நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >💻 தொழில்நுட்பம்
  3. >நிலவின் மறுபக்கத்தை படம்பிடித்த நாசா... ஆர்டெமிஸ் II வீரர்கள் கண்ட மெய்சிலிர்க்க வைக்கும் படங்கள்!
💻 தொழில்நுட்பம்

நிலவின் மறுபக்கத்தை படம்பிடித்த நாசா... ஆர்டெமிஸ் II வீரர்கள் கண்ட மெய்சிலிர்க்க வைக்கும் படங்கள்!

புதன், ஏப்ரல் ௮, ௨௦௨௬|15 மணி நேரம் முன்|meenakshi sundaram s|The Indian Express
நிலவின் மறுபக்கத்தை படம்பிடித்த நாசா... ஆர்டெமிஸ் II வீரர்கள் கண்ட மெய்சிலிர்க்க வைக்கும் படங்கள்!

50 ஆண்டுகளுக்குப் பிறகு, நிலவைச் சுற்றி மனிதர்களை அழைத்துச் செல்லும் நாசாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆர்டெமிஸ் II விண்கலம், நிலவின் மர்மமான பல பகுதிகளைப் படம்பிடித்துப் பெரும் சாதனை படைத்துள்ளது. ஓரியன் விண்கலத்தில் பயணித்த 4 விண்வெளி வீரர்கள், பூமியில் இருந்து எப்போதும் மறைந்திருக்கும் நிலவின் மறுபக்கத்தை மிக நெருக்கமாகவும் துல்லியமாகவும் ஆய்வு செய்துள்ளனர். ஏப்.7, செவ்வாய்கிழமை இரவு (இந்திய நேரப்படி சுமார் 7:10 மணி), நெகிழ்ச்சியான தருணம் நிகழ்ந்தது. நிலவின் பின் விண்கலம் சென்றபோது ஏற்பட்ட 40 நிமிட தகவல் தொடர்பு துண்டிப்பிற்குப் பிறகு, நிலவின் விளிம்பில் இருந்து பூமி மெல்லத் தோன்றியது. கருப்பு நிறப் பால்வெளியில் பூமி ஒரு நீல நிறப் பந்து போலத் தொங்கிக் கொண்டிருக்கும் இந்தக் காட்சி, இந்தப் பயணத்தின் மிகச்சிறந்த அடையாளமாகப் பதிவாகியுள்ளது. நிலவு தன்னைத்தானே சுற்றும் வேகமும், பூமியைச் சுற்றும் வேகமும் சமமாக இருப்பதால் (Tidal Locking), நம்மால் அதன் ஒரு பக்கத்தை மட்டுமே பார்க்க முடியும். ஆனால், ஏப்.7 அன்று வழங்கப்பட்ட 7 மணி நேர கால அவகாசத்தில், வீரர்கள் நிலவின் முன் மற்றும் பின்பக்கம் இரண்டையும் அதிநவீன கேமராக்கள் மூலம் படம்பிடித்தனர். நிலவின் பகல் மற்றும் இரவுப் பகுதியைப்பிரிக்கும் எல்லைக் கோட்டை வீரர்கள் ஆய்வு செய்தனர். அங்கு சூரிய ஒளி சாய்வாக விழுந்ததால், பிர்கோஃப் (Birkhoff) மற்றும் ஸ்டெபின்ஸ் (Stebbins) போன்ற பள்ளங்கள் முப்பரிமாண (3D) வடிவில் மிகத் தத்ரூபமாகக் காட்சியளித்தன. சுமார் 965 கி.மீ அகலம் கொண்ட ஓரியண்டல் பேசின் எனும் பிரம்மாண்ட பள்ளத்தையும் வீரர்கள் படம்பிடித்தனர். பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு விண்வெளிப் பாறை மோதியதால் உருவான இந்த பள்ளத்தின் விளிம்புகள், மலை அலைகளைப் போலக் காட்சியளிக்கின்றன. இந்தப் பயணத்தின் போது ஓரியண்டல் பேசின் அருகே கண்டறியப்பட்ட 2 சிறிய பள்ளங்களுக்கு, விண்கலத்தின் நினைவாக 'இண்டெக்ரிட்டி' என்றும், கமாண்டர் ரீட் வைஸ்மேனின் மறைந்த மனைவியின் நினைவாக 'கரோல்' என்றும் பெயரிடப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், விண்கலம் நிலவின் பின்னால் நகர்ந்தபோது ஏற்பட்ட 1 மணி நேர முழு சூரிய கிரகணத்தின்போது, விண்வெளி வீரர்கள் சிறப்பு கண்ணாடிகளை அணிந்து சூரியனின் வெளிப்புற வளிமண்டலமான 'கொரோனா' (Corona) பகுதியை ஆய்வு செய்தனர். இந்த ஆர்டெமிஸ் II திட்டம், எதிர்காலத்தில் மனிதர்கள் மீண்டும் நிலவில் தரையிறங்குவதற்கான ஒரு முன்னோட்டமாகும். விண்வெளி வீரர்கள் சேகரித்துள்ள இந்த உயர்தரப் புகைப்படங்கள் மற்றும் தரவுகள், நிலவின் நிலப்பரப்பை ஆழமாகப் புரிந்துகொள்ளவும் அறிவியல் ஆய்வுகளுக்கும் மிகப்பெரிய அளவில் உதவும் என்று நாசா தெரிவித்துள்ளது.

இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

The Indian Express இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க

தொடர்புடைய செய்திகள்

ஏசி விடிய, விடிய ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா..? இந்த சூப்பர் டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க!
தொழில்நுட்பம்

ஏசி விடிய, விடிய ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா..? இந்த சூப்பர் டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க!

ஏசி பயன்பாட்டில் மின்சார கட்டணத்தைக் குறைக்கும் சில வழிகள் குறித்து இந்த செய்திகுறிப்பில் பார்க்கலாம். இந்தச் செய்தி Tamil News 18 ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்
$6 டிரில்லியன் மதிப்பு, 55 பில்லியன் டன்... உலகின் மிகப்பெரிய இரும்புத் தாது படிமம் ஆஸி.யில் கண்டுபிடிப்பு!
தொழில்நுட்பம்

$6 டிரில்லியன் மதிப்பு, 55 பில்லியன் டன்... உலகின் மிகப்பெரிய இரும்புத் தாது படிமம் ஆஸி.யில் கண்டுபிடிப்பு!

மேற்கு ஆஸ்திரேலியாவின் செந்நிற மண் பரப்புக்கு அடியில், மனிதகுல வரலாற்றிலே மிகப்பெரிய இரும்புத் தாதுப் படிமம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது வெறும் தாது மட்டுமல்ல, உலகப் பொருளாதாரத்தின் திசையையே மாற்றக்கூடிய ஒரு 6 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள புதையல். ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற பில்பாரா (Pilbara) பிராந்தியத்தில் உள்ள ஹேமர்ஸ்லி (Hamersley) என்ற இடத்தில் தான் இந்த பிரம்மாண்டமான படிமம் ஒளிந்திருந்தது. பல தசாப்தங்களாக இங்கு சுரங்கத் தொழில் நடந்தாலும், நவீன தொழில்நுட்பங்கள் உதவியுடன் விஞ்ஞானிகள் மீண்டும் ஆய்வு செய்தபோதுதான் அந்த அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் காத்திருந்தது. பூமியின் ஆழத்தில் சுமார் 55 பில்லியன் மெட்ரிக் டன் இரும்புத் தாது புதைந்து கிடக்கிறது. இதில் வியப்பிற்குரிய விஷயம் என்னவென்றால், இந்த தாதுவில் இரும்பின் செறிவு 60%-க்கும் மேல் உள்ளது. அதாவது, மிக குறைந்த உழைப்பில் மிகத் தரமான இரும்பை இதிலிருந்து எடுக்க முடியும். இதுவரை இந்தப் பகுதி 2.2 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று விஞ்ஞானிகள் நம்பி வந்தனர். ஆனால், கர்டின் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் லியாம் கோர்ட்னி-டேவிஸ் அவரது குழுவினர், யூரேனியம் மற்றும் காரீயம் (Uranium-Lead) ஆய்வுகளை மேற்கொண்ட போது ஒரு உண்மை புலப்பட்டது. இந்த படிமங்கள் உண்மையில் 1.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவானவை. கண்டங்கள் நகரும் போது ஏற்பட்ட அதீத அழுத்தமே இவ்வளவு பெரிய அளவில் இரும்பு குவிய காரணமாக இருந்துள்ளது. இரும்புத் தாது ஏற்றுமதியில் ஆஸ்திரேலியா ஏற்கனவே முதலிடத்தில் உள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்பு, அடுத்த 50 முதல் 100 ஆண்டுகளுக்கு உலக சந்தையில் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்தை அசைக்க முடியாததாக மாற்றும். சீனா போன்ற இரும்புத் தாதுவை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கும், ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான ராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த புதிய கண்டுபிடிப்பின் மூலம், குறைந்த கழிவுகளுடன் கூடிய நவீன மற்றும் தூய்மையான சுரங்க முறைகளை அறிமுகப்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். நமது காலடியில் இவ்வளவு பெரிய ரகசியம் இத்தனை காலம் மறைந்திருந்தது விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தொழில்நுட்பம் வளர வளர, பூமி அன்னை இதுபோல இன்னும் எத்தனை அதிசயங்களை ஒளித்து வைத்திருக்கிறாளோ என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

15 மணி நேரம் முன்
பறக்கும் அதிரடியாக ஆபர் Motorola யின் இந்த போனில் ரூ,18,000 வரை டிஸ்கவுண்ட்
தொழில்நுட்பம்

பறக்கும் அதிரடியாக ஆபர் Motorola யின் இந்த போனில் ரூ,18,000 வரை டிஸ்கவுண்ட்

பறக்கும் அதிரடியாக ஆபர் Motorola யின் இந்த போனில் ரூ,18,000 வரை டிஸ்கவுண்ட் இந்தச் செய்தி Digit ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

15 மணி நேரம் முன்