நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >💻 தொழில்நுட்பம்
  3. >திடீரென வானில் தோன்றிய தேவதைகள்... நிலநடுக்கத்தின் போது துருக்கியில் நிகழ்ந்த அதிசயம்!
💻 தொழில்நுட்பம்

திடீரென வானில் தோன்றிய தேவதைகள்... நிலநடுக்கத்தின் போது துருக்கியில் நிகழ்ந்த அதிசயம்!

வியாழன், ஏப்ரல் ௨, ௨௦௨௬|16 மணி நேரம் முன்|meenakshi sundaram s|The Indian Express
திடீரென வானில் தோன்றிய தேவதைகள்... நிலநடுக்கத்தின் போது துருக்கியில் நிகழ்ந்த அதிசயம்!

கடந்த மார்ச் மாத இறுதியில் துருக்கி - கிரீஸ் நாடுகளுக்கு இடைப்பட்ட ஏஜியன் கடல் பகுதியில் தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ஏப்.1 வரை நீடித்த இந்த நடுக்கங்களின் போது, வானில் செங்குத்தான ஒளித்தூண்கள் மற்றும் மின்னும் ஒளிக்கற்றைகள் தோன்றிய புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த விசித்திரமான ஒளிப்பிழம்புகள் உண்மையா? ஏதேனும் கிராபிக்ஸ் காட்சிகளா என்று மக்கள் வியந்த நிலையில், இவை ‘நிலநடுக்க ஒளி’ என்றழைக்கப்படும் ஒரு அரிய இயற்கை நிகழ்வு என விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். நிலநடுக்கம் ஏற்படுவதற்கு சற்று முன்போ, நிலநடுக்கத்தின் போதோ? அதற்குப் பின்னரோ வானில் தோன்றும் மின்னல்கள், ஒளிப்பந்துகள், நீண்ட ஒளித்தூண்களே 'நிலநடுக்க ஒளி' எனப்படுகின்றன. இவை பல நூற்றாண்டுகளாக மக்களால் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், மிக அரிதான நிலநடுக்கங்களில் மட்டுமே இவை தென்படுகின்றன. சமீபத்தில் ஏஜியன் கடல் பகுதியில் தோன்றிய இந்த ஒளிக்கற்றைகளை கண்ட சிலர், இவை ஏதோ 'தேவதைகள்' என்றும், இன்னும் சிலர் இது ஒரு 'மாய உலகம்' (Simulation) என்றும் பலவாறாகக் கற்பனை செய்து பதிவிட்டனர். Unusual beams of light were observed in the skies over Turkey and Greece during the Aegean Sea earthquake. This phenomenon is believed to occur when powerful electrical charges build up in the Earth’s crust, ionizing the surrounding air and producing visible flashes or streaks... pic.twitter.com/fgCOE6qOjo — Earth (@earthcurated) April 2, 2026 இந்த ஒளி எப்படி உருவாகிறது என்பது குறித்து இன்னும் முழுமையான புரிதல் இல்லாவிட்டாலும், விஞ்ஞானிகள் முன்வைக்கும் வலுவான விளக்கம்; பூமியின் மேலோட்டில் உள்ள பிரமாண்டமான தட்டுகள் (Tectonic Plates) ஒன்றோடுஒன்று மோதும் போது கடும் அழுத்தம் உருவாகிறது. இந்த அழுத்தம் பாறைகளில் (குவார்ட்ஸ் போன்ற தாதுக்கள் நிறைந்த பாறைகளில்) மின்சாரத்தை உருவாக்குகிறது. இது ஒரு ராட்சத இயற்கை மின்கலன் செயல்படுவதைப் போன்றது. பாறைகளில் உருவாகும் இந்த மின்சாரம், பூமியின் பிளவுகள் வழியாக மேலெழும்பி வளிமண்டலத்தை அடைகிறது. இந்த மின்சாரம் காற்றில் உள்ள மூலக்கூறுகளுடன் மோதி, அவற்றை அயனியாக்கம் (Ionization) செய்கிறது. இது நியான் விளக்குகள் எரிவதை போன்ற ஒரு 'பிளாஸ்மா' நிலையை உருவாக்கி, வானில் ஒளிக்கற்றைகளாகத் தெரிகிறது. இந்த ஒளிக்கற்றைகளில் வெப்பமோ அல்லது நெருப்போ இருக்காது. செங்குத்தான பிளவுகள் கொண்ட பகுதிகளில் இத்தகைய ஒளி நிகழ்வுகள் அடிக்கடி ஏற்படுவதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். இது மந்திரமோ அல்லது அமானுஷ்ய நிகழ்வோ அல்ல; பூமிக்கடியில் நிலவும் அபாரமான ஆற்றலின் வெளிப்பாடே ஆகும். இயற்கையின் விந்தையான ஆற்றலை நமக்கு நினைவூட்டும் இந்த நிகழ்வு, ஆய்வக சோதனைகள் மூலம் ஓரளவிற்கு நிரூபிக்கப்பட்டாலும், இது குறித்த மேலதிக ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

