நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

ஜோதிடம்

  • 🔮 இன்றைய ராசி பலன்
  • 📅 இன்றைய பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திர பலன்
  • 📆 வார ராசிபலன்
  • 🗓️ மாத ராசிபலன்
  • எங்களை பற்றி
  • 📡 RSS Feed

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🏏 விளையாட்டு
  3. >ஜனநாயகன் படத்தை வெளியிட்டது படத்தின் எடிட்டரா? படத்தொகுப்பாளர் சங்கம் விளக்கம்
🏏 விளையாட்டு

ஜனநாயகன் படத்தை வெளியிட்டது படத்தின் எடிட்டரா? படத்தொகுப்பாளர் சங்கம் விளக்கம்

திங்கள், ஏப்ரல் ௧௩, ௨௦௨௬|1 நாள் முன்|ராகேஷ் தாரா|Abp News
ஜனநாயகன் படத்தை வெளியிட்டது படத்தின் எடிட்டரா? படத்தொகுப்பாளர் சங்கம் விளக்கம்

விஜயின் ஜனநாயகன் திரைப்படத்தை இணையத்தில் வெளியிட்டவர்களை கண்டுபிடிக்க படக்குழு மிகத்திவீர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஜனநாயகன் படத்தின் படத்தொகுப்பாளர் பிரதீப் இ ராகவ் படத்தை இணையத்தில் கசியவிட்டதாக குற்றசாட்டுகள் எழுந்து வரும் நிலையில் தென் இந்திய படத்தொகுப்பாளர் சங்கம் இதுகுறித்து விளக்கமளித்துள்ளது எச் வினோத் இயக்கத்தில் விஜயின் கடைசி படமாக ஜன நாயகன் திரைப்படம் உருவாகியுள்ளது. சென்சார் பிரச்சனையால் ரிலீஸூக்கு காத்திருந்த இப்படம் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி இணையத்தில் சட்டவிரோதமாக வெளியிடப்பட்டது. முதலில் ஒரு சில காட்சிகள் மட்டுமே வெளியான நிலையில் நள்ளிரவில் முழு படமும் வெளியிடப்பட்டு ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்தது. ஜனநாயகன் படத்தை கசியவிட்டது யார் ? ஜனநாயகன் படத்தை யார் வெளியிட்டது என்கிற ஒன்றே அனைவரது கேள்வியாகவும் உள்ளது. சிலர் படத்தை தணிக்கை செய்தவர்கள் தரப்பில் இருந்து படம் கசிந்ததாக கூறி வருகிறார்கள். ஆனால் சென்சார் போர் தரப்பில் இருந்து படம் கசிந்திருந்தால் வெளியான படத்தில் டைம்கோட் அல்லது சென்சார் பிரதி வாட்டர்மார்க் இடம்பெற்றிருக்கும். ஆனால் தற்போது வெளியாகியுள்ள பிரதியில் எடிட் ரெஃபரன்ஸ் என வாட்டர்மார்க் இடம்பெற்றுள்ளது. இதனால் படத்தின் படத்தொகுப்பாளர் பிரதீப் இ ராகவ் இந்த படத்தை இணையத்தில் கசியவிட்டுள்ளதாக குற்றசாட்டுகள் எழுந்தன. இதுகுறித்து தற்போது தென் இந்திய தயாரிப்பாளர் சங்கம் சார்பாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. படத்தொகுப்பாளர் மீது பழி சொல்லாதீர்கள் தென் இந்திய படத்தொகுப்பாளர் சங்க தலைவர் கோபி இன்று பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் " எடிட்டர் பிரதீப் இ ராகவ்வுக்கு இந்தக் கசிவில் எந்தத் தொடர்பும் இல்லை. தணிக்கைத் தாமதத்திற்குப் பிறகு, இயக்குனர் எச். வினோத் படத்தில் மேலும் சில திருத்தங்களை செய்யத் திட்டமிட்டிருந்தார். இதனால் ஜனவரி 14 அன்று, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இருவரின் முறையான ஒப்புதலுடன், சிஜி வேலை மற்றும் ஒலி கலவைக்காக ஒரு பிரதி அதிகாரப்பூர்வமாக ஹைதராபாத் அன்னபூர்ணா ஸ்டுடியோவுக்கு அனுப்பப்பட்டது. ஸ்டுடியோவில் போஸ்ட்-புரொடக்‌ஷன் பணிகளின் போது பல தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்தில் ஈடுபட்டிருந்ததால், இந்தக் கசிவு அங்கிருந்து ஏற்பட்டிருக்கலாம் என்ற சாத்தியக்கூறு பரிசீலிக்கப்படுகிறது. ஜனநாயகன் வெளியே கசிந்ததில் மிகவும் வருத்தப்படுகிறோம். நம்பிக்கையின் அடிப்படையிலேயே எங்கள் பணி உள்ளது. எங்கள் தரப்பில் படம் கசிய விடப்படவில்லை, படத்தின் எடிட்டர் மீது சந்தேகம் கொள்வது வருத்தமளிக்கிறது. உண்மை தெரியும் வரை யாரையும் பழி சொல்லாதீர்கள்" என தெரிவித்துள்ளார். " என்று கூறினார்

இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

மூலச் செய்தி இணைப்பு

தொடர்புடைய செய்திகள்

உலகின் பவர்ஃபுல் பாஸ்போர்ட்: அமெரிக்காவை காலடியில் வைத்திருக்கும் சிங்கப்பூர்; உலக நாடுகளுக்கே இதுதான் டான்
விளையாட்டு

உலகின் பவர்ஃபுல் பாஸ்போர்ட்: அமெரிக்காவை காலடியில் வைத்திருக்கும் சிங்கப்பூர்; உலக நாடுகளுக்கே இதுதான் டான்

பாஸ்போர்ட் என்பது வெறும் பயண ஆவணம் மட்டுமல்ல அது ஒருவரின் அடையாளம் மற்றும் குடியுரிமையின் சான்றாகும். இது வேலை, கல்வி அல்லது சுற்றுலாவுக்காக சர்வதேச எல்லைகளைக் கடக்க அனுமதிக்கிறது. இன்றைய உலகமயமாக்கப்பட்ட உலகில், ஒரு பாஸ்போர்டின் வலிமை, ஒரு நபர் எவ்வளவு எளிதாக வெளிநாடு செல்ல முடியும் என்பதைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சுற்றுலாப் பயணிகள் அட்டகாசம்: ஆடிப்போன தாய்லாந்து அரசு; டிராவலுக்கு வேட்டு வைக்க முடிவு ஆனால், எந்தெந்த நாடுகளின் பாஸ்போர்ட் மிகவும் வலிமையானவை என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? பாஸ்போர்ட் தரவரிசைகள், அந்தந்த நாட்டு மக்கள் முன்கூட்டியே விசா பெறாமல் எத்தனை நாடுகளுக்குப் பயணம் செய்யலாம் என்பதன் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. உலகின் வலிமையான பாஸ்போர்ட் மற்றும் அவை ஏன் முதலிடத்தில் உள்ளன என்பது குறித்து பார்க்கலாம். பாஸ்போர்ட் என்றால் என்ன? ஏன் அது முக்கியமானது? பாஸ்போர்ட் என்பது ஒரு அரசாங்கத்தால் அதன் குடிமக்களுக்கு வழங்கப்படும் அதிகாரப்பூர்வ ஆவணமாகும். இது உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட அடையாளமாகச் செயல்பட்டு, சர்வதேச பயணங்களைச் சாத்தியமாக்குவதுடன், ஒருவரின் குடியுரிமையையும் உறுதிப்படுத்துகிறது. இதன் முக்கியத்துவம் அடையாளப்படுத்துவதோடு முடிந்துவிடுவதில்லை. இது நீங்கள் எல்லைகளைக் கடந்து எவ்வளவு சுதந்திரமாகப் பயணம் செய்யலாம் என்பதைத் தீர்மானிக்கிறது. ஒரு வலிமையான பாஸ்போர்ட் என்றால், குறைவான பயணக் கட்டுப்பாடுகளும், அதிக நாடுகளுக்கு எளிதான அணுகலும் கிடைப்பதாகும். பாஸ்போர்ட் தரவரிசை எப்படி தீர்மானிக்கப்படுகிறது? உலகளாவிய பாஸ்போர்ட் தரவரிசைகள் வழக்கமாக 'விசா இல்லா அணுகல்' (visa-free access) அடிப்படையில் கணக்கிடப்படுகின்றன. முன்கூட்டியே விசா பெறாமல் நீங்கள் எத்தனை நாடுகளுக்குப் பயணம் செய்ய முடியுமோ, அந்த அளவிற்கு அந்த நாட்டின் பாஸ்போர்ட் உலகளவில் உயரிய இடத்தைப் பெறுகிறது. விசா இல்லாத நுழைவு