நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >💻 தொழில்நுட்பம்
  3. >தண்ணீரில் மிதக்கும் சனிக்கோள்... நாசா சொல்லும் ஆச்சரியமூட்டும் அறிவியல் ரகசியம்!
💻 தொழில்நுட்பம்

தண்ணீரில் மிதக்கும் சனிக்கோள்... நாசா சொல்லும் ஆச்சரியமூட்டும் அறிவியல் ரகசியம்!

வெள்ளி, ஏப்ரல் ௩, ௨௦௨௬|16 மணி நேரம் முன்|meenakshi sundaram s|The Indian Express
தண்ணீரில் மிதக்கும் சனிக்கோள்... நாசா சொல்லும் ஆச்சரியமூட்டும் அறிவியல் ரகசியம்!

விண்வெளியில் உள்ள கிரகங்கள் என்றாலே அவை மிகப்பெரிய பாறைகளாலோ அல்லது வாயுக்களாலோ ஆன மிகவும் கனமான பொருட்கள் என்றுதான் நாம் நினைப்போம். ஆனால், நம் சூரிய குடும்பத்திலேயே ஒரு கிரகம் அதன் மிகக் குறைந்த அடர்த்தியின் காரணமாக, கோட்பாட்டு ரீதியாக தண்ணீரில் மிதக்கும் தன்மை கொண்டது. அது வேறு எந்தக் கிரகமும் அல்ல; வளையங்களுக்குப் புகழ்பெற்ற சனிக்கோள்தான். தண்ணீரில் மிதக்கும் சனிக்கோள்: சாத்தியமா? நமது சூரிய குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்தபடியாக 2-வது பெரிய கிரகமாக சனிக்கோள் உள்ளது. பூமியை விட 9 மடங்கு பெரியதாக இருந்த போதிலும், இதன் அடர்த்தி வியக்கத்தக்க வகையில் மிகவும் குறைவு. நீரின் அடர்த்தி 1 கன செ.மீ.-க்கு 1 கிராம் ஆகும். ஆனால், சனிக்கோளின் சராசரி அடர்த்தியோ வெறும் 0.69 கிராம்/கன சென்டிமீட்டர் மட்டுமே. சனிக்கோளைப் பிடிக்கும் அளவிற்கு ஒரு மிகப்பெரிய 'பாத் டப்' (Bathtub) இருந்தால், அதில் சனிக்கோள் ஒரு பந்தைப் போல மிதக்கும் என நாசா (NASA) தெரிவிக்கிறது. சனி ஏன் மிதக்கிறது? - அறிவியல் காரணம் சனிக்கோள் ஒரு 'வாயு ராட்சதன்' என்றழைக்கப்படுகிறது. இது முக்கியமாக ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் போன்ற லேசான வாயுக்களால் உருவானது. பூமியைப்போல கடினமான பாறைகளால் அமையாமல், ஒரு பெரிய பலூன் போல லேசான வாயுக்களால் நிரப்பப்பட்டிருப்பதால், அதன் அளவு பெரியதாக இருந்தாலும் எடை (நிறை) குறைவாகவே உள்ளது. தண்ணீரில் ஒரு கோள் மிதக்குமா இல்லையா என்பதைத் தீர்மானிப்பது அதன் அடர்த்தி மட்டுமே. சனிக்கோள் தண்ணீரில் மிதக்கும் என்பது ஒரு கோட்பாட்டு ரீதியான உண்மை மட்டுமே. ஏனெனில், அவ்வளவு பெரிய தண்ணீர்ப்பரப்பு விண்வெளியில் கிடையாது. அப்படியே வைத்தாலும் சனிக்கோள் சிதைந்துவிடும். இருப்பினும், பாறை கோள்களான பூமி மற்றும் செவ்வாயுடன் ஒப்பிடும்போது, வாயுக்கோள்கள் எவ்வளவு விசித்திரமானவை என்பதை இந்தத் தகவல் நமக்கு உணர்த்துகிறது.

இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

The Indian Express இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க

தொடர்புடைய செய்திகள்

ஏப்ரல் 2026-ல் களமிறங்கும் டாப் ஸ்மார்ட்போன்கள்: முழு பட்டியல் இதோ
தொழில்நுட்பம்

ஏப்ரல் 2026-ல் களமிறங்கும் டாப் ஸ்மார்ட்போன்கள்: முழு பட்டியல் இதோ

Vivo, OPPO, OnePlus, Realme மற்றும் Redmi உள்ளிட்ட பல்வேறு பிராண்டுகளின் புதிய ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் வெளியாக உள்ளது. புதிய ஸ்மார்ட்போனை வாங்கத் திட்டமிடும் வாடிக்கையாளர்களுக்கு, ரூ.15,000-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் மலிவு விலை 5G போன்கள் காத்திருக்கின்றன; அதேவேளையில், 'ஃபிளாக்ஷிப்' (Flagship) பிரிவைச் சேர்ந்த அதிநவீன மற்றும் சக்திவாய்ந்த சாதனங்களும் அறிமுகமாக உள்ளன. இந்நிலையில் ஏப்ரல் 2026ல் இந்தியாவில் அறிமுகமாகவுள்ள ஸ்மார்ட்போன்களின் பட்டியல் மற்றும் அவற்றின் விவரங்களை அறிந்துகொள்ளவோம். இந்தச் செய்தி Zee News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்
ஒரே நாளில் மூன்று போன்கள் முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது கம்மி விலையில் வாங்க சரியான நேரம்
தொழில்நுட்பம்

ஒரே நாளில் மூன்று போன்கள் முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது கம்மி விலையில் வாங்க சரியான நேரம்

ஒரே நாளில் மூன்று போன்கள் முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது கம்மி விலையில் வாங்க சரியான நேரம் இந்தச் செய்தி Digit ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்
ஏழை எளியோருக்காக BSNL யின் சூப்பர் திட்டம் வெறும் ரூ,200க்கும் கம்மி விலையில் 35 நாட்கள் வேலிடிட்டி டேட்டா, காலிங்
தொழில்நுட்பம்

ஏழை எளியோருக்காக BSNL யின் சூப்பர் திட்டம் வெறும் ரூ,200க்கும் கம்மி விலையில் 35 நாட்கள் வேலிடிட்டி டேட்டா, காலிங்

ஏழை எளியோருக்காக BSNL யின் சூப்பர் திட்டம் வெறும் ரூ,200க்கும் கம்மி விலையில் 35 நாட்கள் வேலிடிட்டி டேட்டா, காலிங் இந்தச் செய்தி Digit ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

15 மணி நேரம் முன்