நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

ஜோதிடம்

  • 🔮 இன்றைய ராசி பலன்
  • 📅 இன்றைய பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திர பலன்
  • 📆 வார ராசிபலன்
  • 🗓️ மாத ராசிபலன்
  • எங்களை பற்றி
  • 📡 RSS Feed

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >திருவாரூரின் அடையாளமாக மாறிய பூண்டி கலைவாணன்: 5 ஆண்டுகால சாதனைகளும், அர்ப்பணிப்பு வரலாறும்!

திருவாரூரின் அடையாளமாக மாறிய பூண்டி கலைவாணன்: 5 ஆண்டுகால சாதனைகளும், அர்ப்பணிப்பு வரலாறும்!

செவ்வாய், ஏப்ரல் ௧௪, ௨௦௨௬|14 மணி நேரம் முன்|சிவரஞ்சித்
திருவாரூரின் அடையாளமாக மாறிய பூண்டி கலைவாணன்: 5 ஆண்டுகால சாதனைகளும், அர்ப்பணிப்பு வரலாறும்!

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட திமுக செயலாளராக கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் பூண்டி கலைவாணன், தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் தனது கடந்த காலச் சாதனைகளை முன்வைத்து மக்கள் முன்னிலையில் நிற்கிறார். திருவாரூர் மாவட்ட திமுக செயலாளராக கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் பூண்டி கலைவாணன், தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் தனது கடந்த காலச் சாதனைகளை முன்வைத்து மக்கள் முன்னிலையில் நிற்கிறார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நம்பிக்கைக்குரிய தளபதியாகத் திகழ்ந்த இவரது அரசியல் பயணம், தற்போது திருவாரூர் தொகுதியின் வளர்ச்சிப் பாதையாக மாறியுள்ளது. கலைஞரின் நம்பிக்கைக்குரியவர் கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் வெற்றி பெற்றார். அப்போது ஆட்சியில் இல்லையென்றாலும், தனது சொந்தத் தொகுதியைக் கவனித்துக்கொள்ள கருணாநிதி தேர்வு செய்த ஒரே நபர் பூண்டி கலைவாணன் தான். கருணாநிதி திருவாரூர் மீது கொண்டிருந்த நேசத்தை முழுமையாக உணர்ந்து செயல்பட்டதால், இன்று திருவாரூரின் அடையாளமாகவே இவர் மாறிப்போனார் என்கிறார்கள் தொகுதி மக்கள். நெகிழ்ச்சியான தருணங்கள் மற்றும் அர்ப்பணிப்பு உச்சி வெயிலில் சம்மட்டி: ஒருமுறை தியாகராஜர் கோயில் தேர் கட்டுமானத்தின் ஒரு பகுதி கட்டிடத்தில் மோதி நகர முடியாமல் நின்றபோது, சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அவரே மேலே ஏறிச் சென்று சம்மட்டியால் தடையை நீக்கித் தேரோட்டம் நடைபெற வழிவகை செய்தார். கலைஞர் கோட்டம்: காட்டூரில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவர் குடும்பத்தினரின் கனவுத் திட்டமான ‘கலைஞர் கோட்டம்’ கட்டி முடிக்கப்படும் வரை, அங்கேயே முகாமிட்டு பணிகளைத் துரிதப்படுத்தினார். ஐந்தாண்டு கால சட்டமன்ற உறுப்பினர் சாதனைகள்: சட்டமன்ற உறுப்பினராகத் தனது பதவிக்காலத்தைப் பயன்படுத்திப் பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்களைத் திருவாரூருக்குக் கொண்டு வந்துள்ளார்: நிர்வாக மேம்பாடு: திருவாரூர் மாவட்டம் உருவானது முதல் மாவட்டப் பதிவாளர் அலுவலகம் இல்லாமல் இருந்தது. மக்கள் நாகப்பட்டினம் செல்ல வேண்டிய நிலையை மாற்றி, திருவாரூருக்கே தனிப் பத்திரப்பதிவு அலுவலகம் மற்றும் வணிகவரித்துறை இணை இயக்குனர் அலுவலகத்தை கொண்டு வந்தார். கல்விப் பணி (சொந்த நிலம் தானம்): குடவாசலில் அரசு கலைக்கல்லூரி தொடங்க இடமின்றி தவித்த போது, செல்லூர் பகுதியில் தனது 5 ஏக்கர் சொந்த நிலத்தை அரசுக்குத் தானமாக வழங்கி கல்விப் புரட்சிக்கு வித்திட்டார். மேலும், கூத்தாநல்லூரில் மகளிர் அரசு கலைக்கல்லூரி அமையவும் உறுதுணையாக இருந்தார். போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பு: அதிமுக ஆட்சியில் முடங்கிக் கிடந்த பழைய பேருந்து நிலையத்தைப் புதுப்பித்து, ‘கலைஞர் நகர பேருந்து நிலையம்’ எனப் பெயரிட்டு மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தார். மடப்புரத்தில் ஓடம்போக்கி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் மற்றும் திருவாரூர் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலைக்கு புறவழிச்சாலை அமைக்கத் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளார். மருத்துவம் மற்றும் மின்சாரம் : கொரடாச்சேரியில் 110 கிலோ வாட்ஸ் மின்சார நிலையம் மற்றும் நேரு காலத்தில் தொடங்கப்பட்டு முடங்கியிருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை நிதி ஒதுக்கீடு பெற்று மீண்டும் செயல்படுத்தினார். மழைக்காலங்களில் வெள்ளம் சூழும் விஜயபுரம் அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டிடங்களை உருவாக்கினார். மக்களுக்கான களப்பணி அரசு நலத்திட்டங்கள் தகுதியுள்ள அனைத்து மக்களையும் சென்றடைய அதிகாரிகளைத் தொடர்ந்து தொடர்பு கொண்டு பணிகளைத் துரிதப்படுத்துவதில் இவர் முன்னோடியாகத் திகழ்கிறார். சட்டமன்ற உறுப்பினர் பதவியை எவ்வாறு மக்கள் சேவைக்காகப் பயன்படுத்த வேண்டும் என்பதற்குப் பூண்டி கலைவாணனின் கடந்த ஐந்தாண்டு கால செயல்பாடுகளே சாட்சி எனத் தொகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

மூலச் செய்தி இணைப்பு

தொடர்புடைய செய்திகள்

‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
top

‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு | New Poster Released for the Movie ‘Spider-Man: Brand New Day’

14 மணி நேரம் முன்
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பயனாளியின் நிர்மாணிக்கப்பட்ட வீட்டில் வைத்து அநுர புத்தாண்டு கொண்டாட்டம்
top

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பயனாளியின் நிர்மாணிக்கப்பட்ட வீட்டில் வைத்து அநுர புத்தாண்டு கொண்டாட்டம்

டித்வா சூறாவளியினால் சேதமடைந்து, அரசின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அநுராதபுரம் - கல்நேவ பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட பயனாளி ஒருவரின் வீட்டில் வைத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளார். சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு சுபநேரச் சடங்குகளில் இணைந்துகொண்ட அவர், இன்று (14) முற்பகல் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட முகநூல் பதிவில், டித்வா அனர்த்தம் “கடந்த நவம்...

14 மணி நேரம் முன்
அம்பேத்கரின் லட்சியப் பாதையில் பயணிப்போம்! - விஜய் புகழஞ்சலி
top

அம்பேத்கரின் லட்சியப் பாதையில் பயணிப்போம்! - விஜய் புகழஞ்சலி

அம்பேத்கரின் லட்சியப் பாதையில் பயணிப்போம் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளதைப் பற்றி...

14 மணி நேரம் முன்