நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

ஜோதிடம்

  • 🔮 இன்றைய ராசி பலன்
  • 📅 இன்றைய பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திர பலன்
  • 📆 வார ராசிபலன்
  • 🗓️ மாத ராசிபலன்
  • எங்களை பற்றி
  • 📡 RSS Feed

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >💻 தொழில்நுட்பம்
  3. >44 டிகிரி வரை எகிறி சுட்டெரிக்க போகும் வெப்பம்... அனல் காற்று வீசும்; ஐ.எம்.டி எச்சரிக்கை!
💻 தொழில்நுட்பம்

44 டிகிரி வரை எகிறி சுட்டெரிக்க போகும் வெப்பம்... அனல் காற்று வீசும்; ஐ.எம்.டி எச்சரிக்கை!

திங்கள், ஏப்ரல் ௧௩, ௨௦௨௬|1 நாள் முன்|meenakshi sundaram s|The Indian Express
44 டிகிரி வரை எகிறி சுட்டெரிக்க போகும் வெப்பம்... அனல் காற்று வீசும்; ஐ.எம்.டி எச்சரிக்கை!

ஏப்ரல் தொடக்கத்தில் பெய்த மழையும், நிலவிய இதமான குளிர்ச்சியும் ஒரு முடிவுக்கு வரப்போகிறது. வட இந்தியா இப்போது இந்த ஆண்டின் முதல் வெப்ப அலையை எதிர்கொள்ளத் தயாராகிவிட்டது. திடீரென உயரப்போகும் இந்த வெப்பம், இயல்பை விட பல மடங்கு அதிகமாக இருக்கும் என எச்சரிக்கிறது வானிலை ஆய்வு மையம். வரும் புதன் அல்லது வியாழக்கிழமையே டெல்லி 40°C எனும் மைல்கல்லைத் தொட்டுவிடும். வார இறுதியில் இது 42°C வரை உயர்ந்து மக்களை வியர்க்க வைக்கப்போகிறது. ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேச மாநிலங்களில் வெயில் 41°C முதல் 44°C வரை கொளுத்தப் போகிறது. இது இயல்பை விட 4 முதல் 7 டிகிரி வரை அதிகம். வெப்ப அலை (Heatwave) என்றால் என்ன? இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, சமவெளிப் பகுதிகளில் ஒரு வானிலை நிலையத்தில் அதிகபட்ச வெப்பநிலை குறைந்தது 40°C-ஐ எட்டும்போது வெப்ப அலை நிலவுவதாகக் கருதப்படும். மேலும், இயல்பான வெப்பநிலையை விட 4.5°C முதல் 6.4°C வரை அதிகமாக இருந்தால். இயல்பை விட 6.4°C-க்கு மேல் அதிகமாக இருந்தால் கடும் வெப்ப அலை, அதிகபட்ச வெப்பநிலை 45°C-ஐத் தொட்டால் அது வெப்ப அலை என்றும், 47°C அல்லது அதற்கு மேல் சென்றால் அது கடும் வெப்ப அலை என்றும் அழைக்கப்படும். திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன? மேற்கு இடையூறுகளால் ஏற்பட்ட குளிர்ச்சியான சூழல் முடிவுக்கு வந்து, வானம் மேகமூட்டமின்றித் தெளிவாகக் காணப்படுவதால் இந்த வெப்ப உயர்வு ஏற்படுகிறது. மார்ச் மாதத்திலும்கூட, டெல்லியில் தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு முதல் வாரத்திலேயே வெப்பநிலை 35°C-ஐக் கடந்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் முதல் ஜூன் வரை வெயில் சாதாரணமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தாலும், வறண்ட வானிலை காரணமாக இப்போதே அனல் வீசத் தொடங்கிவிட்டது. வெப்பத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ள, தாகம் இல்லாவிட்டாலும் அடிக்கடி தண்ணீர் குடியுங்கள். நீர்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளுங்க. மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெயில் மிக உக்கிரமாக இருக்கும். இந்த நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்கவும். குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளை வெயில் எளிதில் பாதிக்கும் என்பதால் அவர்கள் மீது தனி கவனம் செலுத்துங்க. வானிலை செய்திகளை அவ்வப்போது கவனித்து அதற்கேற்ப உங்க பயணங்களைத் திட்டமிடுங்க. கோடைக்காலம் தொடங்கி விட்டது, பாதுகாப்பாக இருப்போம்.

இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

மூலச் செய்தி இணைப்பு

தொடர்புடைய செய்திகள்

ஒரே நேர்க்கோட்டில் புதன், செவ்வாய், சனி... இந்த வாரம் அரங்கேறும் வானியல் அதிசயம்!
தொழில்நுட்பம்

ஒரே நேர்க்கோட்டில் புதன், செவ்வாய், சனி... இந்த வாரம் அரங்கேறும் வானியல் அதிசயம்!

புதன் (Mercury), செவ்வாய் (Mars), சனி (Saturn) மற்றும் நெப்டியூன் (Neptune) ஆகிய 4 கோள்களும் இந்த வாரம் வானில் ஒரே நேர்க்கோட்டில் தோன்றி அணிவகுக்க உள்ளன. வானியலாளர்கள் இதனை 'கோள்களின் அணிவகுப்பு' (Planetary Alignment) என்றழைக்கின்றனர். எப்போது பார்க்கலாம்? ஏப்.16 முதல் 23 வரை இந்த அணிவகுப்பைக் காணலாம். ஏப்ரல் 18 முதல் 20 வரையிலான அதிகாலை நேரங்கள் இதை பார்க்க சிறந்தது. ஏப்.20 அன்று சனி, செவ்வாய், புதன் ஆகிய 3 கோள்களும் மிக நெருக்கமாகத் தோன்றும். உங்க கையை நீட்டி 3 விரல்களால் இந்த 3 கோள்களையும் மறைத்துவிட முடியும் அந்த அளவிற்கு அவை நெருக்கமாகத் தெரியும். கோள்களின் அணிவகுப்பு என்றால் என்ன? சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் அனைத்தும் சூரியனை ஒரே தட்டையான தளத்தில் சுற்றி வருகின்றன. பூமியிலிருந்து பார்க்கும்போது, பல கோள்கள் சூரியனின் ஒரே பக்கத்தில் வரும்போது, அவை வானின் ஒரு பகுதியில் கூட்டமாகத் தெரிகின்றன. இதுவே கோள்களின் அணிவகுப்பு எனப்படுகிறது. விண்வெளியில் இந்த கோள்கள் உண்மையில் நேர்க்கோட்டில் இருப்பதில்லை. அவை ஒன்றுக்கொன்று பல மில்லியன் கி.மீ. தொலைவிலேயே உள்ளன. பூமியிலிருந்து பார்க்கும்போது மட்டுமே அவை நெருக்கமாகத் தெரிகின்றன. இத்தகைய நிகழ்வுகளால் பூமிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. இந்தியாவில் இதைக் காண முடியுமா? ஆம், இந்தியாவிலிருந்தும் அதிசயத்தை காணலாம். ஆனால், இடத்திற்கு இடம் வானிலை மற்றும் நேரம் மாறுபடும். உள்ளூர் சூரிய உதயத்திற்கு சுமார் 30 நிமிடங்களுக்கு முன்பாகப் பார்க்கத் தொடங்க வேண்டும். இந்திய நேரப்படி அதிகாலை 5:00 மணி முதல் 5:50 மணி வரை இது சரியான நேரமாகும். கொல்கத்தாவில் சூரியன் முதலில் உதிப்பதால் அங்கிருப்பவர்கள் முதலில் பார்க்கலாம். பின்னர் சென்னை, போபால், டெல்லி மற்றும் இறுதியாக மும்பையில் இருப்பவர்கள் இதைக் காணலாம். டெல்லி போன்ற வட இந்திய நகரங்களை விட சென்னை, பெங்களூரு, ஐதராபாத், கொச்சி போன்ற தென்னிந்திய நகரங்களில் கோள்கள் வானில் சற்று உயரமாகத் தெரியும் என்பதால் இங்கிருந்து பார்ப்பது எளிது. எப்படி அடையாளம் காண்பது? புதன் (Mercury), மிகவும் பிரகாசமாகத் தெரியும் என்பதால் எளிதில் அடையாளம் காணலாம். சனி (Saturn), வானில் சற்று தாழ்வாகத் தெரியும். சூரிய உதயத்திற்கு முந்தைய வெளிச்சத்தில் இது மறைந்துபோக வாய்ப்புள்ளது. மற்ற மூன்றையும் வெறும் கண்ணால் பார்க்கலாம். ஆனால், மிக மங்கலாக இருக்கும் நெப்டியூனைப் பார்க்க பைனாகுலர் அல்லது சிறிய தொலைநோக்கி (Telescope) தேவைப்படும். உங்களால் அதிகாலை 5 மணிக்கு எழ முடியாவிட்டால், ஏப்.18 மாலை மற்றொரு அழகான நிகழ்வு காத்திருக்கிறது. அன்று சூரியன் மறைந்த பிறகு மேற்கு வானில் பிறை நிலவும், வீனஸ் (Venus) கோளும் அருகருகே தோன்றும். இந்திய நேரப்படி இரவு 7:30 மணி அளவில் மேற்கு திசையைப் பார்த்தால் இந்த அழகிய காட்சியைக் காணலாம். மேகமூட்டம் அல்லது தூசி இல்லாத தெளிவான வானம் அமைந்தால், இந்த வாரம் வானியல் ஆர்வலர்களுக்குக் கொண்டாட்டம்தான். இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

