RR vs MI Highlights: ஐபிஎல் 2026 சீசனின் 13வது போட்டியில் இன்று அதாவது 2026 ஏப்ரல் 7ம் தேதி கவுகாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 11 ஓவர்களாக குறைக்கப்பட்டதால், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 11 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணி 11 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், ராஜஸ்தான் அணி 27 ரன்கள் வித்தியாசத்தியில் அபார வெற்றி பெற்றது.
இந்தச் செய்தி Tv9 Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


