ஐபிஎல் 2026-ன் முதல் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு 202 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ஐபிஎல் 2026 19வது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதி வருகின்றன, இன்றைய முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் படிதார் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன் படி சன்ரைசர்ஸ் அணிக்கு அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். சொதப்பிய தொடக்க ஜோடி கடந்த சீசனில் அதிரடி காட்டிய அபிஷேக் சர்மா (11) மற்றும் டிராவிஸ் ஹெட் (7) ஜோடி இந்த முறை ரசிகர்களுக்கு ஏமாற்றமே அளித்தது. ஆர்சிபியின் துல்லியமான பந்துவீச்சால் வெறும் 29 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து ஹைதராபாத் தத்தளித்தது. கேப்டன் இன்னிங்ஸ் ஆடிய இஷான் கிஷன் அணி இக்கட்டான நிலையில் இருந்தபோது களம் புகுந்த கேப்டன் இஷான் கிஷன், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்குத் துணையாக ஹென்ரிச் கிளாசன் நங்கூரம் போல் நிலைத்து நின்றார். கிஷன் - கிளாசன் ஜோடி: 4-வது விக்கெட்டுக்கு 53 பந்துகளில் 97 ரன்கள் சேர்த்தது. இஷான் கிஷன் 38 பந்துகளில் 8 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 80 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். கிளாசன் தன் பங்கிற்கு 22 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். கடைசி நேரத்தில் அனிகேத் வர்மா அதிரடி: மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வரிசையாக ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினாலும், 7-வது இடத்தில் வந்த அனிகேத் வர்மா ஆட்டத்தின் போக்கை மாற்றினார். வெறும் 18 பந்துகளில் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 43 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை 200 கடக்கச் செய்தார். 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களை எடுத்தது. இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்கள் தங்களது சிறப்பான பங்களிப்பை வழங்கினர். குறிப்பாக, ஜேக்கப் டஃபி மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகிய இருவரும் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி ஹைதராபாத் அணியின் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தினர்.
இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

