நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🏏 விளையாட்டு
  3. >Royal Enfield Electric Bike: ராயல் என்ஃபீல்டின் முதல் மின்சார பைக் - லேசான எடை, ரேஞ்ச், டாப் ஸ்பீட்? பேட்டரி, விலை
🏏 விளையாட்டு

Royal Enfield Electric Bike: ராயல் என்ஃபீல்டின் முதல் மின்சார பைக் - லேசான எடை, ரேஞ்ச், டாப் ஸ்பீட்? பேட்டரி, விலை

புதன், ஏப்ரல் ௮, ௨௦௨௬|16 மணி நேரம் முன்|குலசேகரன் முனிரத்தினம்|Abp News
Royal Enfield Electric Bike: ராயல் என்ஃபீல்டின் முதல் மின்சார பைக் - லேசான எடை, ரேஞ்ச், டாப் ஸ்பீட்? பேட்டரி, விலை

Royal Enfield Flying Flea C6: ராயல் என்ஃபீல்டின் ஃப்ளையிங் ஃப்ளீ C6 மோட்டார்சைக்கிள், ப்ராண்டின் மிகவும் லேசான மாடலாக இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராயல் என்ஃபீல்டின் முதல் மின்சார மோட்டார் சைக்கிள் பல மாத காத்திருப்புக்குப் பிறகு, ராயல் என்ஃபீட் நிறுவனத்தின் முதல் மின்சார மோட்டார் சைக்கிள் தொடர்பான பல்வேறு தகவல்கள் அதிகாரப்பூர்வமாக பகிரப்பட்டுள்ளன. ஃப்ளையிங் ஃப்ளீ C6 மோட்டார்சைக்கிள் முதன்முறையாக கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற EICMA எனப்படும் ஆட்டோமொபைல் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. அதைதொடர்ந்து பலமுறை இந்த வாகனம் சாலை பரிசோதனையின் போது புகைப்படங்களில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. ஃப்ளையிங் ஃப்ளீ C6 - என்ன எதிர்பார்க்கலாம்? ஃப்ளயிங் ஃப்ளீ என்பது மின்சார மோட்டார் சைக்கிள்களுக்காக ராயல் என்ஃபீல்ட் தொடங்கியுள்ள துணை நிறுவனமாகும்.அதன் சார்பில் இருந்து சந்தைப்படுத்தப்பட உள்ள முதல் மின்சார மோட்டார் சைக்கிளான C6 மாடலின் விவரங்களை வெளியிட்டு, புதிய L ப்ளாட்ஃபாமில் அந்த வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஃப்ளையிங் ஃப்ளீ C6 - பேட்டரி, ரேஞ்ச் C6 மோட்டார்சைக்கிளானது 3.91KWh லித்தியம் பேட்டரி பேட்டரி பேக்கை கொண்டு 154 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் என கூறப்படுகிறது. ஒரு ஜோடி பெர்மனண்ட் மேக்னெட் சிங்க்ரோனஸ் மோட்டாரை கொண்டு, அதிகபட்சமாக 15.4KW மற்றும் 60Nm ஆற்றலை உற்பத்தி செய்கிறது. இந்த சக்தியானது பெல்ட் ட்ரைவ் மூலம் பின்புற வீலிற்கு மாற்றப்படுகிறது. 3.7 விநாடிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் எனும் வேகத்தை எட்டும் எனவும், அதிகபட்சமாக மணிக்கு 115 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வாகனத்தில் சிட்டி, ரெயின், நெடுஞ்சாலை மற்றும் ஸ்போர்ட் என நான்கு வகையான மோட்கள் உள்ளன. இதுபோக பயனரின் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு