நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🏏 விளையாட்டு
  3. >பாஸ்போர்ட் வந்துவிட்டது என்று; ரொம்ப சந்தோஷப்படாதீங்க... இதுக்கு அப்பறம் தான் ஆப்பு இருக்கு! இத பண்ணுனா எங்கயும் போக முடியாது
🏏 விளையாட்டு

பாஸ்போர்ட் வந்துவிட்டது என்று; ரொம்ப சந்தோஷப்படாதீங்க... இதுக்கு அப்பறம் தான் ஆப்பு இருக்கு! இத பண்ணுனா எங்கயும் போக முடியாது

புதன், ஏப்ரல் ௮, ௨௦௨௬|17 மணி நேரம் முன்|nagalekshmi rajasekar|The Indian Express
பாஸ்போர்ட் வந்துவிட்டது என்று; ரொம்ப சந்தோஷப்படாதீங்க... இதுக்கு அப்பறம் தான் ஆப்பு இருக்கு! இத பண்ணுனா எங்கயும் போக முடியாது

வெளிநாடு செல்வது என்பது பலருக்கும் வாழ்நாள் கனவாக இருக்கும். அந்த கனவை நனவாக்கும் 'மேஜிக் சாவி' தான் பாஸ்போர்ட். இது வெறும் காகிதங்களாலான புத்தகம் அல்ல, உங்களின் சர்வதேச அடையாளம். இதை அலட்சியமாகக் கையாண்டால், விமான நிலையத்திலேயே உங்கள் பயணம் முடிந்துவிடும். பாஸ்போர்ட் விஷயத்தில் நாம் தவிர்க்க வேண்டிய முக்கிய தவறுகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். இந்திய மாணவர்களுக்கு ரெட் சிக்னல்... ஆபத்து பட்டியலுக்கு மாறிய நாடு; ஆஸ்திரேலியாவின் மாஸ்டர் பிளான் மடிக்கவோ, கிழிக்கவோ கூடாது பாஸ்போர்ட்டை பர்ஸ் போல மடிப்பது அல்லது கசக்குவது மிகப்பெரிய தவறு. நவீன பாஸ்போர்ட்டுகளில் கண்ணுக்குத் தெரியாத நுணுக்கமான சென்சார்கள் மற்றும் பாதுகாப்பு சிப்கள் (Chips) பொருத்தப்பட்டிருக்கும். நீங்கள் அதை மடிக்கும்போது அந்தத் தொழில்நுட்பம் சேதமடைய வாய்ப்புள்ளது. அப்படிச் சேதமடைந்தால், ஸ்கேனிங் இயந்திரங்கள் அதை ஏற்காது. இதனால் உங்கள் பயணம் பாதியிலேயே ரத்து செய்யப்படலாம். பின் பாக்கெட்டில் வைக்காதீர்கள் கைக்குட்டை அல்லது பர்ஸ் வைப்பது போல பாஸ்போர்ட்டை பேன்ட்டின் பின் பாக்கெட்டில் வைக்கும் பழக்கம் பலருக்கு உண்டு. நீங்கள் அமரும்போது ஏற்படும் அழுத்தத்தில் பாஸ்போர்ட் நசுங்கவோ, அதன் அட்டை கிழியவோ வாய்ப்புள்ளது. மேலும், மக்கள் நெரிசல் மிகுந்த இடங்களில் திருடர்களிடம் அதை எளிதில் பறிகொடுக்க நேரிடும். எப்போதுமே ஒரு சிறிய 'ஹேண்ட் பேக்' அல்லது பாதுகாப்பான பையில் பாஸ்போர்ட்டை வைப்பது சிறந்தது. அசால்டாக இருக்க வேண்டாம் ஹோட்டல் அறைகள், உணவக மேஜைகள் அல்லது கார் சீட்களில் பாஸ்போர்ட்டை மறந்து வைத்துவிட்டுச் செல்வது ஆபத்தானது. நீங்கள் பணத்தை எவ்வளவு பத்திரமாகப் பாதுகாப்பீர்களோ, அதே முக்கியத்துவத்தை இதற்கும் தர வேண்டும். பயணத்தின் போது தவிர மற்ற நேரங்களில் ஹோட்டல் அறையிலுள்ள 'சேஃப் லாக்கரில்' (Safe Locker) பூட்டி வைப்பது புத்திசாலித்தனமான விஷயம் ஆகும். தொலைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் அனைத்து பாதுகாப்பையும் மீறி பாஸ்போர்ட் தொலைந்துவிட்டால், பதற்றமடைய தேவையில்லை. முதலில் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து அதன் நகலைப் பெறுங்கள். அடுத்ததாக, அந்த நாட்டில் உள்ள இந்தியத் தூதரகத்தை தொடர்பு கொள்ளுங்கள். அவசரப் பயணத்திற்காக அவர்கள் 'எமர்ஜென்சி சர்டிபிகேட்' வழங்கி உங்களுக்கு உதவுவார்கள். பாஸ்போர்ட்டை பெற்றதோடு அதை பாதுகாப்பாக வைக்க வேண்டியதும் நம் கடமை ஆகும்.

இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

The Indian Express இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க

தொடர்புடைய செய்திகள்

IPL 2026: ராஜநடை போடும் ராஜஸ்தான்.. பரிதாப நிலையில் சென்னை.. ரீசெண்ட் புள்ளிகள் பட்டியல்!
விளையாட்டு

IPL 2026: ராஜநடை போடும் ராஜஸ்தான்.. பரிதாப நிலையில் சென்னை.. ரீசெண்ட் புள்ளிகள் பட்டியல்!

IPL 2026 Points Table: ஐபிஎல் 2026 புள்ளி பட்டியலில் நேற்று அதாவது 2026 ஏப்ரல் 7ம் தேதி நடைபெற்ற போட்டிக்குப் பிறகு, மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் 1 வெற்றி மற்றும் 2 தோல்விகளுடன் 2 புள்ளிகள் பெற்று 6வது இடத்தில் உள்ளது. அதன் ரன் விகிதம் -0.715 ஆகும். இந்தச் செய்தி Tv9 Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்
சின்ன பையன் ஒருத்தன்... எகிறி எகிறி அடிக்கிறான்: மும்பை இந்தியன்சை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்
விளையாட்டு

சின்ன பையன் ஒருத்தன்... எகிறி எகிறி அடிக்கிறான்: மும்பை இந்தியன்சை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

10 அணிகள் களமாடும் 19-வது ஐ.பி.எல். தொடர் மார்ச் 28-ம் தேதி முதல் கோலாகலாமாக தொடங்கியது. மே 31-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கும் இத்தொடரில், நேற்று செவ்வாய்க்கிழமை கவுகாத்தியில் நடைபெற்ற 13-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. மழையின் குறுக்கீடு காரணமாக போட்டி 11 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து, டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பவுலிங் வீசுவதாக அறிவித்தது. அதனால், முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரைசதம் விளாசிய அவர் 32 பந்துகளில் 10 பவுண்டரி, 4 சிக்சருடன் 77 ரன்கள் குவித்தார். இதேபோல், இளம் வீரரான மற்றொரு தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி 14 பந்துகளில் 1 பவுண்டரி, 5 சிக்ஸரை பறக்கவிட்டு 39 ரன்கள் எடுத்தார். இறுதியில், 11 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு ராஜஸ்தான் அணி 150 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 151 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திட மும்பை அணி களமிறங்கியது. அந்த அணியின் டாப் ஆடர் வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். குறிப்பாக, தொடக்க வீரர் ரோகித் சர்மா 5 ரன்னுக்கும், சூரியகுமார் யாதவ் 6 ரன்னுக்கும், கேப்டன் ஹர்திக் பாண்டியா 9 ரன்னுக்கும் அவுட் ஆகி பெரும் ஏமாற்றம் அளித்தனர். மிடில் ஆடரில் ஆடிய நமன் திர் மற்றும் ஷெர்பன் ரதர்ஃபோர்ட் தலா 25 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தனர். லோ-ஆடரில் ஆடிய வீரர்களும் சொற்ப ரன்னுக்கே நடையைக் கட்டினர். இறுதியில், 11 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு மும்பை அணி 123 ரன்கள் எடுத்தது. இதனால், ராஜஸ்தான் 27 ரன்கள் வித்தியாசத்தில் அபரா வெற்றி பெற்றது. ஆட்டத்தின் நாயகனாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டார். எகிறி எகிறி அடிக்கிறான்😂 pic.twitter.com/V4CQBsCgEs — Black cat (@Cat__offi) April 8, 2026 இந்த நிலையில், ராஜஸ்தானிடம் தோல்வியடைந்த மும்பை அணியை நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகிறார்கள். நீயா நானா நிகழ்ச்சியில் இளைஞர் ஒருவர் பேசி பிரபலமான வீடியோவை மார்பிங் செய்து கிண்டல் செய்து வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்
காபி பேஸ்ட் பாகிஸ்தான்.. அமெரிக்கா சொன்னதை அப்படியே திரும்ப சொன்ன ஷெரீப்? வெடித்த சர்ச்சை
விளையாட்டு

காபி பேஸ்ட் பாகிஸ்தான்.. அமெரிக்கா சொன்னதை அப்படியே திரும்ப சொன்ன ஷெரீப்? வெடித்த சர்ச்சை

Pakistan Prime Minister Shehbaz Sharif is facing trolling after users noticed a Draft label in the edit history(வளைகுடா மோதல் தொடர்பாக பாகிஸ்தான் சர்ச்சை): All things to know about Pakistan on Middle east crisis. இந்தச் செய்தி One India ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

15 மணி நேரம் முன்