IPL 2026, Rajasthan Royals (RR) vs Mumbai Indians (MI) Live Cricket Score Updates: 10 அணிகள் களமாடும் 19-வது ஐ.பி.எல். தொடர் மார்ச் 28-ம் தேதி முதல் கோலாகலாமாக தொடங்கியது. மே 31-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கும் இத்தொடரில், இன்று செவ்வாய்க்கிழமை இரவு 7:30 மணிக்கு கவுகாத்தியில் உள்ள பார்சபாரா கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் 13-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும் நடப்பு தொடரில் இதுவரை ஆடிய 2 போட்டிகளிலும் வென்று 4 புள்ளிகளுடன் ராஜஸ்தான் அணி புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கிறது. மறுபுறம், 2 போட்டிகளில் ஒன்றில் மட்டும் வென்று மும்பை அணி 6-வது இடத்தில் இருக்கிறது. அடுத்த சுற்றுக்கு முன்னேற ஆரம்ப போட்டிகளில் வெல்ல வேண்டும். அதனைக் கவனத்தில் கொண்டு இரு அணிகளும் வெற்றிக்காக போராடும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது. இரு அணிகளின் உத்தேச பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல் மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா, ரியான் ரிக்லெடன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், நமன் திர், மிட்செல் சான்ட்னர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரிட் பும்ரா, டிரெண்ட் போல்ட், மயங்க் மார்கண்டே ராஜஸ்தான் ராயல்ஸ்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, துருவ் ஜூரல், ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மியர், டொனோவன் ஃபெரீரா, ரவீந்திர ஜடேஜா, ஜோஃப்ரா ஆர்ச்சர், துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா, நந்த்ரே பர்கர், ரவி பிஷ்னோய்
IPL 2026 RR vs MI Live Score: ஈரமான மைதானம் - டாஸ் போடுவதில் தாமதம்
|15 மணி நேரம் முன்|martin jeyaraj