கூடுதல் மோடும் அமைத்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வழங்கப்படும் ஆன் - போர்ட் சார்ஜர் மூலம் 2 மணி நேரம் 16 நிமிடங்களில் பூஜ்ஜியத்திலிருந்து 100 சதவிகித சார்ஜ் என்ற நிலை எட்டப்படுமாம். ஃப்ளையிங் ஃப்ளீ C6 - அளவீடுகள் 2024ம் ஆண்டு காட்சிப்படுத்தப்பட்டதை போலவே C6 மாடலின் உற்பத்தி எடிஷனும் உள்ளது. இது இரண்டாம் உலகப்போரின் போது கிர்டர் ஃபோர்க் கொண்டிருந்த ஃப்ளையிங் ஃப்ளீ மாடலின் தாக்கத்தை பெற்றுள்ளது. இன்றைய காலகட்டத்திற்கு இது மிகவும் தனித்துவமானதாக கருதப்படுகிறது. பின்புற அமைப்பு வழக்கமானதாகவே உள்ளது. முன் மற்றும் பின்பக்கம் என இரண்டு பக்கங்களிலும் மோனோஷாக் சஸ்பென்ஷன் உள்ளது. 823 மில்லி மீட்டர் இருக்கை உயரம் மற்றும் 207 மில்லி மீட்டர் உயர க்ரவுண்ட் க்ளியரன்ஸ் கொண்டுள்ளது. வாகனத்தின் மொத்த எடை வெறும் 124 கிலோ மட்டுமே ஆகும். ராயல் என்ஃபீல்ட் ப்ராண்ட் சார்பில் சந்தைக்கு வரவுள்ள மிகவும் எடைகுறைந்த மாடல் எனும் பெருமையை பெறுகிறது. ஃப்ளையிங் ஃப்ளீ C6 - அம்சங்கள் ப்ராண்டின் முதல் மின்சார மோட்டார் சைக்கிளானது இரண்டு முனைகளிலும் 19 இன்ச் வீல் மற்றும் 90-செக்‌ஷன் ட்யூப்லெஸ் டயர்களை கொண்டுள்ளது. வழக்கமானதை காட்டிலும் இது குறுகியதாக இருந்தாலும், ரேஞ்சை அதிகப்படுத்த உதவும் என கூறப்படுகிறது. 260mm முன்புற டிஸ்க் மற்றும் 220mm பின்புற டிஸ்க் மூலம் ப்ரேக்கிங் பணிகள் கையாளப்படுகின்றன. ஸ்விட்சபள் ரியர் உடன் கூடிய டூயல் சேனல் ABS வசதியும் இணைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக இதில், ட்ராக்‌ஷன் கன்ட்ரோல், கார்னெரிங் ட்ராக்‌ஷன் கன்ட்ரோல், டச் அடிப்படையிலான 3.5 இன்ச் டேஷ்போர்டானது ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி வசதியை வழங்குகிறது. ஃப்ளையிங் ஃப்ளீ C6 - விலை ராயல் என்ஃபீல்ட் நிறுவனமானது தனது முதல் ஃப்ளையிங் ஃப்ளீ விற்பனை நிலையத்தை, வரும் 10ம் தேதி பெங்களூருவில் திறக்க உள்ளது. அப்போது C6 மாடலின் விலை விவரங்கள் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. இதன் விலை ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது. உள்ளூர் சந்தையில் இந்த வாகனமானது அல்ட்ராவைலெட் F77, X47 க்ராஸ் ஓவர் ஆகியவற்றுடன் நேரடியாக மோதுகிறது. இதுபோக ரேப்டி T 30, ஏதர் 450 அபெக்ஸ்,ஓலா ரோட்ஸ்டர் ப்ரோ மற்றும் TVS X ஆகிய வாகனங்களுடனும் போட்டியிடுகிறது.

இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

Abp News இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க

தொடர்புடைய செய்திகள்

IPL 2026: ராஜநடை போடும் ராஜஸ்தான்.. பரிதாப நிலையில் சென்னை.. ரீசெண்ட் புள்ளிகள் பட்டியல்!
விளையாட்டு

IPL 2026: ராஜநடை போடும் ராஜஸ்தான்.. பரிதாப நிலையில் சென்னை.. ரீசெண்ட் புள்ளிகள் பட்டியல்!