The Indian Express இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க

தொடர்புடைய செய்திகள்

ரூ.5,000 வரை இனி யு.பி.ஐ பின் தேவையில்லை... பிங்கர் பிரிண்ட் மூலம் பணம் அனுப்பும் வசதி!
தொழில்நுட்பம்

ரூ.5,000 வரை இனி யு.பி.ஐ பின் தேவையில்லை... பிங்கர் பிரிண்ட் மூலம் பணம் அனுப்பும் வசதி!

இந்தியாவின் முன்னணி ஃபின்டெக் (Fintech) நிறுவனமான கிரெட் (CRED) தனது பயனர்களுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனைகளை எளிதாக்கும் வகையில் புரட்சிகரமான புதியவசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி யு.பி.ஐ மூலம் பணம் அனுப்பும் போது 4 அல்லது 6 இலக்க பின் நம்பரை டைப் செய்ய வேண்டிய அவசியமில்லை; உங்க ஸ்மார்ட்போனில் உள்ள பயோமெட்ரிக் (Biometric) வசதிகளைக் கொண்டே நொடியில் பணப் பரிமாற்றம் செய்ய முடியும். தேசிய கொடுப்பனவு கழகத்துடன் (NPCI) இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய முறையில், பயனர்கள் தங்கள் மொபைலில் உள்ள பிங்கர் பிரிண்ட் (Fingerprint) பேஸ் அன்லாக் (Face Unlock) வசதியை பயன்படுத்தி பாதுகாப்பாக பணத்தை அனுப்பலாம். இது டிஜிட்டல் பரிவர்த்தனைகள் முன்பை விட வேகமாகவும், எளிமையாகவும் மாற்றுகிறது. பொது இடங்களில் பணப்பரிமாற்றம் செய்யும்போது, மற்றவர்கள் உங்க பின் நம்பரை பார்த்துவிடுவார்களோ என்ற அச்சம் இனி தேவையில்லை. அவசரத்தில் தவறான பின் நம்பரை உள்ளிடுவதால் பரிவர்த்தனை தோல்வி அடைவதைத் தடுத்து, தடையற்ற சேவையை இது உறுதி செய்கிறது. கிரெட் செயலியின் கீழ் வரும் அனைத்து முக்கிய சேவைகளுக்கும் இந்த பயோமெட்ரிக் முறை பொருந்தும். கிரெடிட் கார்டு பில் செலுத்துதல், மின்சாரம், தண்ணீர் போன்ற பயன்பாட்டுக் கட்டணங்கள் (Utility Bills), கடைகளில் உள்ள QR கோடை ஸ்கேன் செய்து பணம் செலுத்துதல் (Scan & Pay), தனிநபர்களுக்குப் பணம் அனுப்புதல், வங்கி இருப்புச் சரிபார்த்தல் (Balance Check). தற்போதைய முதற்கட்டமாக, ரூ. 5,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்த பயோமெட்ரிக் முறையைப் பயன்படுத்த முடியும். இது ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ் ஆகிய இரு இயங்குதளங்களிலும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்க மொபைலில் ஏற்கனவே உள்ள பாதுகாப்பு சென்சார்கள் மூலமே இது செயல்படுவதால் கூடுதல் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பணப் பரிவர்த்தனைகளை மேம்படுத்த என்.பி.சி.ஐ எடுத்து வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக கிரெட் நிறுவனத்திற்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுமார் 1.5 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ள கிரெட், இந்த மாற்றத்தின் மூலம் இந்திய டிஜிட்டல் பேமெண்ட் உலகில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்
AC Remote | ரிமோட் இல்லாமலேயே ஏசியை ஆன் பண்ணலாம்.. எப்படி தெரியுமா? - பலருக்கும் தெரியாத டெக்னிக்!
தொழில்நுட்பம்

AC Remote | ரிமோட் இல்லாமலேயே ஏசியை ஆன் பண்ணலாம்.. எப்படி தெரியுமா? - பலருக்கும் தெரியாத டெக்னிக்!

