நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🏛️ அரசியல்
  3. >அமெரிக்கா-ஈரான் போர் எதிரொலி: விமான கட்டணத்தில் அதிரடி உயர்வு! சென்னை பயணிகள் அதிர்ச்சி!
🏛️ அரசியல்

அமெரிக்கா-ஈரான் போர் எதிரொலி: விமான கட்டணத்தில் அதிரடி உயர்வு! சென்னை பயணிகள் அதிர்ச்சி!

வெள்ளி, ஏப்ரல் ௩, ௨௦௨௬|15 மணி நேரம் முன்|நாகராஜ்|Abp News
அமெரிக்கா-ஈரான் போர் எதிரொலி: விமான கட்டணத்தில் அதிரடி உயர்வு! சென்னை பயணிகள் அதிர்ச்சி!

அமெரிக்கா, இஸ்ரேல் ஈரான் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவது உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை முதல் விமான டிக்கெட் வரை கட்டண உயர்வை சந்தித்து வருகிறது. தற்போது உள்ளூர் விமான டிக்கெட் விலை ஏற்றம் கண்டுள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர்ச் சூழலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து, சென்னையில் இருந்து மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும், நாட்டின் பிற நகரங்களுக்கும் செல்லும் உள்நாட்டு விமானக் கட்டணங்கள் புதன்கிழமை கணிசமாக அதிகரித்தன. இது குறித்து விமான நிலைய வட்டாரங்களின்படி, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் வளைகுடா பிராந்தியத்திலிருந்து வினியோகத் தட்டுப்பாடு காரணமாக, விமான எரிபொருள் (ATF) விலை சமீபத்திய நாட்களில் இருமடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, விமானக் கட்டண நிர்ணயத்தில் மத்திய அரசு ஏற்கனவே விதித்திருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, விமான நிறுவனங்கள் கட்டணங்களை மாற்றியமைக்க அனுமதி அளித்துள்ளது. இதன் விளைவாக, சென்னையில் இருந்து பல உள்நாட்டு வழித்தடங்களில் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் டிக்கெட் விலைகள் அதிகரித்துள்ளன. தமிழகத்திற்குள்ளான வழித்தடங்களில் கட்டண உயர்வு மிக அதிகமாக இருக்கும் நிலையில், மற்ற பெருநகரங்களுக்கான சேவைக்கான கட்டண உயர்வு ஓரளவிற்கு மிதமாக உள்ளது. சென்னை – தூத்துக்குடி விமான கட்டணம், குறைந்தபட்சமாக ரூ3,608 இருந்து ரூ6,503 ஆக உயர்ந்துள்ளது. சென்னை – மதுரை விமான கட்டணம் ரூ3,129 இருந்து ரூ5,467 ஆக அதிகரித்துள்ளது. சென்னை – திருச்சி விமான கட்டணம் ரூ3,608- இருந்து ரூ4,521 ஆக உயர்ந்துள்ளது. சென்னை – கோவை விமான கட்டணம் ரூ4,351- இருந்து ரூ4,966 ஆக உயர்ந்துள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான முக்கிய வழித்தடங்களில், சென்னை – டெல்லி விமான கட்டணம் ரூ5,933- இருந்து ரூ6,496 ஆக உயர்ந்துள்ளது. சென்னை – மும்பை விமான கட்டணம், 3,356-இருந்து ரூ4,020 ஆக அதிகரித்துள்ளது. சென்னை – கொல்கத்தா விமான கட்டணம் ரூ5,293-இருந்து ரூ6,047 ஆக உயர்ந்துள்ளது. இந்த மாற்றியமைக்கப்பட்ட கட்டணங்கள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதால், ஏற்கனவே பழைய கட்டணத்தில் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் சிலர், போர்டிங் பாஸ் பெறுவதற்கு முன்பாக ஆன்லைனில் கூடுதல் கட்டணத்தைச் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த திடீர் கட்டண உயர்வு, குறிப்பாக கோடைக்கால சுற்றுப்பயணங்களைத் திட்டமிடும் நடுத்தர குடும்பங்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

Abp News இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க

தொடர்புடைய செய்திகள்

"கொஞ்சம் பொறு கண்ணா.." ஒரு பாலத்தைச் சிதைத்த அமெரிக்கா.. 8 பாலங்களைப் பட்டியலிட்ட ஈரான்!
அரசியல்

"கொஞ்சம் பொறு கண்ணா.." ஒரு பாலத்தைச் சிதைத்த அமெரிக்கா.. 8 பாலங்களைப் பட்டியலிட்ட ஈரான்!

Iran HitList Of 8 Gulf Bridges After US Destroys The Biggest/"கொஞ்சம் பொறு கண்ணா.." ஒரு பாலத்தைச் சிதைத்த அமெரிக்கா.. 8 பாலங்களைப் பட்டியலிட்ட ஈரான்! இந்தச் செய்தி Puthiyathalaimurai ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

12 மணி நேரம் முன்
பணத்துக்கும், பாசத்துக்குமான போராட்டத்தை அழுத்தமாக கூறியதா? | Carmeni Selvam Review | Samuthirakani
அரசியல்

பணத்துக்கும், பாசத்துக்குமான போராட்டத்தை அழுத்தமாக கூறியதா? | Carmeni Selvam Review | Samuthirakani

Samuthirakani's Carmeni Selvam Review | பணத்துக்கும், பாசத்துக்குமான போராட்டத்தை அழுத்தமாக கூறியதா? இந்தச் செய்தி Puthiyathalaimurai ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்
சொன்னதைச் செய்துகாட்டிய ஈரான்.. 18 அமெரிக்க நிறுவனங்களில் அமேசான் மீது தாக்குதல்!
அரசியல்

சொன்னதைச் செய்துகாட்டிய ஈரான்.. 18 அமெரிக்க நிறுவனங்களில் அமேசான் மீது தாக்குதல்!

Iran strikes Bahrains top telco hosting Amazon/சொன்னதைச் செய்துகாட்டிய ஈரான்.. 18 அமெரிக்க நிறுவனங்களில் அமேசான் மீது தாக்குதல்! இந்தச் செய்தி Puthiyathalaimurai ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்