IPL 2026 Points Table: ஐபிஎல் 2026 புள்ளி பட்டியலில் நேற்று அதாவது 2026 ஏப்ரல் 7ம் தேதி நடைபெற்ற போட்டிக்குப் பிறகு, மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் 1 வெற்றி மற்றும் 2 தோல்விகளுடன் 2 புள்ளிகள் பெற்று 6வது இடத்தில் உள்ளது. அதன் ரன் விகிதம் -0.715 ஆகும். இந்தச் செய்தி Tv9 Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்
சின்ன பையன் ஒருத்தன்... எகிறி எகிறி அடிக்கிறான்: மும்பை இந்தியன்சை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்
விளையாட்டு

சின்ன பையன் ஒருத்தன்... எகிறி எகிறி அடிக்கிறான்: மும்பை இந்தியன்சை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

10 அணிகள் களமாடும் 19-வது ஐ.பி.எல். தொடர் மார்ச் 28-ம் தேதி முதல் கோலாகலாமாக தொடங்கியது. மே 31-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கும் இத்தொடரில், நேற்று செவ்வாய்க்கிழமை கவுகாத்தியில் நடைபெற்ற 13-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. மழையின் குறுக்கீடு காரணமாக போட்டி 11 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து, டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பவுலிங் வீசுவதாக அறிவித்தது. அதனால், முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரைசதம் விளாசிய அவர் 32 பந்துகளில் 10 பவுண்டரி, 4 சிக்சருடன் 77 ரன்கள் குவித்தார். இதேபோல், இளம் வீரரான மற்றொரு தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி 14 பந்துகளில் 1 பவுண்டரி, 5 சிக்ஸரை பறக்கவிட்டு 39 ரன்கள் எடுத்தார். இறுதியில், 11 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு ராஜஸ்தான் அணி 150 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 151 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திட மும்பை அணி களமிறங்கியது. அந்த அணியின் டாப் ஆடர் வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். குறிப்பாக, தொடக்க வீரர் ரோகித் சர்மா 5 ரன்னுக்கும், சூரியகுமார் யாதவ் 6 ரன்னுக்கும், கேப்டன் ஹர்திக் பாண்டியா 9 ரன்னுக்கும் அவுட் ஆகி பெரும் ஏமாற்றம் அளித்தனர். மிடில் ஆடரில் ஆடிய நமன் திர் மற்றும் ஷெர்பன் ரதர்ஃபோர்ட் தலா 25 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தனர். லோ-ஆடரில் ஆடிய வீரர்களும் சொற்ப ரன்னுக்கே நடையைக் கட்டினர். இறுதியில், 11 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு மும்பை அணி 123 ரன்கள் எடுத்தது. இதனால், ராஜஸ்தான் 27 ரன்கள் வித்தியாசத்தில் அபரா வெற்றி பெற்றது. ஆட்டத்தின் நாயகனாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டார். எகிறி எகிறி அடிக்கிறான்😂 pic.twitter.com/V4CQBsCgEs — Black cat (@Cat__offi) April 8, 2026 இந்த நிலையில், ராஜஸ்தானிடம் தோல்வியடைந்த மும்பை அணியை நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகிறார்கள். நீயா நானா நிகழ்ச்சியில் இளைஞர் ஒருவர் பேசி பிரபலமான வீடியோவை மார்பிங் செய்து கிண்டல் செய்து வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்
காபி பேஸ்ட் பாகிஸ்தான்.. அமெரிக்கா சொன்னதை அப்படியே திரும்ப சொன்ன ஷெரீப்? வெடித்த சர்ச்சை
விளையாட்டு

காபி பேஸ்ட் பாகிஸ்தான்.. அமெரிக்கா சொன்னதை அப்படியே திரும்ப சொன்ன ஷெரீப்? வெடித்த சர்ச்சை

Pakistan Prime Minister Shehbaz Sharif is facing trolling after users noticed a Draft label in the edit history(வளைகுடா மோதல் தொடர்பாக பாகிஸ்தான் சர்ச்சை): All things to know about Pakistan on Middle east crisis. இந்தச் செய்தி One India ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்