நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >💻 தொழில்நுட்பம்
  3. >2,000 கி.மீ நீளத்திற்கு பிரமாண்ட மணல் புயல்... சஹாரா பாலைவனத்தில் என்ன நடக்கிறது?
💻 தொழில்நுட்பம்

2,000 கி.மீ நீளத்திற்கு பிரமாண்ட மணல் புயல்... சஹாரா பாலைவனத்தில் என்ன நடக்கிறது?

செவ்வாய், மார்ச் ௩௧, ௨௦௨௬|17 மணி நேரம் முன்|meenakshi sundaram s|The Indian Express
2,000 கி.மீ நீளத்திற்கு பிரமாண்ட மணல் புயல்... சஹாரா பாலைவனத்தில் என்ன நடக்கிறது?

இயற்கையின் சீற்றம் சில நேரங்களில் கற்பனைக்கும் எட்டாத வகையில் இருக்கும். அதற்குச் சாட்சியாக, தற்போது உலகின் மிகப்பெரிய வெப்பப் பாலைவனமான சஹாராவில் சுமார் 2,000 கி.மீ. நீளத்திற்கு ஒரு பிரம்மாண்ட மணல் சுவர் உருவெடுத்துள்ளது. இது விண்வெளியில் இருந்து பார்த்தால் பூமியின் ஒரு பகுதியைத் திரையிட்டு மறைப்பது போலக் காட்சி அளிக்கிறது. அல்ஜீரியாவின் மேல் உருவான சக்திவாய்ந்த குறைந்த காற்றழுத்த மண்டலம், சஹாரா பாலைவனத்தை ஒரு போர்க்களமாக மாற்றியுள்ளது. சுமார் 1,200 மைல்கள் (2,000 கி.மீ) நீளமுள்ள அடர்த்தியான மணல் மூட்டம், ஒரு ராட்சத சுவரைப் போல பாலைவனப் பரப்பு முழுவதும் செங்குத்தாக எழுந்து நிற்கிறது. This is actually insane. A MASSIVE dust storm, over 700 miles long, is currently sweeping across northeastern Africa. What a stunning satellite view. pic.twitter.com/zAW4OZdMyg — Michael Ferragamo (@FerragamoWx) March 30, 2026 இந்த மாபெரும் மணல் புயல், மணிக்கு 48 கி.மீ வேகத்தில் தென்மேற்கு திசையை நோக்கி ஆக்ரோஷமாக நகர்ந்து வருகிறது. வளிமண்டலத்தில் டன் கணக்கிலான மணல் துகள்களை வாரி இறைக்கும் இந்நிகழ்வை வானிலை ஆய்வாளர்கள் 'ஹபூப்' என்றழைக்கின்றனர். சஹாராவில் இது போன்ற புயல்கள் சகஜம் என்றாலும், இவ்வளவு பெரிய அளவிலும் தீவிரத்திலும் புயல் உருவானது நிபுணர்களையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வானையே மறைக்கும் இந்த மணல் திரை சாதாரணமானது அல்ல. இந்தப் புயல் கடக்கும் இடங்களில் பார்வைத் திறன் (Visibility) முற்றிலுமாகப் பூஜ்ஜியத்திற்குச் செல்லும். இது சாலை மற்றும் விமானப் போக்குவரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாகும். காற்றில் கலக்கும் மிக நுண்ணிய துகள்கள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணிக்கும் வல்லமை கொண்டவை. இவை மக்களின் சுவாசக் குழாய்களைப் பாதித்து கடுமையான உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும். இந்த விசித்திரமான புயலில் ஒரு நன்மையும் ஒளிந்திருக்கிறது. A low pressure storm system over Algeria is fanning a fierce, ~1,200 mile-long dust storm through the Sahara Desert right now. This solid, roiling wall of atmospheric sand is racing to the southwest at ~30 mph. pic.twitter.com/HSxqaDKlaE — Backpirch Weather (@BackpirchCrew) March 30, 2026 சஹாராவிலிருந்து கிளம்பும் இந்த மணல் துகள்கள் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து சென்று அமேசான் மழைக்காடுகளில் போய் விழும். அந்த மணலில் உள்ள இரும்பு மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள், அமேசான் காடுகள் செழிப்பாக வளரத் தேவையான இயற்கை உரமாகச் செயல்படுகின்றன. இது இயற்கையின் ஒரு ஆச்சரியமான சுழற்சி. தற்போது மேம்பட்ட செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம் இந்த மணல் சுவரின் நகர்வுகளை விஞ்ஞானிகள் வினாடிக்கு வினாடி கவனித்து வருகின்றனர். இந்த பிரம்மாண்ட மணல் படலம் தனது தென்மேற்கு நோக்கிய பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பதால், அப்பகுதி மக்கள் மற்றும் அதிகாரிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த மணல் புயலின் நீளம் (2,000 கி.மீ), ஏறத்தாழ இந்தியாவின் வடக்கிலிருந்து தெற்கு வரையிலான தூரத்தில் பாதிக்கும் மேலானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

The Indian Express இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க

தொடர்புடைய செய்திகள்

கூட்டுறவு சங்க இடத்தை கைப்பற்ற முயற்சி: போலீஸ் ஸ்டேஷனில் திரண்ட மக்கள்
தொழில்நுட்பம்

கூட்டுறவு சங்க இடத்தை கைப்பற்ற முயற்சி: போலீஸ் ஸ்டேஷனில் திரண்ட மக்கள்

அன்னூர்: கூட்டுறவு சங்க இடத்தில் கம்பி வேலி அமைக்க முயற்சித்ததை கண்டித்து கிராம மக்கள் போலீஸ் ஸ்டேஷனை இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்
Realme 16 5G: ஏப்ரல் 2 அறிமுகத்திற்கு முன் கசிந்த முக்கிய தகவல்.... இதுதான் விலை
தொழில்நுட்பம்

Realme 16 5G: ஏப்ரல் 2 அறிமுகத்திற்கு முன் கசிந்த முக்கிய தகவல்.... இதுதான் விலை

Realme 16 5G Launch: தனித்துவமான 'Selfie Mirror' வடிவமைப்புடன், இந்த செக்மெண்டில் ஒரு புதுமையான அம்சத்தை அறிமுகப்படுத்தும் வாக்குறுதியுடன் வரும் Realme 16 மொபைல் குறித்த தகவல்களை, நிறுவனம் தொடர்ந்து டீஸ் செய்து வருகிறது. இந்தச் செய்தி Zee News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்
தொழில்நுட்பம்
தொழில்நுட்பம்

சிங்கப்பூர்-துபாய்: மேலும் பல எஸ்ஐஏ விமானச் சேவைகள் ரத்து

மத்திய கிழக்குப் போர் காரணமாக வளைகுடா நாடுகளுக்கு இயக்கவிருந்த மேலும் பல விமானங்களை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நிறுவனங்கள் ரத்துசெய்துள்ளது. இந்தச் செய்தி Tamil Murasu ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்