நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >💻 தொழில்நுட்பம்
  3. >கூகுள் பிக்சல் 11 சீரிஸ்: கசிந்த டிசைன், விலை விவரங்கள்; ஐபோனுக்கு போட்டியாக வருமா?
💻 தொழில்நுட்பம்

கூகுள் பிக்சல் 11 சீரிஸ்: கசிந்த டிசைன், விலை விவரங்கள்; ஐபோனுக்கு போட்டியாக வருமா?

சனி, ஏப்ரல் ௪, ௨௦௨௬|22 மணி நேரம் முன்|webdesk|The Indian Express
கூகுள் பிக்சல் 11 சீரிஸ்: கசிந்த டிசைன், விலை விவரங்கள்; ஐபோனுக்கு போட்டியாக வருமா?

பிக்சல் 11 மற்றும் பிக்சல் 11 ப்ரோ மாடல்களைத் தொடர்ந்து, தற்போது பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்.எல் மாடலின் தோற்றம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே பிக்சல் 11 ப்ரோ ஃபோல்டு விவரங்கள் வெளியான நிலையில், தற்போது இந்த சீரிஸின் முழுமையான விபரம் கிடைத்துள்ளது. இருப்பினும், கூகுள் நிறுவனம் இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்ட்ராய்டு ஹெட்லைன்ஸ் தகவல்படி, பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்.எல் முந்தைய மாடல்களைப் போலவே இருந்தாலும், கேமரா மாட்யூலில் (Camera Module) முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாடி நிறத்திற்கு பதிலாக, முற்றிலும் கருப்பு நிறத்திலான கேமரா பகுதி இதில் இடம் பெற்றுள்ளது. மேலும், போனின் பிரேம்கள் தட்டையான உலோகத்தால் வடிவமைக்கப்பட்டு பிரீமியம் தோற்றத்தைத் தரும் வகையில் இருக்கும். பின்புறம் கண்ணாடி (Glass) கொண்டு வடிவமைக்கப்பட வாய்ப்புள்ளது. பிக்சல் 11 ப்ரோ XL: 6.8 இன்ச் LTPO AMOLED திரை மற்றும் 8.5 மிமீ தடிமன் கொண்டிருக்கும். பிக்சல் 11 & 11 ப்ரோ: 6.3 இன்ச் LTPO AMOLED திரையுடன் வெளிவரலாம். பிக்சல் 11 ப்ரோ போல்ட்: 6.4 இன்ச் வெளி ஸ்கிரீன் மற்றும் 8.0 இன்ச் உட்புற ஸ்கிரீன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரிசை போன்கள் அனைத்தும் கூகுளின் புதிய டென்சர் ஜி6 சிப்செட் மூலம் இயக்கப்பட உள்ளன. இது 7-கோர் சிபியு (7-core CPU) மற்றும் மீடியாடெக் எம்90 மோடம் (MediaTek M90 modem) ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம். பாதுகாப்பு அம்சத்திற்காக புதிய 'டைட்டன் எம்3' (Titan M3) சிப் இதில் இடம் பெறக்கூடும். பிக்சல் 11 ப்ரோ XL: 16GB ரேம்+256GB ஸ்டோரேஜ். பிக்சல் 11: ஸ்டோரேஜ் விலையேற்றம் காரணமாக 12GB ரேம்+128GB ஸ்டோரேஜ் உடன் வெளியாகலாம். கேமரா குறித்து அதிக தகவல்கள் இல்லை என்றாலும், பிக்சல் 10 வரிசையில் உள்ள அதே 50MP மெயின் கேமரா, 48MP அல்ட்ராவைடு மற்றும் 48MP டெலிஃபோட்டோ லென்ஸ் அமைப்பையே கூகுள் இதிலும் தொடர வாய்ப்புள்ளது. இந்த பிக்சல் 11 சீரிஸ் போன்கள் வரும் ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்படலாம் எனத் தெரிகிறது. மெமரி விலையேற்றம் காரணமாக விலையில் சிறு மாற்றம் இருக்கலாம். முந்தைய பிக்சல் 10 சீரிஸின் விலையை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால், பிக்சல் 11 ரூ. 79,999 முதல், பிக்சல் 11 ப்ரோ ரூ. 1,09,999 முதல், பிக்சல் 11 ப்ரோ எல்ஸ் எல் ரூ. 1,24,999 முதல், பிக்சல் 11 ப்ரோ போல்ட் ஸ்மார்ட்போன் ரூ. 1,72,999 முதல் தொடங்க வாய்ப்புள்ளது.

இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

The Indian Express இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க

தொடர்புடைய செய்திகள்

சத்தமில்லாமல் அதிரடி ஷோக் கொடுத்த Jio, திடிரென இந்த திட்டத்தின் வேலிடிட்டி நன்மை குறைப்பு
தொழில்நுட்பம்

சத்தமில்லாமல் அதிரடி ஷோக் கொடுத்த Jio, திடிரென இந்த திட்டத்தின் வேலிடிட்டி நன்மை குறைப்பு

இந்தியாவின் மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Reliance Jio அதன் கஸ்டமர்களுக்கு சத்தமில்லாமல் அதன் ரூ,195 யில் வரும் கிரிகெட் டேட்டா பேக் திட்டத்தை மாற்றியுள்ளது அதாவது இந்த திட்டத்தில் வரும் வேலிடிட்டியை நன்மையை குறைத்துள்ளது, இந்த திட்டமானது முன்பு அதிக வெளிடிடியாக 90 நாட்களாக இருந்தது ஆனால் இப்பொழுது ஒரே அடியாக மிக மிக குறைவாக குறைத்துள்ளது மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க. Survey ✅ Thank you for completing [...] இந்தச் செய்தி Digit ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

18 மணி நேரம் முன்
தொழில்நுட்பம்
தொழில்நுட்பம்

திடீர் கனமழையால் வெப்பம் தணிந்தது

காஞ்சிபுரம்;காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று மாலை கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து, இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

18 மணி நேரம் முன்
தொழில்நுட்பம்
தொழில்நுட்பம்

'பணப்புழக்கம், சமூக ஊடகங்களில் வரும் தவறான தகவல்களை கட்டுப்படுத்துங்க' சிறப்பு தேர்தல் பார்வையாளர் பிரதாப் சிங் அறிவுரை

காஞ்சிபுரம்;பணப்புழக்கம், சமூக ஊடகங்களில் வரும் தவறான தகவல்கள் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த வேண்டும், என, இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

19 மணி நேரம் முன்