விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்த எ.வ. வேலு தோற்கடிக்கப்படுவார் என்றும் தமிழகத்தில் விவசாயிகள் நிலங்களை கொள்ளையடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ள அமைச்சர் எ.வ. வேலுவின் தோல்விதான் திருவண்ணாமலை சட்டப்பேரவை தேர்தல் திருப்புமுனையாக அமையும் என்றும் திருவண்ணாமலை தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் அருள் ஆறுமுகம் கூறியுள்ளார். சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் அறிவித்தார். தமிழக வெற்றி கழகம் சார்பில் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அருள் ஆறுமுகம் அறிவிக்கப்பட்டார். சட்டமன்ற தொகுதி வேட்பாளரை தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து வேட்பாளர் அருள் ஆறுமுகம் மறைந்த முன்னாள் தலைவர்கள் பெரியார் மற்றும் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அருள் ஆறுமுகம், தமிழகத்திலேயே விஜய் போட்டியிடுகின்ற தொகுதியும், நான் போட்டியிடுகின்ற திருவண்ணாமலை தொகுதியும்தான் தற்போதைய தேர்தலில் திருப்புமுனை தேர்தலாக இருக்கப் போகிறது என்றும் தமிழகத்தில் விவசாயிகள் நிலங்களை கொள்ளையடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ள அமைச்சர் எ.வ. வேலுவின் தோல்விதான் திருவண்ணாமலை சட்டப்பேரவை தேர்தல் திருப்புமுனையாக அமையும் என்று தெரிவித்தார். நான் எ.வ. வேலு அவர்களுக்கு எதிராக போட்டியிடவில்லை என்றும் எ.வ. வேலு தான் தொடர்ச்சியாக விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டு கொண்டு உள்ளார் என்றும் விவசாயிகள் வேலுவின் இடத்தை கேட்டு போராடவில்லை தங்களது நிலம் தங்களுக்கு வேண்டும் தங்கள் நிலத்தை கொடுக்கப் போவதில்லை என்று போராடி வருகிறார்கள். விவசாயிகள் மீது குண்டர் சட்டம் மட்டுமல்ல அது வெவ்வேறு சட்டங்களைப் போட்டு கைது செய்து வருகிறார். இதற்கெல்லாம் பாடம் புகட்டும் ஒரு தேர்தலாக தான் தற்போது இந்த திருவண்ணாமலை தேர்தல் த.வெ.க தொண்டர்கள் எழுச்சியாக இருக்கப் போகிறது என்றும் தன்னை யாரும் வீழ்த்த முடியாது என்று நினைத்துக் கொண்டுள்ள வேலு அவர்களுக்கு எதிராக மக்கள் கொந்தளிப்போடு உள்ளார்கள் என்றும் நிச்சயமாக தொண்டர்களின் ஆதரவுடன் திருவண்ணாமலையில் நான் வெற்றி பெறுவேன் என திருவண்ணாமலை தொகுதி தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் அருள் ஆறுமுகம் அவர்கள் பேட்டி அளித்தார்.
இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



