topTVK Vijay: எம்மதமும் சம்மதம்! திருச்சி வாக்கு சேகரிப்புக்கு நடுவே வழிபாடு! மதநல்லிணக்கத்தை செயலில் காட்டிய விஜய்
தவெக தலைவர் விஜய் திருச்சியில் இன்று மேற்க்கொண்ட தேர்தல் பரப்புரையில் சமூக நல்லிணக்கத்தை போற்றும் வகையில் தேவாலயம், தர்கா மற்றும் கோவிலில் வழிபாடு செய்தது கவனம் பெற்றது. விஜய் தேர்தல் பரப்புரை தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23- ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் ஏப்ரல் 21- ஆம் தேதி மாலை 05.00 மணியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், வீடு வீடாகச் சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து தேர்தல் வாக்குறுதிகளைக் கூறி வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (ஏப்ரல் 19) ரோடு ஷோ சென்றவாறு பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்குச் சேகரித்தார். சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்ற விஜய்க்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து திறந்தவெளி வாகனத்தில் சென்றவாறு வாக்குச் சேகரித்தார். வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள், இளைஞர்கள் கூடி விஜய்க்கு பரிசுகள் வழங்கியும், மலர்களைத் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். சர்ச் மற்றும் தர்காவில் வழிபாடு: அப்போது வயர்லெஸ் சாலையில் உள்ள அந்தோணியார் தேவாலயத்தில் விஜய் முட்டிப்போட்டு நடந்து பிராத்தனை செய்தார். பிராத்தனைக்கு பின்னர் தேவாலயத்தில் மெழுகுவர்த்தி ஏற்றினர், பின்னர் தேவாலய பங்குத்தந்தையிடம் ஆசி வாங்கிவிட்டு தனது வாகனப்பரப்புரையை தொடர்ந்தார். இருண்டு கிடக்கும் தமிழக அரசியலில் ஒளியேற்ற வரும் கடைசி நம்பிக்கை நம் வெற்றித் தலைவர் மட்டுமே! (1/3) #VoteForTVK #VoteForWhistle #TVKForTN2026 pic.twitter.com/uuPFjGkciO — TVK IT Wing Official (@TVKHQITWingOffl) April 19, 2026 சிறிது தூரம் சென்ற பின் விஜய் அங்குள்ள தர்காவிற்கு சென்று ஆசி பெற்றார். பின்னர் கொட்டப்பட்டு பச்சநாச்சி அம்மன் கோயிலுக்கு சென்று வழிபாடு மேற்க்கொண்டார் தனது கட்சி எவ்வித மதவாதத்திற்கும் எதிரானது என்பதையும், அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய "மதச்சார்பற்ற" கட்சி என்பதையும் வெளிப்படுத்த விஜய் விரும்புவதாக தவெகவினர் தெரிவித்து வருகின்றனர்
இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.