நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >💻 தொழில்நுட்பம்
  3. >பனிக்கட்டி ஏன் தண்ணீரில் மிதக்கிறது? -63 டிகிரி குளிரில் நடந்த அதிசயம்; விஞ்ஞானிகள் சாதனை!
💻 தொழில்நுட்பம்

பனிக்கட்டி ஏன் தண்ணீரில் மிதக்கிறது? -63 டிகிரி குளிரில் நடந்த அதிசயம்; விஞ்ஞானிகள் சாதனை!

திங்கள், மார்ச் ௩௦, ௨௦௨௬|16 மணி நேரம் முன்|meenakshi sundaram s|The Indian Express
பனிக்கட்டி ஏன் தண்ணீரில் மிதக்கிறது? -63 டிகிரி குளிரில் நடந்த அதிசயம்; விஞ்ஞானிகள் சாதனை!

தண்ணீர்... நாம் தினமும் குடிப்பது, குளிப்பது என மிகவும் சாதாரணமாக நினைக்கும் ஒரு விஷயம். ஆனால், இந்த சாதாரண தண்ணீருக்குள் ஒளிந்திருக்கும் விசித்திரமான குணங்கள் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக விஞ்ஞானிகளையே குழப்பிக் கொண்டிருந்தன. தற்போது ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், தண்ணீரின் ஆழத்தில் மறைந்திருந்த அந்த மாயாஜால 'முக்கியப் புள்ளி'யை (Critical Point) கண்டுபிடித்து, அறிவியலின் மிகப்பெரிய புதிரை விடுவித்துள்ளனர்! உலகில் உள்ள மற்ற திரவங்கள் குளிர்ந்தால் சுருங்கும், அடர்த்தி அதிகமாகும். ஆனால் தண்ணீர் மட்டும் 'முரட்டுப் பையன்' போல நேர்மாறாகச் செயல்படும். தண்ணீர் 4°C வெப்பநிலையில்தான் அதிக அடர்த்தியுடன் இருக்கும். அதைவிடக் குளிர்ச்சியானால், அது சுருங்குவதற்குப் பதில் விரிவடையும். இதனால்தான் பனிக்கட்டி தண்ணீருக்குள் மூழ்காமல் ஜாலியாக மிதக்கிறது. இந்த விசித்திரமான பண்புதான் குளிர்காலங்களில் நீர்நிலைகளில் உள்ள மீன்கள் உயிர்வாழ உதவுகிறது. விஞ்ஞானிகள் நீண்டகாலமாக ஒரு தத்துவத்தை நம்பி வந்தனர். அதாவது, கடும் குளிர் நிலையில் தண்ணீருக்குள் 'கிரிட்டிக்கல் பாயிண்ட்' (Critical Point) ஒளிந்திருக்கிறது, அதுதான் இந்த எல்லா மாற்றங்களுக்கும் காரணம் என்பது அவர்களின் கணிப்பு. ஆனால் அதை இதுவரை யாராலும் நிரூபிக்க முடியவில்லை. தண்ணீரின் வெப்பநிலை 374°C ஆகவும், அழுத்தம் சாதாரண நிலையை விட 218 மடங்கு அதிகமாகவும் இருக்கும்போது, அங்கு ஒரு அதிசயம் நடக்கிறது. அந்தப் புள்ளியில் தண்ணீரை 'திரவம்' என்றும் சொல்ல முடியாது, 'நீராவி' என்றும் சொல்ல முடியாது. இரண்டும் ஒன்றிணைந்து ஒரு விசித்திரமான நிலையை அடைகின்றன. தென் கொரியாவில் உள்ள அதீத சக்தி கொண்ட எக்ஸ்-ரே லேசர்களைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் ஒரு சாகசம் செய்தனர். தண்ணீரைப் பனிக்கட்டியாக மாறவிடாமல், -63°C வரை அதீத குளிர்ச்சி (Super-chilled) செய்தனர். கண் இமைக்கும் நேரத்தை விட பல கோடி மடங்கு வேகத்தில் எக்ஸ்-ரேக்களைப் பாய்ச்சி, பனிக்கட்டி உருவாவதற்கு முன்பே தண்ணீரின் உள் கட்டமைப்பைப் படம் பிடித்தனர். தண்ணீர் ஒரே நேரத்தில் இரு வெவ்வேறு திரவ நிலைகளில் இருக்க முடியும் என்பதும், அந்த இரு நிலைகளும் கலக்கும் இடமே அந்த 'முக்கியப் புள்ளி' என்பதும் உறுதியானது. இதுவே தண்ணீரின் அனைத்து விசித்திர குணங்களுக்கும் ஊற்றுக்கண். ஆராய்ச்சியாளர்கள் இதைப் பற்றிக் கூறும்போது, அந்தப் புள்ளிக்குள் நுழைந்தால் அதிலிருந்து தப்பிக்கவே முடியாது போலத் தெரிகிறது, அது ஒரு கருந்துளை (Black Hole) போலவே செயல்படுகிறது என வியப்புடன் கூறுகின்றனர். மற்றொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், பூமியில் உயிர்கள் வாழும் சூழலில் காணப்படும் ஒரே 'சூப்பர் கிரிட்டிக்கல்' திரவம் தண்ணீர்தான். உயிரினங்கள் வாழ்வதற்கு தண்ணீர் இன்றி அமையாதது என்பதற்குப் பின்னால் ஏதோ ஒரு ரகசியம் இருக்கிறது. இந்தக் கண்டுபிடிப்பு வெறும் அறிவியல் ஆராய்ச்சி மட்டுமல்ல; இது பூமி உருவான விதம், காலநிலை மாற்றம், உயிரியல் மற்றும் வேதியியல் என அனைத்தையும் நாம் பார்க்கும் பார்வையையே மாற்றப் போகிறது.

இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

The Indian Express இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க

தொடர்புடைய செய்திகள்

மினி பஸ் கவிழ்ந்து விபத்து; மூதாட்டி பலி; 5 பேர் காயம்
தொழில்நுட்பம்

மினி பஸ் கவிழ்ந்து விபத்து; மூதாட்டி பலி; 5 பேர் காயம்

வேப்பூர்: வேப்பூர் அருகே தனியார் மினி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூதாட்டி இறந்தார். 5 பேர் இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்
பசிபிக் கடலில் 6,200 மீ. ஆழத்தில் கருப்பு முட்டைகள்... உலகையே வியக்க வைத்த புதிய கண்டுபிடிப்பு!
தொழில்நுட்பம்

பசிபிக் கடலில் 6,200 மீ. ஆழத்தில் கருப்பு முட்டைகள்... உலகையே வியக்க வைத்த புதிய கண்டுபிடிப்பு!

பசிபிக் பெருங்கடலின் 6,200 மீட்டர் ஆழத்தில், இதுவரை அறியப்படாத விசித்திரமான 'கரும்பச்சை-கருப்பு' நிற முட்டைகளை கடல் உயிரியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். பூமியின் மிகவும் கடினமான சூழலிலும் உயிர்கள் வாழ முடியும் என்பதற்கு இந்த தேடல் ஒரு முக்கிய சான்றாக அமைந்துள்ளது. வடமேற்கு பசிபிக் பகுதியில் உள்ள குரில்-கம்சட்கா அகழியில் (Kuril–Kamchatka Trench) ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டபோது, கடல் மட்டத்தில் இருந்து பல கிலோமீட்டர் ஆழத்தில் பாறைகளுடன் ஒட்டிக்கொண்டிருந்த சிறிய கருப்பு நிற உருண்டைகளைக் கண்டனர். சுமார் 3 மில்லிமீட்டர் அளவுள்ள இவை பார்ப்பதற்குச் சிறிய கருப்பு முத்துக்கள் போல இருந்தன. ஆராய்ச்சியாளர்கள் இவற்றை ஆய்வகத்திற்கு எடுத்துச் சென்று சோதித்தபோது, அவை முட்டைகள் அல்ல, உண்மையில் 'கூடுகள்' (Cocoons) என்பது தெரியவந்தது. அந்த கூடுகளைத் திறந்து பார்த்தபோது, உள்ளே பால் போன்ற கருவுணவு (Yolk) மற்றும் தட்டைப்புழுக்களின் கருக்கள் (Flatworm embryos) இருந்தன. டி.என்.ஏ சோதனையில், இவை 'பிளாட்டிஹெல்மின்தெஸ்' (Platyhelminthes) என்ற தொகுதியைச் சேர்ந்த முற்றிலும் புதிய வகை இனம் என்பது உறுதி செய்யப்பட்டது. ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஹொக்கைடோ பல்கலைக்கழகத்தின் டாக்டர் கெய்ச்சி ககுய்-டோக்கியோ பல்கலைக்கழக நிபுணர்கள் இணைந்து, அதிநவீன 'ரிமோட்' மூலம் இயங்கும் வாகனத்தைப் (ROV) பயன்படுத்தி கடலின் இருண்ட ஆழமான 'ஹாடல் மண்டலத்தில்' (Hadal zone) இந்த ஆய்வை மேற்கொண்டனர். முட்டைகள் ஏன் கருப்பு நிறத்தில் உள்ளன? இந்த முட்டைகள் கருப்பு நிறத்திலும், தோல் போன்ற கடினமான அமைப்பிலும் இருப்பதற்குப் பின்னால் முக்கிய காரணங்கள் உள்ளன. கடல் மட்டத்தை விட 600 மடங்கு அதிகமான அழுத்தத்தைத் தாங்கும் வகையில் இந்த நிறமிகளும், கடினமான தோலும் அமைந்துள்ளன. பாறைகளில் உறுதியாக ஒட்டிக்கொள்ளவும், நுண்ணுயிரிகளால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கவும் இந்த அமைப்பு உதவுகிறது. சூரிய ஒளி துளியும் படாத உறைபனி இருட்டில், கருக்கள் நிலையாக வளர இந்த நிறமிகள் உதவுகின்றன. கடலின் இவ்வளவு ஆழமான பகுதியில், அதீத அழுத்தத்திற்கு இடையே தட்டைப்புழு போன்ற சிறிய உயிரினங்கள் வாழ்வது மட்டுமல்லாமல், வெற்றிகரமாக இனப்பெருக்கமும் செய்கின்றன என்பது மிகப்பெரிய அறிவியல் மைல்கல் ஆகும். சில கடல்வாழ் உயிரினங்கள், ஆழ்கடலின் ஆழமான அகழிகளில் குடியேறுவதற்காக வியக்கத்தக்க பரிணாம மாற்றங்களை அடைந்துள்ளன என்பதை இந்த 'கருப்பு முட்டைகள்' நிரூபிக்கின்றன. இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்
ஒரு நிமிடத்தில் 12.28 மீட்டர் பயணம்... கார் ஓட்டி கின்னஸ் சாதனை படைத்த நெதர்லாந்து கோல்ட் பிஷ்!
தொழில்நுட்பம்