1 நாள் முன்
ஒருங்கிணைந்த கலெக்டர்அலுவலக இடம் ஆக்கிரமிப்பு
தொழில்நுட்பம்

ஒருங்கிணைந்த கலெக்டர்அலுவலக இடம் ஆக்கிரமிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த கலெக்டர் அலுவலக வளாகத்தில் குடியிருப்பாளர்கள் அகற்றப்படுவதற்கு ஆணையிட்டுள்ளார் சிவகங்கை கலெக்டர் பொற்கொடி. இதற்கு முன்னர் பலர் விலக்குப் படுத்தப்பட்டாலும் இப்போது அதுவும் காலாவதியாகி விட்டது. இப்போது நில அளக்கல் மற்றும் பிற விசயங்களின் பொருட்டு அப்பகுதிக்கு அனுப்பப்படும் அலுவலர்கள் மற்றும் கலெக்டர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு இடம் தேவைப்படுகிறது. அப்பகுதியில் குடியிருப்பாளர்களை மன்னித்து அவர்களின் குடியிருப்பை தொடர அனுமதிக்கும் பொருட்டு பொற்கொடியின் ஆணையை மதவழிப்பாளர்கள் நிறைவேற்றியுள்ளனர். சிவகங்கையில் இந்நிலை நீடித்து வருவதற்கு பொ இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

1 நாள் முன்
Vivo X300 Ultra: 200MP கேமரா.. 7000mAh பேட்டரி.. இந்திய லான்ச் தேதி லீக்!
தொழில்நுட்பம்

Vivo X300 Ultra: 200MP கேமரா.. 7000mAh பேட்டரி.. இந்திய லான்ச் தேதி லீக்!

சில நாட்களுக்கு முன்பே விவோ எக்ஸ் 300 யூல்ட்ரா (Vivo X300 Ultra) போனின் இந்திய வெளியீட்டுத் தேதி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த போன் அடுத்த மாதத்தின் தொடக்கத்திலேயே இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவோ எக்ஸ் 300 யூல்ட்ரா (Vivo X300 Ultra) போனை இந்தியச் சந்தையிலும் அறிமுகப்படுத்த அந்நிறுவனம் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த போன் குறித்த சில புதிய தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன. விவோ எக்ஸ் 300 யூல்ட்ரா (Vivo X300 Ultra) போனில் 200MP கேமரா மற்றும் 7000mAh போட்டரி ஆகியவற்றை முன்னிலைப் படுத்தியுள்ளது. இந்த போனின் இந்திய வெளியீட்டுத் தேதி குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன; அதன்படி இந்தச் செய்தி Zee News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

1 நாள் முன்