இந்தியாவில் பெட்ரோல், டீசல் கார்களுக்கு இணையாக மின்சார வாகனங்களும் இயங்கி வருகிறது. இதை அடிப்படையாக கொண்டு பெட்ரோல் மற்றும் மின்சாரம் இரண்டிலும் இயங்கும் ஹைப்ரிட் கார்களை பல்வேறு நிறுவனங்களும் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்தியாவிலே விலை குறைந்த டாப் 4 ஹைப்ரிட் கார்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம். 1. Maruti Suzuki Victoris: மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரபலமான காராக இருப்பது Maruti Suzuki Victoris. இந்த காரில் மொத்தம் 36 வேரியண்ட்கள் உள்ளது. இதன் தொடக்க விலை ரூபாய் 13.06 லட்சம் ஆகும். இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 24.70 லட்சம். லெவல் 2 அடாஸ் வசதி, 10.25 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட கார் ஆகும். 21.18 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 1.5 லிட்டர் ஹைப்ரிட் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 2.Maruti Suzuki Grand Vitara: இந்த Maruti Suzuki Grand Vitara காரின் தொடக்க விலை ரூபாய் 13.41 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 24.48 லட்சம் ஆகும். 1.5 லிட்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 35 வேரியண்ட் உள்ளது. 122 என்எம் டார்க் இழுதிறனும், 91 பிஎச்பி குதிரைத் திறனும் கொண்டது. 1490 சிசி திறன் கொண்ட எஞ்ஜின், 1462 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 27.97 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 3. Toyota Urban Cruiser Hyryder: டொயோடோ நிறுவனத்தின் மிகவும் புகழ்பெற்ற கார் Toyota Urban Cruiser Hyryder. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 14.05 லட்சம் ஆகும். இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 25.98 லட்சம் ஆகும். 18 வேரியண்ட்கள் இந்த காரில் உள்ளது. 102 பிஎச்பி குதிரைத் திறனும், 136.8 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 21.11 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 360 டிகிரி கேமரா, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்களும் காரில் பொருத்தப்பட்டுள்ளது. ஹைப்ரிட்டில் 27.97 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 4.Honda City Hybrid eHEV: ஹோண்டா நிறுவனத்தின் வெற்றிகரமான கார் ஹோண்டா சிட்டி. இதன் ஹைப்ரிட் வெர்சன் கார்தான் Honda City Hybrid eHEV. இந்த காரில் 1498 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 6 ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. 27.1 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 24.82 லட்சம் ரூபாய் அளிக்கிறது. 125 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. ஆட்டோமெட்டிக் காராக இந்த கார் உள்ளது. 5 சீட்டர் கார் இந்த கார் ஆகும். பேட்டரி மற்றும் பெட்ரோல் இரண்டிலும் இயங்கும் இந்த வகை கார்கள் வாடிக்கையாளர்ள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஹைப்ரிட் கார்களை அதிகளவு தயாரிக்கவும் முன்னணி நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகிறது.
இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


