அதிக சம்பள தொகுப்பு, உயர் கட் ஆஃப் மற்றும் என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசை அடிப்படையில் தமிழ்நாட்டின் டாப் 25 பொறியியல் கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம். இன்ஜினியரிங் படிப்புகளில் 2026 ஆம் ஆண்டில் சேர விரும்பும் மாணவர்களும் பெற்றோர்களும் அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் இதில் அடங்கியுள்ளது. 12 ஆம் வகுப்பு முடித்த பெரும்பாலானோர் மருத்துவ படிப்புகளுக்கு அடுத்தப்படியாக அதிக அளவில் தேர்வு செய்வது பொறியியல் படிப்புகளைத் தான். வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், உயர் சம்பள தொகுப்பு, அதிக வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாணவர்களில் அதிகமானோர் பொறியியல் படிக்க விரும்புகிறார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 400க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு மூலம் சேர்க்கை நடைபெறுகிறது. இது 12 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் நடைபெறுகிறது. தமிழகத்தில் பொறியியல் படிக்க 400க்கும் மேல் கல்லூரிகள் இருந்தாலும், சிறந்த கல்லூரிகள் படிக்கும்போது அதிக சம்பள தொகுப்புள்ள வேலைவாய்ப்பு கிடைக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அந்தவகையில், தமிழகத்தில் உள்ள டாப் 25 கல்லூரிகளின் பட்டியலை கல்வி ஆலோசகர் தினேஷ் பிரபு தனது கேரியர் கைடன்ஸ் யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். இந்தப் பட்டியல் வேலை வாய்ப்பு, கட் ஆஃப், மாணவர்கள் விருப்பத் தேர்வு, சம்பள தொகுப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. 1). அண்ணா பல்கலைக்கழக சி.இ.ஜி கேம்பஸ், சென்னை உயர் சம்பள தொகுப்பு – ரூ. 40 லட்சம் கம்ப்யூட்டர் சயின்ஸ் பொதுப் பிரிவு கட் ஆஃப் – 199.50 ஆவரேஜ் கட் ஆஃப் – 194.36 2). அண்ணா பல்கலைக்கழக எம்.ஐ.டி கேம்பஸ், சென்னை உயர் சம்பள தொகுப்பு – ரூ. 40 லட்சம் கம்ப்யூட்டர் சயின்ஸ் பொதுப் பிரிவு கட் ஆஃப் – 198.50 ஆவரேஜ் கட் ஆஃப் – 194.47 3). பி.எஸ்.ஜி காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோவை உயர் சம்பள தொகுப்பு – ரூ. 63 லட்சம் கம்ப்யூட்டர் சயின்ஸ் பொதுப் பிரிவு கட் ஆஃப் – 199.50 ஆவரேஜ் கட் ஆஃப் – 190.93 4). சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, காஞ்சிபுரம் உயர் சம்பள தொகுப்பு – ரூ. 60 லட்சம் கம்ப்யூட்டர் சயின்ஸ் பொதுப் பிரிவு கட் ஆஃப் – 196 ஆவரேஜ் கட் ஆஃப் – 192.13 5). கோயம்புத்தூர் தொழில்நுட்ப நிறுவனம், கோவை உயர் சம்பள தொகுப்பு – ரூ. 52 லட்சம் கம்ப்யூட்டர் சயின்ஸ் பொதுப் பிரிவு கட் ஆஃப் – 197 ஆவரேஜ் கட் ஆஃப் – 192.17 6). ராஜலெட்சுமி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, சென்னை உயர் சம்பள தொகுப்பு – ரூ. 56 லட்சம் கம்ப்யூட்டர் சயின்ஸ் பொதுப் பிரிவு கட் ஆஃப் – 191 ஆவரேஜ் கட் ஆஃப் – 183.42 7). எஸ்.ஆர்.எம் ஈஸ்வரி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை உயர் சம்பள தொகுப்பு – ரூ. 52 லட்சம் கம்ப்யூட்டர் சயின்ஸ் பொதுப் பிரிவு கட் ஆஃப் – 188 ஆவரேஜ் கட் ஆஃப் – 178 8). பி.எஸ்.ஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு ரிசர்ச், கோவை உயர் சம்பள தொகுப்பு – ரூ. 37 லட்சம் கம்ப்யூட்டர் சயின்ஸ் பொதுப் பிரிவு கட் ஆஃப் – 197 ஆவரேஜ் கட் ஆஃப் – 191.12 9). ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கோவை உயர் சம்பள தொகுப்பு – ரூ. 