நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

ஜோதிடம்

  • 🔮 இன்றைய ராசி பலன்
  • 📅 இன்றைய பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திர பலன்
  • 📆 வார ராசிபலன்
  • 🗓️ மாத ராசிபலன்
  • எங்களை பற்றி
  • 📡 RSS Feed

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🏏 விளையாட்டு
  3. >அசைவே இல்லாமல் இருந்த லுங்கி நிகிடி... மைதானத்திற்கு நடுவே வந்த ஆம்புலன்ஸ்; ஹெல்த் அப்டேட்
🏏 விளையாட்டு

அசைவே இல்லாமல் இருந்த லுங்கி நிகிடி... மைதானத்திற்கு நடுவே வந்த ஆம்புலன்ஸ்; ஹெல்த் அப்டேட்

சனி, ஏப்ரல் ௨௫, ௨௦௨௬|15 மணி நேரம் முன்|martin jeyaraj|The Indian Express
அசைவே இல்லாமல் இருந்த லுங்கி நிகிடி... மைதானத்திற்கு நடுவே வந்த ஆம்புலன்ஸ்; ஹெல்த் அப்டேட்

10 அணிகள் களமாடும் 19-வது ஐ.பி.எல். தொடர் மார்ச் 28-ம் தேதி முதல் கோலாகலாமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மே 31-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கும் இத்தொடரில், இன்று சனிக்கிழமை 2 ஆட்டங்கள் நடைபெறுகிறது. இந்நிலையில், இன்று பிற்பகல் 3:30 மணிக்கு டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் 35-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கே.எல் ராகுல் 152 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து, 265 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய பஞ்சாப் அணி அதிரடியாக ஆடியது. அந்த அணியின் பிரப்சிம்ரன் சிங் அரைசதம் விளாசி 76 ரன்கள் எடுத்தார். அணியின் வெற்றியை உறுதி செய்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 71 ரன்கள் எடுத்தார். இறுதியில், 18.5 ஓவர்களில் இலக்கை எட்டிய பஞ்சாப் அணி டெல்லியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. காயம் இந்நிலையில், இந்த ஆட்டத்தின் போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் பிரியன்ஷ் ஆர்யாவுக்கு அக்சர் படேல் வீசிய மூன்றாவது ஓவரில் மெதுவான பந்தை மிட்-ஆஃப் திசையில் அடித்தார். பந்தை பிடிக்க பின்வாங்கிக் கொண்டிருந்த லுங்கி என்கிடி, அதனைப் பிடிக்க கையை நீட்டினார். ஆனால், பந்தை எட்டத் தவறிய அவர், நிலை இழந்து தடுமாறி, அப்படியே பின் பக்கமாக தரையில் விழுந்தார். இதில் அவரது தலை தரையில் சட்டென மோதியது. Lungi Ngidi (South African cricketer) stretchered off after horrific head injury in IPL 2026. Ambulance rushed onto field, taken to hospital. #ipl2026 pic.twitter.com/mKx7BLAoB5 — Vivek Singh (@viveksinghsays) April 25, 2026 சில கணங்கள் அப்படியே அசைவற்று கிடந்ததால் அங்கிருந்த வீரர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். அப்போது மருத்துவக் குழுவினர் களத்திற்குள் விரைந்து அருக்கு சிகிச்சை அளித்தனர். அப்போது, அவர் சுயநினைவுடன் காணப்பட்டார். பிறகு மைதானத்திற்கு நடுவே ஆம்புலன்ஸ் வந்தது. பின்னர் அவரை ஆரம்ப சிகிச்சைக்கு ஸ்ட்ரெச்சரில் ஏற்றி, ஆம்புலன்ஸ் மூலம் மாக்ஸ் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்துச் சென்றது. 🚨Lungi Ngidi has suffered a serious injury🚨 - For the first time in IPL history, an ambulance has come onto the ground. - He misjudged the catch & fell awkwardly 😳 - He lay still on the field for some time. - Doctor quickly arrived on the scene. Stretcher and Ambulance... pic.twitter.com/vLSPJGVits — Indian Cricket (@IPL2025Auction) April 25, 2026 இந்த நிலையில், லுங்கி என்கிடியின் உடல்நலம் குறித்த தகவலை ஐ.பி.எல் நிர்வாகம் பகிர்ந்துள்ளது. இது தொடர்பாக சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள அறிக்கையில், " பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், கேட்சைப் பிடிக்க முயன்றபோது, ​​டெல்லி கேப்பிடல்ஸ் அணியைச் சேர்ந்த லுங்கிசானி என்கிடி தலை தரையில் மோதியது. Update: Lungisani Ngidi of Delhi Capitals hit his head on the ground while attempting to take a catch during his team’s match against Punjab Kings. He was shifted to the hospital in an ambulance as he complained of a headache and neck pain. Ngidi is stable and is due to be... https://t.co/F6NQhDTq9F — IndianPremierLeague (@IPL) April 25, 2026 அவர் தலைவலி மற்றும் கழுத்து வலி இருப்பதாகக் கூறியதால், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது; அவர் விரைவில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பவுள்ளார். அவருக்குப் பதிலாக, 'மூளை அதிர்ச்சி மாற்று வீரராக' (concussion substitute) விப்ராஜ் நிகம் களத்தில் இறங்கியுள்ளார்." என்று கூறியுள்ளது.

இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

மூலச் செய்தி இணைப்பு

தொடர்புடைய செய்திகள்

Sooryavanshi: அடிச்சா செஞ்சுரிதான் அடிப்பேன்! 15 வயதிலே 3வது சதத்தை விளாசிய சூர்யவன்ஷி!
விளையாட்டு

Sooryavanshi: அடிச்சா செஞ்சுரிதான் அடிப்பேன்! 15 வயதிலே 3வது சதத்தை விளாசிய சூர்யவன்ஷி!

ஐபிஎல் தொடரில் தோனி, கோலி, ரோகித் போன்ற சீனியர் வீரர்கள் மீது எந்தளவு எதிர்பார்ப்பு உள்ளதோ, அதே அளவு அனைவரது மத்தியிலும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள வீரர் சூர்யவன்ஷி. ராஜஸ்தான் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான இவர் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசி ஐபிஎல் தொடரில் தனது 3வது சதத்தை பதிவு செய்தார். துவம்சம் செய்த சூர்யவன்ஷி: இன்று ஜெய்ப்பூரில் நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி - சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ராஜஸ்தானை பேட் செய்ய அழைத்தது. ஜெய்ஸ்வால் - சூர்யவன்ஷி ஜோடி ஆட்டத்தை தொடங்கியது. ஜெய்ஸ்வால் 10 ரன்களில் அவுட்டாக, சூர்யவன்ஷி வழக்கம்போல பட்டாசாய் வெடித்தார். சன்ரைசர்ஸின் இளம் நட்சத்திர பந்துவீச்சாளர்கள் பிரஃபுல் ஹிஞ்சே, ஷகிப் ஹசன், ஷிவங் குமார் ஓவரை துவம்சம் செய்தார். கம்மின்சன் மட்டும் கட்டுப்படுத்த முயற்சித்தாலும் சூர்யவன்ஷி அசத்தினார். பவுண்டரிகள் எப்போதாவது வந்த நிலையில், பந்து ரசிகர்கள் கூட்டத்தை நோக்கி சென்று கொண்டே இருந்தது. 36 பந்துகளில் சதம்: யார் பந்துவீசினாலும் சிக்ஸர் விளாசிய இவர் அரைசதம் விளாசினார். இவரை கட்டுப்படுத்த முடியாமல் கம்மின்ஸ் பந்துவீச்சாளர்களை மாறி, மாறி பயன்படுத்தியும் கடைசியில் 36 பந்துகளில் தனது 3வது ஐபிஎல் சதத்தை விளாசினார். இதே தொடரில் அவர் விளாசும் 2வது சதம் இதுவாகும். சதம் விளாசிய அடுத்த பந்திலே அவர் அவுட்டானார். 37 பந்துகளில் 5 பவுண்டரி 12 சிக்ஸருடன் சூர்யவன்ஷி ஆட்டமிழந்தார். 15 வயதே ஆன சூர்யவன்ஷி இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால நட்சத்திரமாக உருவெடுத்து வருகிறார். மேலும், ராஜஸ்தான் அணியை தனி ஆளாக தாங்கி வருகிறார். தொடக்க வீரராக உள்ளே வந்து மொத்த ராஜஸ்தான் அணியையும் தனது தோளில் சுமந்து இமாலய ரன்கள் குவிக்க பக்கபலமாக இருந்து வருகிறார். ஜாம்பவான்களுக்கு தலைவலி: இவர் இதுவரை 15 போட்டிகளில் ஆடி 609 ரன்கள் விளாசியுள்ளார். இதை 274 பந்துகள் மட்டுமே எதிர்கொண்டு விளாசியுள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 222.26 வைத்துள்ளார். 56 சிக்ஸர்கள், 49 பவுண்டரி விளாசியுள்ளார். 3 அரைசதங்கள் அடங்கும். மிகப்பெரிய ஜாம்பவான் பந்துவீச்சாளர்களுக்கும் சூர்யவன்ஷி ஒரு மிகப்பெரிய தலைவலியாக உருவெடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. KL Rahul: 19 வருஷத்துல முதல்முறை! கோலி, தோனி, ரோகித் செய்யாததை செய்த கே.எல்.ராகுல் - என்ன? இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

15 மணி நேரம் முன்
பேட்டிங் அவ்வளவு ஈஸி இல்லை தம்பி.. 36 பந்துகளில் சதம் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி.. சம்பவம்னா இதுதான்!
விளையாட்டு

பேட்டிங் அவ்வளவு ஈஸி இல்லை தம்பி.. 36 பந்துகளில் சதம் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி.. சம்பவம்னா இதுதான்!

Vaibhav Suryavanshi: RR Player Vaibhav Suryavanshi Scored a 36 ball century against SRH at Jaipur in IPL 2026. This becomes the 3rd fastest century in the history of IPL இந்தச் செய்தி One India ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

15 மணி நேரம் முன்
4-வது டி20 - இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு
விளையாட்டு

4-வது டி20 - இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு

தென் ஆப்பிரிக்க அணி 3-0 என்ற கணக்கில் தொடரை தன்வசப்படுத்தியுள்ளது. |4th T20I: South Africa Win Toss, Opt to Bowl First Against India இந்தச் செய்தி Dailythanthi ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

15 மணி நேரம் முன்