வருகையின் போது விசா (Visa-on-arrival) மின்னணு பயண அங்கீகாரம் (Electronic travel authorizations ) மூலம் தீர்மானிக்கப்படுகிறது. உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல் சிங்கப்பூர் உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் தற்போது சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. இந்த நாட்டுப் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசாயின்றி சுமார் 192 முதல் 195 நாடுகளுக்கு பயணம் செய்ய முடியும். இதுவே உலகின் மிகவும் வலிமையான பாஸ்போர்ட் ஆகும். ஜப்பான் மற்றும் தென் கொரியா இரண்டாவது இடத்தைப் பகிர்ந்து கொள்ளும் ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளின் குடிமக்கள், உலகம் முழுவதும் உள்ள ஏராளமான நாடுகளுக்கு மிகவும் சுதந்திரமாகவும் எளிதாகவும் பயணம் செய்யும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். மூன்றாவது இடத்தில் ஐரோப்பிய நாடுகள் மூன்றாவது இடத்தில் டென்மார்க், லக்சம்பர்க், ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன. ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி இந்த ஐரோப்பிய நாடுகள் உலகளாவிய தரவரிசையில் தொடர்ந்து வலுவான இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன. இவை தங்கள் நாட்டு மக்களுக்கு விரிவான சர்வதேச பயண அணுகலையும், மிகக் குறைந்த பயணக் கட்டுப்பாடுகளையும் வழங்குகின்றன. ஹங்கேரி, போர்ச்சுகல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் முதல் ஐந்து இடங்களை நிறைவு செய்யும் இந்த நாடுகள், சிறந்த விசா இல்லா பயண வாய்ப்புகளை வழங்குகின்றன. இதனால் உலகப் பயணிகள் மத்தியில் இவை மிகவும் கவர்ச்சிகரமான நாடுகளாக உள்ளன. இந்த பட்டியலில் அமெரிக்கா 10-வது இடத்தில் உள்ளது.

12 மணி நேரம் முன்
கருணாசுக்கு 'நோ' ; தி.மு.க.,வினர் அடம்
விளையாட்டு

கருணாசுக்கு 'நோ' ; தி.மு.க.,வினர் அடம்

சிவகங்கை தொகுதியில், தி.மு.க., கூட்டணி சார்பில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் போட்டியிடுகிறார்.

12 மணி நேரம் முன்
Fridge-ன் Freezer-ல் ஏன் Light இல்லை? - இது தெரியாமப் போச்சே?! - 20
விளையாட்டு

Fridge-ன் Freezer-ல் ஏன் Light இல்லை? - இது தெரியாமப் போச்சே?! - 20

பிரிட்ஜில் விளக்கு இருக்கும்போது ஃப்ரீசரில் மட்டும் ஏன் இருட்டாக இருக்கிறது? இதற்குப் பின்னால் இருக்கும் அறிவியல், பொருளாதார காரணங்கள்

12 மணி நேரம் முன்