), மின்சுற்று- சுவிட்சை மூடுவதன் மூலம் மின்சுற்று முழுமையடைகிறது. நவீன ஆவர்த்தன விதி- அணு எண் (Atomic Number) அடிப்படையில் அமைந்தது. தாவரவியல்- வேர் (Root), ஆனிப்ளாய்டி (Aneuploidy). சுகாதாரம்- கல்லீரல் சிதைவு (Cirrhosis of Liver). கணினி அறிவியல்- ஸ்கிரிப்ட் எடிட்டர் (Script Editor). பகுதி 2 & 3: 2, 4 மதிப்பெண் வினாக்கள் 2 மதிப்பெண் வினாக்களில் பாயில் விதி (Boyle's Law), ரிலேட்டிவ் அட்டாமிக் மாஸ், துருப்பிடித்தல் போன்ற நேரடி வினாக்களஇடம்பெற்றன. இயற்பியல்- ஒளியின் பண்புகள், லீனியர் மற்றும் ஏரியல் எக்ஸ்பான்ஷன், சத்தத்தைப் பாதிக்கும் காரணிகள் ஆகியவை கேட்கப்பட்டன. 5-வது பாடத்திலிருந்து கேட்கப்பட்ட கணக்கீடு (550 Hz விடை கொண்டது) சற்று எதிர்பாராத ஒன்றாக அமைந்தது. வேதியியல்- கதிரியக்க ஐசோடோப் பயன்கள், குறிப்பாகப் பாஸ்பரஸ்-32 விவசாயத்தில் பயன்படுவது குறித்த வினாக்கள் எளிமையாக இருந்தன. உயிரியல்- நியூரான்களின் வகைகள் (Multipolar, Bipolar, Unipolar), காடுகளின் முக்கியத்துவம், எண்டோகிரைன் மற்றும் எக்ஸோகிரைன் சுரப்பிகள் இடையேயான வேறுபாடுகள் ஆகியவை இடம்பெற்றன. பகுதி 4: 7 மதிப்பெண் வினாக்கள் 7 மதிப்பெண் வினாக்கள் மிகவும் எளிமையாகக் கேட்கப்பட்டிருந்தன. இயற்பியல்- இனர்சியா (Inertia), ஓம் விதி (Ohm’s Law) தொடர்பான கணக்கீடுகள். வேதியியல்- பைனரி சொல்யூஷன், pH கணக்கீடுகள் மற்றும் இரட்டை இடப்பெயர்ச்சி வினைகள். உயிரியல்- மெண்டலின் விதிகள், டி.என்.ஏ அமைப்பு, ஒளிச்சேர்க்கை (Photosynthesis) மற்றும் சுவாச ஈவு (Respiratory Quotient). ஒரு சில கட்டாய வினாக்கள் (Compulsory Questions) மற்றும் 4 மதிப்பெண் வினாக்களின் சில உட்பிரிவுகள் (Sub-divisions) மட்டும் மாணவர்கள் சற்று சிந்தித்து விடையளிக்கும் வகையில் (Tricky) அமைக்கப்பட்டிருந்தன. இருப்பினும், ஒட்டுமொத்தமாக இந்த வினாத்தாள் சராசரி மாணவர்களும் எளிதில் தேர்ச்சி பெற்று, நல்ல மதிப்பெண்களைக் குவிக்க ஏதுவாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

The Indian Express இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க