நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >💻 தொழில்நுட்பம்
  3. >6,000 எம்.ஏ.எச் பேட்டரி, ஆன்ட்ராய்டு 16... ஏ.ஐ+ பல்ஸ் 2 ஸ்மார்ட்போனின் டாப் 5 சிறப்பம்சங்கள்!
💻 தொழில்நுட்பம்

6,000 எம்.ஏ.எச் பேட்டரி, ஆன்ட்ராய்டு 16... ஏ.ஐ+ பல்ஸ் 2 ஸ்மார்ட்போனின் டாப் 5 சிறப்பம்சங்கள்!

திங்கள், மார்ச் ௩௦, ௨௦௨௬|14 மணி நேரம் முன்|webdesk|The Indian Express
6,000 எம்.ஏ.எச் பேட்டரி, ஆன்ட்ராய்டு 16... ஏ.ஐ+ பல்ஸ் 2 ஸ்மார்ட்போனின் டாப் 5 சிறப்பம்சங்கள்!

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலையில் அதிரடி மாற்றங்களைச் செய்து வரும் ஏஐ+ ஸ்மார்ட்போன் நிறுவனம், தனது புதிய தயாரிப்பான 'ஏ.ஐ+ பல்ஸ் 2' மாடலை அறிமுகம் செய்துள்ளது. "நம்ம ஊரு தயாரிப்பு" என்ற பெருமையுடன் வெளிவந்துள்ள இந்த ஸ்மார்ட்போன், மிகக் குறைந்த விலையில் உலகத்தையே வியக்க வைக்கும் அம்சங்களைக் கொண்டுள்ளது. பொதுவாக பட்ஜெட் ரக போன்களில் 60Hz அல்லது 90Hz டிஸ்ப்ளே மட்டுமே வழங்கப்படும். ஆனால், ஏ.ஐ+ பல்ஸ் 2 மாடலில் 6.75-இன்ச் HD+ IPS LCD ஸ்கிரீன் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய சிறப்பம் இதில் உள்ள 120Hz Refresh Rate. இது சமூக வலைதளங்களை பயன்படுத்தும்போதும், கேமிங் விளையாடும்போதும் மிக மென்மையான அனுபவத்தைத் தருகிறது. மேலும், தூசு மற்றும் நீர் துளிகளிடமிருந்து பாதுகாப்பு பெற இது ஐ.பி64 ரேட்டிங் கொண்டுள்ளது. இந்த போனில் மிகப்பெரிய 6000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் சாதாரணமாக 2 நாட்கள் வரை தாராளமாகப் பயன்படுத்தலாம். இதற்கு சார்ஜ் செய்ய 18W வேகமான சார்ஜிங் (Fast Charging) வசதியும் பெட்டியிலேயே (In-box) வழங்கப்படுகிறது. Unisoc T7250 ஆக்டா-கோர் பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது வாட்ஸ்அப், யூடியூப் மற்றும் மிதமான கேமிங்கிற்கு சிறந்த பெர்ஃபார்மன்ஸ் வழங்கும். புகைப்பட பிரியர்களுக்காகப் பின்னால் 50MP டூயல் ஏ.ஐ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இது குறைந்த வெளிச்சத்திலும் தெளிவான படங்களை எடுக்க உதவுகிறது. முன்பக்கத்தில் செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்காக 8MP கேமரா உள்ளது. இது லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 16 (NxtQuantum OS) மென்பொருளில் இயங்குகிறது. இந்த விலையில் ஆண்ட்ராய்டு 16 உடன் வரும் மிகச்சில போன்களில் இதுவும் ஒன்று. ஏ.ஐ + பல்ஸ் 2 ஸ்மார்ட்போன் 2 வேரியண்ட்களில் கிடைக்கிறது.. 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் மாடல் அறிமுகச் சலுகையாக ரூ.5,999 (முதல் 24 மணிநேரத்திற்கு மட்டும்). 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் மாடல் அறிமுகச் சலுகையாக ரூ.7,999 விற்பனைக்கு கிடைக்கும். பச்சை, நீலம், ஊதா , இளஞ்சிவப்பு மற்றும் கருப்பு என 5 வண்ணங்களில் கிடைக்கிறது. ப்ளிப்கார்ட் மற்றும் சாப்ஸி தளங்களில் இதன் விற்பனை நடைபெறுகிறது. குறைந்த விலையில் அதிக பேட்டரி பேக்கப் மற்றும் மென்மையான டிஸ்ப்ளே கொண்ட போனைத் தேடுபவர்களுக்கு இந்த 'AI+ Pulse 2' ஒரு வரப்பிரசாதமாகும்.

இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

The Indian Express இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க

தொடர்புடைய செய்திகள்

தொழில்நுட்பம்
தொழில்நுட்பம்

மாவட்டத்தில் 20 பேர் வேட்பு மனு தாக்கல்

விழுப்புரம்: மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளில் நேற்று முதல் நாளில் மொத்தம் 20 பேர் வேட்பு மனு தாக்கல் இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்
பெற்றோர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி
தொழில்நுட்பம்

பெற்றோர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் பழனிவேலு மெட்ரிக் பள்ளியில் பெற்றோர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்
தொழில்நுட்பம்
தொழில்நுட்பம்

நா.த.க., வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 7 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்