நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🏏 விளையாட்டு
  3. >IPL 2026 RCB vs CSK: ஆர்சிபி பிரம்மாண்ட வெற்றி! போராடிய சிஎஸ்கே மிடில் ஆர்டர்! சென்னைக்கு 3வது தோல்வி!
🏏 விளையாட்டு

IPL 2026 RCB vs CSK: ஆர்சிபி பிரம்மாண்ட வெற்றி! போராடிய சிஎஸ்கே மிடில் ஆர்டர்! சென்னைக்கு 3வது தோல்வி!

ஞாயிறு, ஏப்ரல் ௫, ௨௦௨௬|14 மணி நேரம் முன்|சுகுமாறன்|Abp News
IPL 2026 RCB vs CSK: ஆர்சிபி பிரம்மாண்ட வெற்றி! போராடிய சிஎஸ்கே மிடில் ஆர்டர்! சென்னைக்கு 3வது தோல்வி!

ஐபிஎல் தொடரில் அதிகளவு ரசிகர்கள் பட்டாளம் கொண்ட ஆர்சிபி - சென்னை அணிகள் இன்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 251 ரன்கள் டார்கெட்: தொடக்கத்தில் மைதானம் பந்துவீச்சிற்கு சற்று ஒத்துழைத்தாலும் சால்ட் 46 ரன்ள், கோலி 28 ரன்கள் எடுத்து அவுட்டாக, படிக்கல் அதிரடியாக 50 ரன்களையும், படிதார் 48 ரன்களையும் எடுக்க, டிம் டேவிட் 25 பந்துகளில் 70 ரன்கள் எடுக்க சென்னைக்கு 251 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. சரிந்த விக்கெட்டுகள்: இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணிக்கு டஃபி, புவனேஷ்வர் குமார் குடைச்சல் கொடுத்தனர். சாம்சன் 9 ரன்னில் அவுட்டாக, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆயுஷ் மாத்ரே 1 ரன்னில் அவுட்டாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 7 ரன்னில் அவுட்டானார். சர்ப்ராஸ் கான் அதிரடி: ஆனால், மறுமுனையில் சர்ப்ராஸ் கான் அதிரடியாக ஆடினார். அவர் பவுண்டரியாக விளாச சென்னை அணியின் ஸ்கோர் ஏறியது. அபாரமாக ஆடிய அவர் குருணல் பாண்ட்யா பந்தில் சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு இறங்கி வந்தபோது ஸ்டம்பிங் ஆனார். அவர் 25 பந்துகளில் 8 பவுண்டரி 2 சிக்ஸருடன் 50 ரன்கள் எடுத்து அவுட்டாக, கார்த்திக் சர்மாவும் 6 ரன்னில் அவுட்டானார். பிரசாந்த் வீர்- ஓவர்டன் போராட்டம்: அடுத்து சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஷிவம் துபே 13 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 18 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதையடுத்து, பிரசாந்த் வீர் - ஜேமி ஓவர்டன் ஜோடி சேர்ந்தது. இந்த ஜோடி தொடக்கத்தில் சற்று நிதானம் காட்டினாலும் இலக்கு பெரியது என்பதால் பின்னர் அதிரடிக்கு மாறினர். குருணல் பாண்ட்யா வீசிய ஒரே ஓவரில் பிரசாந்த் வீர் 3 பவுண்டரி. 1 சிக்ஸர் விளாசினார். ஓவர்டன் அதிரடியாக மட்டுமே ஆடினார். இந்த பார்ட்னர்ஷிப் 26 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தது. கடைசி 6 ஓவர்களில் சென்னைக்கு 94 ரன்கள் தேவைப்பட்டது. ஆர்சிபி வெற்றிக்கு 4 விக்கெட்டுகள் தேவைப்பட்டது. ஆர்சிபி அணி அழுத்தம் இல்லாமலே ஆடியது. புவனேஷ் தந்த திருப்பம்: சென்னை அணிக்கு கடைசி 5 ஓவர்களில் 86 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சிறப்பாக ஆடிய பிரசாந்த் வீரை புவனேஷ்வர்குமார் அவுட்டாக்கினார். அவர் 29 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்ஸருடன் 43 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஓவர்டன் தனி ஆளாக போராடினார். அவர் பவுண்டரிகளாக விளாசினார். ஆனாலும், கையில் விக்கெட்டுகள் இல்லாதது அவர்களுக்கு பின்னடைவை உண்டாக்கியது. சிறப்பாக ஆடிய ஓவர்டன் 16 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்ஸருடன் 37 ரன்கள் எடுத்து சுயாஷ் சர்மா பந்தில் அவுட்டானார். அதே ஓவரில் கம்போஜ் கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை அபினந்தன் வீணடித்தார். 200 ரன்கள் கடந்த சென்னை: சென்னைக்காக அதிரடி காட்ட முயற்சித்த நூரை புவனேஷ்வர் அவுட்டாக்கினார். அவர் 8 ரன்கள் எடுத்து அவுட்டானார். கம்பாேஜ் கடைசியில் சிக்ஸரும், பவுண்டரியும் விளாச சென்னை 200 ரன்களை கடந்தது. கடைசி ஒரு ஓவரில் சென்னைக்கு 47 ரன்கள் தேவைப்பட்டது. கடைசியில் ஹென்றி 2 ரன்னில் அவுட்டாக சென்னை அணி 19.4 ஓவர்களில் 204 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால், ஆர்சிபி அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆர்சிபி வெற்றி: புவனேஷ்வர்குமார் 4 ஓவர்களில் 41 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும், அபினந்தன் 3.4 ஓவர்களில் 30 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும், ஜேக்கப் டஃபி 4 ஓவர்களில் 58 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டையும், குருணல் பாண்ட்யா 3 ஓவர்களில் 31 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டையும் கைப்பற்றினர். அதேசமயம், சுயாஷ் சர்மா 4 ஓவர்களில் 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். சென்னை அணி இந்த தொடரில் ஆடிய 3வது போட்டியில் கிடைத்த 3வது தோல்வி ஆகும். ஆர்சிபி அணிக்கு இது 2வது போட்டியில் கிடைத்த 2வது வெற்றி ஆகும்.

இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

Abp News இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க

தொடர்புடைய செய்திகள்

Encroachment ; சொத்து வாங்குவதில் ஆக்கிரமிப்பு சிக்கல் ; கவனிக்க தவறினால் பெரும் இழப்பு !!
விளையாட்டு

Encroachment ; சொத்து வாங்குவதில் ஆக்கிரமிப்பு சிக்கல் ; கவனிக்க தவறினால் பெரும் இழப்பு !!

ஆக்கிரமிப்பு என்றால் என்ன ? பொதுவாக வீடு , மனை போன்ற சொத்துக்களை வாங்கும் போது ஆவணங்கள் தொடர்பான ஆய்வு மட்டும் போதாது. அந்த சொத்து ஏதாவது ஒரு வகையில் ஆக்கிரமிப்பு புகாரில் சிக்கியுள்ளதா என்பதை கவனமாக விசாரித்து அறிய வேண்டும். அரசுக்கு சொந்தமான புறம் போக்கு நிலத்தை வளைத்து பயன்படுத்தினால் மட்டும் தான் ஆக்கிரமிப்பு என்று பலரும் நினைக்கின்றனர். உண்மையில் எது ஆக்கிரமிப்பு என்பது தொடர்பான அடிப்படை விஷயங்களை சரியாக புரிந்து கொள்வது அவசியம். வணிக நோக்கத்தில் விற்பது சட்ட விரோதம் அரசு அல்லது தனியாருக்கு சொந்தமான இடத்தை அவர்களின் அனுமதி இன்றி யார் பயன்படுத்தினாலும் அது ஆக்கிரமிப்பு என்ற வரையறையின் கீழ் தான் வரும். இது போன்று ஆக்கிரமித்து பயன்படுத்தி வருவதே அடிப்படையில் குற்றம் என்று தான் பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கையில் ஆக்கிரமித்து பயன்படுத்தி வரும் இடத்தை வணிக நோக்கத்தில் அடுத்தவருக்கு விற்பது, உண்மையில் சட்டத்துக்கு புறம்பான செயலாக தான் பார்க்கப்படுகிறது. இதில் தனி நபரிடம் உள்ள சொத்தை வாங்கும் போது அதில் எப்படி ஆக்கிரமிப்பு பிரச்சனை வரும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பட்டாவில் சரியாக உள்ளதா ? பொதுவாக ஒரு நபர் பெயரில் உள்ள சொத்தை வாங்கும் போது அதற்கான பத்திரத்தில் உள்ள விபரங்கள் சரியா என்பதை 30 ஆண்டுகளுக்கான பதிவு விபரங்கள் வாயிலாக சரி பார்க்கலாம். அதே விபரங்கள் பட்டாவிலும் சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். பட்டா மற்றும் பத்திரத்தில் தனி நபர் பெயரில் முழுதும் முறையாக இருக்கும் சொத்தை மட்டுமே வாங்க வேண்டும். இத்துடன் சர்வேயர் வாயிலாக அளக்கும் போதும் அதே பரப்பளவு விபரங்கள் ஆவணங்களுடன் ஒத்து போக வேண்டும். இதில் அந்த நிலம் அமைந்துள்ள பகுதி இதற்கு முன் என்னவாக இருந்தது என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும். பொது மக்கள் பயன்பாட்டுக்கான பாதை, கால்வாய், ஓடை, நீர்நிலையாக இருந்திருந்தால், அதை வாங்குவது குற்றச் செயலுக்கு இணையானதாகும். ஆக்கிரமிப்பு இல்லை - உறுதி செய்ய வேண்டும் சில சமயங்களில் தனியாருக்கு சொந்தமான நிலத்தை அவர் அனுமதி இல்லாமல் பயன்படுத்தி வரும் நபர், அதை விற்பதற்கு முயற்சிப்பார். இவ்வாறு தங்கள் நிலத்துடன் சேர்த்து அடுத்தவர் நிலத்தின் ஒரு பகுதியையும் இணைத்து விற்பதிலும் ஆக்கிரமிப்பு பிரச்னை வரக் கூடும். எனவே வீடு, மனை போன்ற சொத்துக்கள் வாங்குவோர் அது எந்த விதத்திலும் அரசு அல்லது தனியாருக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அப்போது தான் எதிர்காலத்தில் பிரச்னைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும் என்கின்றனர் வருவாய் துறை அதிகாரிகள். இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்
CSK 0 - 3.. தொடர் தோல்விகள்! என்னதான் பிரச்சனை? ஆர்சிபி மாஸ்
விளையாட்டு

CSK 0 - 3.. தொடர் தோல்விகள்! என்னதான் பிரச்சனை? ஆர்சிபி மாஸ்

CSK vs RCB: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்றைய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்தச் செய்தி Zee News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்
விளையாட்டு
விளையாட்டு

சொத்து தகராறில் 2 பேர் கைது

புவனகிரி: புவனகிரி அருகே சொத்து பிரச்சனை விவகாரத்தில், 2 பேரை போலீசார் கைது செய்தனர். புவனகிரி அருகே இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்