ஒரு நிமிடத்தில் 12.28 மீட்டர் பயணம்... கார் ஓட்டி கின்னஸ் சாதனை படைத்த நெதர்லாந்து கோல்ட் பிஷ்!

கோல்ட் பிஷ் என்றாலே தொட்டிக்குள் அமைதியாக நீந்தும் என்றுதான் நமக்குத் தெரியும். ஆனால், 'பிளப்' (Blub) என்ற ஒரு தங்கமீன், மீன்களால் இயக்கப்படும் வாகனத்தில் அதிக தூரம் பயணம் செய்து கின்னஸ் உலக சாதனை படைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இத்தாலியில் நடந்த 'லோ ஷோ டீ ரெக்கார்ட்' என்ற நிகழ்ச்சியில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. பிளப் மீன், 1 நிமிடத்தில் (60 வினாடிகள்) சுமார் 12.28 மீட்டர் (40 அடி 3.46 அங்குலம்) தூரத்திற்கு தனது வாகனத்தைச் செலுத்தியது. கின்னஸ் சாதனைக்குத் தேவையான 5 மீட்டர் இலக்கை விட இது மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. நெதர்லாந்தைச் சேர்ந்த கணினி பொறியாளர் தாமஸ் டி வுல்ஃப் என்பவருக்கு சொந்தமானது இந்த பிளப் மீன். தனது வழக்கமான பொறியியல் வேலைகளில் சலிப்பு ஏற்பட்டதால், பொழுதுபோக்கிற்காகவும் தொழில்நுட்ப ஆர்வத்திற்காகவும் இந்த விசித்திரமான காரைத் தாமஸ் உருவாக்கினார். மீன் எப்படி காரை ஓட்டியது? இந்த வாகனம் ரோபாட்டிக்ஸ், விலங்கு நடத்தை அறிவியலை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டது. 4 சக்கரங்கள் கொண்ட ஒரு அடித்தளத்தின் மேல், மீன் இருப்பதற்கான ஒரு வெளிப்படையான தண்ணீர்த் தொட்டி வைக்கப்பட்டது. தொட்டிக்குள் பிளப் நீந்துவதைக் கண்காணிக்க 'மோஷன் சென்சிங்' (Motion-sensing) கேமரா பொருத்தப்பட்டிருந்தது. மீன் தொட்டியின் எந்தப் பக்கமாக நீந்துகிறதோ, அதை உணர்ந்துகொள்ளும் சென்சார்கள் கீழே உள்ள சக்கரங்களுக்குக் கட்டளையிட்டு, காரை அதே திசையில் நகர்த்தின. இந்த சாதனை வெறும் வேடிக்கைக்காகச் செய்யப்பட்டதல்ல; நவீன ரோபாட்டிக்ஸ் துறையில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயக்கத்தைக் கண்காணிக்கும் தொழில்நுட்பம் உச்சத்தில் உள்ள இந்த நேரத்தில், ஒரு எளிய உயிரினத்தால் கூட சிக்கலான இயந்திரங்களைக் கட்டுப்படுத்த முடியும் என்பதை இது நிரூபித்துள்ளது. பொறியாளர் தாமஸ் பல மாதங்கள் செலவழித்து இந்த மென்பொருளை செம்மைப்படுத்தியுள்ளார். சாதாரண தங்கமீனை உலக சாதனையாளராக மாற்றிய இந்த விசித்திரமான கண்டுபிடிப்பு, தற்போது உலகெங்கிலும் உள்ள அறிவியல் ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்