நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >💻 தொழில்நுட்பம்
  3. >பூமிக்கு அடியில் 700 கி.மீ ஆழத்தில் 'மெகா' கடல்... பெருங்கடல்களை விட 3 மடங்கு அதிக நீர் கண்டுபிடிப்பு!
💻 தொழில்நுட்பம்

பூமிக்கு அடியில் 700 கி.மீ ஆழத்தில் 'மெகா' கடல்... பெருங்கடல்களை விட 3 மடங்கு அதிக நீர் கண்டுபிடிப்பு!

திங்கள், ஏப்ரல் ௬, ௨௦௨௬|1 நாள் முன்|meenakshi sundaram s|The Indian Express
பூமிக்கு அடியில் 700 கி.மீ ஆழத்தில் 'மெகா' கடல்... பெருங்கடல்களை விட 3 மடங்கு அதிக நீர் கண்டுபிடிப்பு!

பூமியின் மேற்பரப்பில் உள்ள பசிபிக், அட்லாண்டிக் என அனைத்துப் பெருங்கடல்களையும் ஒன்றாக இணைத்தால் எவ்வளவு நீர் இருக்குமோ, அதைவிட 3 மடங்கு அதிக நீர் பூமிக்கு அடியில் ஒளிந்திருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம், இது கற்பனையல்ல; விஞ்ஞானிகள் ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ள உண்மை. பூமியின் தரைப்பகுதியில் இருந்து சுமார் 700 கிலோமீட்டர் ஆழத்தில், அதாவது மேலடுக்கிற்கும் கீழடுக்கிற்கும் இடைப்பட்ட பகுதியில் இந்த நீர் தேக்கம் உள்ளது. ஆனால், இது நாம் பார்ப்பது போன்ற திரவ நிலையிலான கடல் அல்ல. 'ரிங்வுடைட்' எனப்படும் ஒருவகை நீல நிறத் தாதுப் பாறைக்குள், ஒரு ஸ்பான்ஞ் (Sponge) போல இந்த நீர் மூலக்கூறுகள் சிக்கியுள்ளன. புவி இயற்பியலாளர் ஸ்டீவன் ஜேக்கப்சன், இந்தப் பாறைகள் ஏதோ 'வியர்ப்பது' போல நீரைத் தங்களுக்குள் வைத்துள்ளதாகக் குறிப்பிடுகிறார். இந்த பிரம்மாண்ட நீர் தேக்கத்தைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் ஒரு விந்தையான முறையைப் பயன்படுத்தினர். அமெரிக்கா முழுவதும் 2,000-க்கும் மேற்பட்ட கருவிகளை வைத்து, 500 நிலநடுக்கங்களின் போது உருவான அலைகளை ஆய்வு செய்தனர். அந்த அலைகள் 700 கி.மீ ஆழத்தில் செல்லும்போது வேகம் குறைந்தன. ஈரப்பதமான பாறைகள் வழியாகச் செல்லும்போதுதான் அலைகளின் வேகம் குறையும் என்பதால், அங்கு நீர் இருப்பது உறுதியானது. ஆராய்ச்சியாளர் கிரஹாம் பியர்சன், எரிமலை வெடிப்பின் போது பூமியின் ஆழத்திலிருந்து மேலே வந்த ஒரு வைரத்தை ஆய்வு செய்தார். அந்த வைரத்திற்குள் இருந்த மிகச்சிறிய 'ரிங்வுடைட்' துகளில் நீர் இருப்பதைக் கண்டறிந்தார். இதுவே பூமிக்கடியில் நீர் இருப்பதற்கான முதல் நேரடி ஆதாரமாகும். இந்த நீர் தேக்கம் மட்டும் இல்லையென்றால், இன்று பூமி எப்படி இருக்கும் தெரியுமா? இந்த நீர் அனைத்தும் மேலே வந்திருந்தால், இமயமலை போன்ற உயரமான சிகரங்கள் மட்டும்தான் நிலமாகத் தெரிந்திருக்கும். மற்ற அனைத்தும் கடலுக்கு அடியில் போயிருக்கும்.பல மில்லியன் ஆண்டுகளாகப் பெருங்கடல்களின் நீர் மட்டம் மாறாமல் இருப்பதற்குக் காரணம், இந்த நிலத்தடி நீர் தேக்கம் ஒரு சேமிப்புக் கிடங்கு போலச் செயல்படுவதுதான். இதுவரை, பூமியில் உள்ள நீர் விண்கற்கள் (Comets) மோதியதால் வந்தது என்றுதான் நாம் நம்பிக் கொண்டிருந்தோம். ஆனால், இந்தப் புதிய கண்டுபிடிப்பு, பூமியின் உட்பகுதியில் இருந்தே நீர் மெல்ல மெல்ல கசிந்து பெருங்கடல்கள் உருவாயின என்ற கருத்தை வலுப்படுத்துகிறது. நம் காலடியில் 700 கி.மீ ஆழத்தில் ஒரு பிரம்மாண்டமான நீர் உலகம் அமைதியாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அதுதான் நாம் இன்று நிலத்தில் நடப்பதையும், கடல் மட்டம் சீராக இருப்பதையும் உறுதி செய்கிறது. ஆதாரம்: Science Journal & New Scientist.

இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

The Indian Express இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க

தொடர்புடைய செய்திகள்

தொழில்நுட்பம்
தொழில்நுட்பம்

காஞ்சியில் ஒரு மணி நேரம் மழை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று பகல் 12:00 மணியளவில் ஒரு மணி நேரம் கனமழை இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

16 மணி நேரம் முன்
தொழில்நுட்பம்
தொழில்நுட்பம்

22 நாட்களில் ரூ.69.78 லட்சம் ;தேர்தல் பறக்கும் படை பறிமுதல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தலையொட்டி, கடந்த 22 நாட்களில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

17 மணி நேரம் முன்
சவுண்ட்பாரில் கெத்து JBL தான் பக்கா மாஸ் Dolby Digital சப்போர்டுடன் வரும் இந்த Soundbar யில் அதிரடியாக ரூ,11,000 டிஸ்கவுண்ட்
தொழில்நுட்பம்

சவுண்ட்பாரில் கெத்து JBL தான் பக்கா மாஸ் Dolby Digital சப்போர்டுடன் வரும் இந்த Soundbar யில் அதிரடியாக ரூ,11,000 டிஸ்கவுண்ட்

சவுண்ட்பாரில் கெத்து JBL தான் பக்கா மாஸ் Dolby Digital சப்போர்டுடன் வரும் இந்த Soundbar யில் அதிரடியாக ரூ,11,000 டிஸ்கவுண்ட் இந்தச் செய்தி Digit ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

21 மணி நேரம் முன்