நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >'சொந்தமாக கார் இல்லை, நகை இல்லை'... ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தகவல்

'சொந்தமாக கார் இல்லை, நகை இல்லை'... ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தகவல்

திங்கள், மார்ச் ௩௦, ௨௦௨௬|14 மணி நேரம் முன்|webdesk|The Indian Express
'சொந்தமாக கார் இல்லை, நகை இல்லை'... ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தகவல்

தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, அந்த வேட்பாளரின் சொத்து விவரங்கள், வேட்பாளர் மீது குற்ற வழக்குகள் உள்ளதா? என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் வேட்பு மனுவில் இடம்பெற்றிருக்கும். அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்பு மனுவில் அவர் குறிப்பிட்ட சொத்து விவரங்கள் தொடர்பான தகவல் தற்போது வெளியாகி உள்ளது. பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி எஸ்.சாந்தியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார். அதன்பின் திறந்த ஜீப்பில் ரோடு ஷோ சென்ற அவருக்கு சாலையின் இருபுறமும் திமுகவினரும் மக்களும் திரண்டு உற்சாக வரவேற்பளித்தனர். அதன்படி, மு.க.ஸ்டாலினின் அசையும் சொத்து மதிப்பு ரூ.3.30 கோடி, அசையா சொத்து மதிப்பு ரூ.4.34 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் பெயரில் ரூ.1.32 கோடி அசையும் சொத்துகள் உள்ளதாகவும், 720 கிராம் தங்கம் உள்ளதாகவும், கையிருப்பில் ரூ.40 ஆயிரம் உள்ளதாகவும் தனது வேட்பு மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்னிடம் சொந்தமாக வாகனங்கள், தங்க நகைகள் எதுவும் இல்லை என மு.க.ஸ்டாலின் தனது வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலினிடம் ரூ.10 ஆயிரம் கையிருப்பு பணம் உள்ளதாகவும், அவரின் வருவாய்க்கான ஆதாரம் எம்.எல்.ஏ. ஊதியம், வங்கி வைப்பு நிதி வட்டி என்றும் வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மு.க.ஸ்டாலின் பெயரில் குற்ற வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவிக்கு எந்த கடன்களும் இல்லை என்றும், மு.க.ஸ்டாலின் பெயரில் தஞ்சை அகரத்திருநல்லூரில் 2.86 ஏக்கர் நிலம் உள்ளதாகவும், திருவாரூரில் ரூ.1.12 கோடி மதிப்பில் நிலம் உள்ளதாகவும் அவரது வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

The Indian Express இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க

தொடர்புடைய செய்திகள்

top
top

தேர்தல் விதிமுறை மீறல்: த.வெ.க.,வினர் மீது வழக்கு

விழுப்புரம்: விழுப்புரத்தில் தேர்தல் விதியை மீறியதாக த.வெ.க., மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் உட்பட 16 பேர் மீது இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்
top
top

பயிற்சி வகுப்பில் 696 பேர் ஆப்சென்ட் விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்' :மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்

கடலுார் மாவட்டத்தில் வெற்றிக்குரிய பிரதிநிதிகள் பெற நடக்கவுள்ள தேர்தலில் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல் அசச்சான்றுகோல் புத்தகங்கள் பாதுகாக்கப்படும் அளவிற்கு கடுமையானதாக இருக்கும் என நம்புகின்றனர் பலர்.பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாதவர்கள் மீது நடவடிக்கையை எடுப்பதாக ஆட்சிக் கட்சிகளின் சார்பில் செயல்படும் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல் அறிவித்துள்ளார். தேர்தல் செயல்பாடுகளில் பொலியிடப்பட்ட பாகுபாடுகள் குறித்து ஆணையம் விசாரணை நடத்தி அதன் மூலம் பொலியிடப்பட்ட தேர்தல் செயல்பாடுகள் தொடர்பான விதிகள் கையாளப்படும். ஒரு விதி படி பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாதவர்கள் மீது நடவடிக்கையை இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்
ஓட்டுப்பதிவு இயந்திரம் அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
top

ஓட்டுப்பதிவு இயந்திரம் அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

பரங்கிப்பேட்டை: புவனகிரி தாலுாகா அலுவலகத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறைக்கு துப்பாக்கி இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்