60 லட்சம் கம்ப்யூட்டர் சயின்ஸ் பொதுப் பிரிவு கட் ஆஃப் – 193.5 ஆவரேஜ் கட் ஆஃப் – 186.2 10). தியாகராஜர் பொறியியல் கல்லூரி, மதுரை உயர் சம்பள தொகுப்பு – ரூ. 54 லட்சம் கம்ப்யூட்டர் சயின்ஸ் பொதுப் பிரிவு கட் ஆஃப் – 196 ஆவரேஜ் கட் ஆஃப் – 190.04 11). ராஜலெட்சுமி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை உயர் சம்பள தொகுப்பு – ரூ. 54 லட்சம் கம்ப்யூட்டர் சயின்ஸ் பொதுப் பிரிவு கட் ஆஃப் – 193.5 ஆவரேஜ் கட் ஆஃப் – 183.94 12). அரசு தொழில்நுட்ப கல்லூரி, கோவை உயர் சம்பள தொகுப்பு – ரூ. 54 லட்சம் கம்ப்யூட்டர் சயின்ஸ் பொதுப் பிரிவு கட் ஆஃப் – 197.5 ஆவரேஜ் கட் ஆஃப் – 188.78 13). குமரகுரு காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோவை உயர் சம்பள தொகுப்பு – ரூ. 40 லட்சம் கம்ப்யூட்டர் சயின்ஸ் பொதுப் பிரிவு கட் ஆஃப் – 195.5 ஆவரேஜ் கட் ஆஃப் – 187.81 14). ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை உயர் சம்பள தொகுப்பு – ரூ. 60 லட்சம் கம்ப்யூட்டர் சயின்ஸ் பொதுப் பிரிவு கட் ஆஃப் – 192 ஆவரேஜ் கட் ஆஃப் – 182.9 15). சவீதா இன்ஜினியரிங் காலேஜ், சென்னை உயர் சம்பள தொகுப்பு – ரூ. 44 லட்சம் கம்ப்யூட்டர் சயின்ஸ் பொதுப் பிரிவு கட் ஆஃப் – 189 ஆவரேஜ் கட் ஆஃப் – 179.72 16). கே.ஐ.டி கலைஞர் கருணாநிதி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கோவை உயர் சம்பள தொகுப்பு – ரூ. 52 லட்சம் கம்ப்யூட்டர் சயின்ஸ் பொதுப் பிரிவு கட் ஆஃப் – 185.5 ஆவரேஜ் கட் ஆஃப் – 174.63 17). ஸ்ரீ வெங்கடேஸ்வரா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், காஞ்சிபுரம் உயர் சம்பள தொகுப்பு – ரூ. 46.47 லட்சம் கம்ப்யூட்டர் சயின்ஸ் பொதுப் பிரிவு கட் ஆஃப் – 192 ஆவரேஜ் கட் ஆஃப் – 179.47 18). கே.பி.ஆர் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை உயர் சம்பள தொகுப்பு – ரூ. 51 லட்சம் கம்ப்யூட்டர் சயின்ஸ் பொதுப் பிரிவு கட் ஆஃப் – 192 ஆவரேஜ் கட் ஆஃப் – 183.4 19). பி.எஸ்.என்.ஏ காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, திண்டுக்கல் உயர் சம்பள தொகுப்பு – ரூ. 44 லட்சம் கம்ப்யூட்டர் சயின்ஸ் பொதுப் பிரிவு கட் ஆஃப் – 183 ஆவரேஜ் கட் ஆஃப் – 170.83 20). வி.எஸ்.பி காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கரூர் உயர் சம்பள தொகுப்பு – ரூ. 47 லட்சம் கம்ப்யூட்டர் சயின்ஸ் பொதுப் பிரிவு கட் ஆஃப் – 179 ஆவரேஜ் கட் ஆஃப் – 159.78 21). கொங்கு இன்ஜினியரிங் காலேஜ், ஈரோடு உயர் சம்பள தொகுப்பு – ரூ. 61 லட்சம் கம்ப்யூட்டர் சயின்ஸ் பொதுப் பிரிவு கட் ஆஃப் – 186.5 ஆவரேஜ் கட் ஆஃப் – 173.06 22). பண்ணாரி அம்மன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ஈரோடு உயர் சம்பள தொகுப்பு – ரூ. 18 லட்சம் கம்ப்யூட்டர் சயின்ஸ் பொதுப் பிரிவு கட் ஆஃப் – 190 ஆவரேஜ் கட் ஆஃப் – 177.54 23). பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை உயர் சம்பள தொகுப்பு – ரூ. 12 லட்சம் கம்ப்யூட்டர் சயின்ஸ் பொதுப் பிரிவு கட் ஆஃப் – 195 ஆவரேஜ் கட் ஆஃப் – 174.29 24). ஆர்.எம்.கே இன்ஜினியரிங் காலேஜ், சென்னை உயர் சம்பள தொகுப்பு – ரூ. 29 லட்சம் கம்ப்யூட்டர் சயின்ஸ் பொதுப் பிரிவு கட் ஆஃப் – 188 ஆவரேஜ் கட் ஆஃப் – 179.49 25). லயோலா ஐகேம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, சென்னை உயர் சம்பள தொகுப்பு – ரூ. 12 - 18 லட்சம் கம்ப்யூட்டர் சயின்ஸ் பொதுப் பிரிவு கட் ஆஃப் – 193 ஆவரேஜ் கட் ஆஃப் – 184.5
இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



