வெளிநாட்டில் குடியேறுவது என்பது கேட்பதற்கு அழகாக இருந்தாலும் அதற்கான வேலைகள் ஆரம்பிக்கும் போதுதான் சவால் தொடங்கும். சில நாடுகள் கோடிக்கணக்கில் முதலீடு செய்பவர்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்குகின்றன. ஆனால், வேறு சில நாடுகள் ஓய்வு பெற்றவர்கள், வீட்டிலிருந்தே வேலை செய்பவர்கள், ஃப்ரீலான்ஸர்கள் அல்லது நிலையான வருமானம் உள்ளவர்களுக்கு எளிய மற்றும் நடைமுறைக்குச் சாத்தியமான வழிகளை வழங்குகின்றன. அப்படியான நாடுகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். மரத்தில் லிஃப்டா? ஒரு ஆணிக் கூட பயன்படுத்தவில்லை... 45 ஆண்டுகளாக நடக்கும் கட்டுமானம்; தாய்லாந்தின் அதிசயம் பனாமா ஓய்வு பெற்றவர்கள் அல்லது நிலையான வருமானம் கொண்டவர்களுக்கு பனாமா (Panama) ஒரு மிகச்சிறந்த தேர்வாக இருக்கும். அங்குள்ள 'பென்சனேடோ' (Pensionado) விசா திட்டம், உலகின் மிகவும் தெளிவான மற்றும் நடைமுறைக்கு ஏற்ற குடியுரிமை வழிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. விண்ணப்பதாரர் வாழ்நாள் முழுவதும் மாதம் குறைந்தது சுமார் ரூ.83,000 பென்ஷன் பெறுபவராக இருக்க வேண்டும். பனாமாவில் $100,000 மதிப்புள்ள சொத்து வைத்திருந்தால், பென்ஷன் வரம்பு மாதம் $750 ஆகக் குறைக்கப்படுகிறது. மெக்சிகோ மெக்சிகோ குடியேற்றத்திற்கு மிகவும் நடைமுறைக்கு ஏற்ற நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இதற்குக் காரணம், அங்குள்ள தற்காலிகக் குடியுரிமை முறை (Temporary Resident System) மிகவும் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் இருப்பதே ஆகும். அந்நாட்டின் அதிகாரப்பூர்வ ஆலோசனைகளின்படி, இந்தத் தற்காலிக வசிப்பிட விசா (Temporary Resident Visa) என்பது மெக்சிகோவில் 180 நாட்களுக்கு மேல் மற்றும் நான்கு ஆண்டுகளுக்குக் குறைவாகத் தங்கத் திட்டமிடுபவர்களுக்காக உருவாக்கப்பட்டது. போர்ச்சுகல் போர்ச்சுகலின் விசா இணையதளம், ஓய்வு பெற்றவர்கள் மற்றும் செயலற்ற வருமானம் உள்ளவர்களுக்கு எனத் தனித்தனி குடியுரிமை விசாக்களைத் தெளிவாகப் பட்டியலிட்டுள்ளது. அந்நாட்டின் அரசாங்க வழிகாட்டுதலின்படி, இந்த விசா வைத்திருப்பவர்கள் போர்ச்சுகலுக்குள் நுழைந்து, பின்னர் அங்கேயே தங்குவதற்கான குடியுரிமை அனுமதிக்கு விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த வெளிப்படையான தன்மையே, ஐரோப்பாவிற்குள் நுழைய விரும்புவோருக்கு போர்ச்சுகலை மற்ற நாடுகளை விட எளிதாக அணுகக்கூடிய ஒரு நாடாக மாற்றுகிறது. கிரீஸ் ஐரோப்பாவில் இருந்துகொண்டே ஆன்லைன் மூலம் வேலை செய்ய விரும்புவோருக்கு கிரீஸ் ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாகத் திகழ்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளைச் சேர்ந்த பணியாளர்கள் இந்த விசாவைப் பயன்படுத்தலாம். மாதம் குறைந்தது சுமார் ரூ.3.15 லட்சம் நிகர வருமானம் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் கிரீஸுக்கு வெளியே உள்ள நிறுவனம் அல்லது வாடிக்கையாளர்களுக்காக ஆன்லைனில் வேலை செய்பவராக இருக்க வேண்டும். இந்த பட்டியலில் கோஸ்டாரிகா, ஸ்பெயின், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளும் உள்ளன.
இந்தியாவில் இருந்து ஜூட் விடணுமா? ஃபாரினில் வீடு வாங்கணுமா? மூட்டையை கட்டிட்டு இந்த நாட்டுக்கு போங்க



