ஈரான் மீதான தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர சமீபத்தில் பாகிஸ்தானில், அமெரிக்கா மற்றும் ஈரான் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. இந்நிலையில், ஹிஸ்புல்லா தீவிரவாத குழுவுடனான மோதலை முடிவுக்கு கொண்டுவரும் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட லெபனானும் இஸ்ரேலும் புதன்கிழமை ஒப்புக் கொண்டது. சென்னையில் 3 இடங்களில் விஜய் பிரச்சாரம் - 27 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி வாஷிங்டனில் அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் நடைபெற்ற சந்திப்பை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஈரான் மீதான தாக்குதலில் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை கண்டித்து மார்ச் 2-ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மேற்கு ஆசியாவின் பரந்த மோதலில் லெபனான் ஈடுபடுத்தப்பட்டது. இஸ்ரேல் - லெபனான் பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் செய்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, ஈரானின் பினாமி குழுவின் செல்வாக்கை முடிவுக்குக் கொண்டுவர இது ஒரு வரலாற்று வாய்ப்பு என்று கூறினார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 'பாக்ஸ் நியூஸ்' உடனான நேர்காணலில், ஈரானுடனான போர் முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது என்று தெரிவித்துள்ளார். கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுடனான போர்நிறுத்தத்தை அறிவித்த பிறகு, ஹிஸ்புல்லவிற்கு எதிரான தனது தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியது. இந்த அறிவிப்புக்கு முன்னதாக, லெபனான் முழுவதும் இஸ்ரேல் நடத்திய வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களில் 1,500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 2,100-ஐத் தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' அறிக்கையின்படி, இறந்தவர்களில் 1,702 ஆண்கள், 254 பெண்கள் மற்றும் 168 குழந்தைகள் அடங்குவர். டஜன் கணக்கான சுகாதாரப் பணியாளர்கள் கொல்லப்பட்டதாலும், பலர் காயமடைந்ததாலும் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இஸ்ரேல் - லெபனான் பேச்சுவார்த்தை: ஈரானின் பினாமி குழுவை குறிவைக்கும் அமெரிக்கா



