நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >💻 தொழில்நுட்பம்
  3. >குள்ள நட்சத்திரத்தை சுற்றும் ராட்சத கோள்... வானியலாளர்களை குழப்பத்தில் ஆழ்த்திய கோள்!
💻 தொழில்நுட்பம்

குள்ள நட்சத்திரத்தை சுற்றும் ராட்சத கோள்... வானியலாளர்களை குழப்பத்தில் ஆழ்த்திய கோள்!

சனி, ஏப்ரல் ௪, ௨௦௨௬|23 மணி நேரம் முன்|meenakshi sundaram s|The Indian Express
குள்ள நட்சத்திரத்தை சுற்றும் ராட்சத கோள்... வானியலாளர்களை குழப்பத்தில் ஆழ்த்திய கோள்!

பிரபஞ்சத்தின் விதிகளை மாற்றி எழுதும் புதிய கோளை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது இங்கே இருக்கவே கூடாது என்று சொல்லப்படும் ஒரு கோள், சிறிய நட்சத்திரத்தைச் சுற்றி வருவதைக் கண்டு விஞ்ஞானிகள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். பொதுவாக, ஒரு பெரிய கோள் உருவாக வேண்டுமென்றால், அதன் தாய் நட்சத்திரமும் பெரியதாக இருக்க வேண்டும். ஆனால், TOI-5205 b என்ற இந்தக் கோள், வியாழன் (Jupiter) கிரகத்தின் அளவுள்ள ஒரு ராட்சத வாயுக்கோள். இது சுற்றி வரும் நட்சத்திரமோ சூரியனை விட மிகச்சிறிய 'M-குள்ள நட்சத்திரம்' ஒரு எலுமிச்சை பழத்தைச் சுற்றி ஒரு பெரிய தர்பூசணி பழம் சுற்றினால் எப்படி இருக்குமோ, அப்படி ஒரு அமைப்பில் இந்த நட்சத்திரமும் கோளும் உள்ளன. தற்போதைய அறிவியல் கோட்பாடுகளின்படி இவ்வளவு சிறிய நட்சத்திரத்தால் இவ்வளவு பெரிய கோளை உருவாக்கியிருக்க முடியாது. அதனால்தான் இது தடை செய்யப்பட்ட கோள் என அழைக்கப்படுகிறது. உலகின் சக்திவாய்ந்த ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலை நோக்கி மூலம் சர்வதேச ஆய்வுக் குழுவினர் இந்தக் கோளை ஆய்வு செய்தனர். இதில் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அஞ்சலி பியட் உள்ளிட்ட அறிஞர்கள் பங்கேற்றனர். ஆய்வில் இந்தக் கோளின் வளிமண்டலத்தில் கார்பன் மற்றும் ஆக்சிஜன் போன்ற கனமான தனிமங்கள் மிகக் குறைவாகவே உள்ளன. தாய் நட்சத்திரத்தைவிட கோளில் உலோகத்தன்மை குறைவாக இருப்பது இதுவே முதல்முறை. கோள் உருவாகும் போதே கனமான பொருட்கள் அதன் மையப்பகுதிக்குச் சென்றுவிட்டன. அதன் வளிமண்டலத்தை விட உட்புறம் 100 மடங்கு அதிக கனமான தனிமங்களைக் கொண்டிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. நட்சத்திரத்தின் ஒளியைப் பகுப்பாய்வு செய்தபோது, அதன் வளிமண்டலத்தில் மீத்தேன் மற்றும் ஹைட்ரஜன் சல்பைடு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இது கார்பன் அதிகமாகவும், ஆக்சிஜன் குறைவாகவும் கொண்ட ஒரு விசித்திரமான கலவையைக் கொண்டுள்ளது. நட்சத்திரங்களில் இருக்கும் கரும்புள்ளிகள் தரும் தவறான தகவல்களை சரிசெய்து, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் இந்த உண்மைகளை கண்டறிந்துள்ளனர். கோள்களின் உருவாக்கம் குறித்த நமது பாடப்புத்தகங்களை மாற்றியமைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை இந்த TOI-5205 b உரக்கச் சொல்கிறது.

இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

The Indian Express இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க

தொடர்புடைய செய்திகள்

சத்தமில்லாமல் அதிரடி ஷோக் கொடுத்த Jio, திடிரென இந்த திட்டத்தின் வேலிடிட்டி நன்மை குறைப்பு
தொழில்நுட்பம்

சத்தமில்லாமல் அதிரடி ஷோக் கொடுத்த Jio, திடிரென இந்த திட்டத்தின் வேலிடிட்டி நன்மை குறைப்பு

இந்தியாவின் மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Reliance Jio அதன் கஸ்டமர்களுக்கு சத்தமில்லாமல் அதன் ரூ,195 யில் வரும் கிரிகெட் டேட்டா பேக் திட்டத்தை மாற்றியுள்ளது அதாவது இந்த திட்டத்தில் வரும் வேலிடிட்டியை நன்மையை குறைத்துள்ளது, இந்த திட்டமானது முன்பு அதிக வெளிடிடியாக 90 நாட்களாக இருந்தது ஆனால் இப்பொழுது ஒரே அடியாக மிக மிக குறைவாக குறைத்துள்ளது மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க. Survey ✅ Thank you for completing [...] இந்தச் செய்தி Digit ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

18 மணி நேரம் முன்
தொழில்நுட்பம்
தொழில்நுட்பம்

திடீர் கனமழையால் வெப்பம் தணிந்தது

காஞ்சிபுரம்;காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று மாலை கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து, இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

18 மணி நேரம் முன்
தொழில்நுட்பம்
தொழில்நுட்பம்

'பணப்புழக்கம், சமூக ஊடகங்களில் வரும் தவறான தகவல்களை கட்டுப்படுத்துங்க' சிறப்பு தேர்தல் பார்வையாளர் பிரதாப் சிங் அறிவுரை

காஞ்சிபுரம்;பணப்புழக்கம், சமூக ஊடகங்களில் வரும் தவறான தகவல்கள் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த வேண்டும், என, இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

18 மணி நேரம் முன்