ரிமோட் இல்லாமல் அல்லது ரிமோட் தொலைந்துவிட்டால் உங்கள் வீட்டு ஏசியை எப்படி ஆன் செய்யலாம் என்பது குறித்து இந்த செய்திகுறிப்பில் விரிவாக பார்க்கலாம். இந்தச் செய்தி Tamil News 18 ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்
வெறும் 3 செ.மீ. மட்டுமே நீளம்... முதுகில் முட்டைகளைச் சுமக்கும் விசித்திரத் தவளை கண்டுபிடிப்பு!
தொழில்நுட்பம்

வெறும் 3 செ.மீ. மட்டுமே நீளம்... முதுகில் முட்டைகளைச் சுமக்கும் விசித்திரத் தவளை கண்டுபிடிப்பு!

தன் முதுகில் முட்டைகளை சுமந்து செல்லும் தவளையை நீங்க பார்த்ததுண்டா? தென் அமெரிக்க நாடான பெருவின் அமேசான் காடுகளில், முதுகில் 'பரிணாமப் பை' (Natural Pouch) கொண்ட புதிய வகை சிறிய தவளை இனத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பொதுவாக கங்காரு போன்ற விலங்குகள் குட்டிகளைச் சுமக்க பைகளை வைத்திருப்பதை 'மார்சுபியல்' என்பார்கள். அதே போன்ற ஒரு இனத்தைச் சேர்ந்த இந்தத் தவளைக்கு 'கேஸ்ட்ரோதேகா மிட்டாலிட்டி' (Gastrotheca mittaliiti) என்று பெயரிடப்பட்டுள்ளது. பச்சை நிறம் கொண்ட இந்த தவளைகள், வெறும் 2.7 முதல் 3.3 செ.மீ. நீளம் மட்டுமே கொண்டவை. இது இந்தத் தவளைக் குடும்பத்திலேயே மிகச் சிறிய இனங்களில் ஒன்றாகும். பெண் தவளைகள் தங்கள் முதுகில் உள்ள சிறப்புப் பையில் முட்டைகளைச் சுமக்கின்றன. அந்தப் பையிலேயே முட்டைகள் வளர்ந்து, முழுமையான தவளைக் குட்டிகளாக (Froglets) மாறிய பிறகு வெளியே வருகின்றன. நியூசிலாந்தைச் சேர்ந்த 'ஜூடாக்சா' (Zootaxa) என்ற அறிவியல் இதழில் இந்தக் கண்டுபிடிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா சர்வதேச பல்கலைக்கழகம் மற்றும் ஸ்பெயினின் செவில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து, பெருவின் அமேசானஸ் பிராந்தியத்தில் உள்ள ஈரப்பதமான மேகக் காடுகளில் (Cloud Forests) இந்தத் தவளையைக் கண்டறிந்தனர். சாதாரணத் தவளைகள் குளம் அல்லது குட்டைகளில் முட்டையிடும். ஆனால், இந்தப் புதிய இனம் தன் முதுகிலேயே முட்டைகளைச் சுமக்கிறது. உயரமான மலைப்பகுதிகளில் உள்ள மேகக் காடுகளில் நீர்நிலைகள் குறைவாக இருக்கலாம். எனவே, முட்டைகள் பாதுகாப்பாக வளர இத்தகைய பரிணாம வளர்ச்சியை இவை பெற்றுள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த மகிழ்ச்சியான கண்டுபிடிப்புக்கு மத்தியிலும், விஞ்ஞானிகள் ஒரு கவலையான எச்சரிக்கையை விடுத்துள்ளனர். புவி வெப்பமடைதல் மற்றும் காடுகளில் ஏற்படும் தீ விபத்துகளால் இந்தத் தவளைகளின் வசிப்பிடம் வேகமாக அழிந்து வருகிறது. விவசாயிகள் காடுகளை அழித்து விவசாய நிலங்களாக மாற்றுவதும் இந்த இனத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. அமேசான் காடுகளின் வியக்கத்தக்க பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு இந்தத் தவளை ஒரு சான்றாகும். புதிய உயிரினங்கள் கண்டறியப்படும் வேகத்தை விட அவை அழியும் வேகம் அதிகமாக இருப்பதால், இத்தகைய சூழல் மண்டலங்களைப் பாதுகாக்க வேண்டியது உடனடித் தேவையாக உள்ளது. இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்