இந்த ஆண்டில் வெளிநாட்டுப் பயணத்தைத் திட்டமிடும் இந்தியர்கள், வெறும் பட்ஜெட் மற்றும் காலநிலையை மட்டும் கருத்தில் கொள்ளாமல், அந்த நாட்டின் பாதுகாப்பு மற்றும் விசா நடைமுறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கின்றனர். அப்படி இந்தியப் பயணிகளுக்கு ஏற்ற சிறந்த நாடுகளின் பட்டியல் குறித்து பார்க்கலாம். ஏப்ரல் 18 வரை டைம் இருக்கு: அபராதமும் இல்லை; தண்டனையும் இல்லை... சவூதி விசிட் விசா வைத்திருப்பவர்களுக்கு பெரிய ரிலீஃப் ஜப்பான் பழமை மாறாத கலாச்சாரம் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தின் சங்கமமாக ஜப்பான் திகழ்கிறது. கோடைக்காலத் திருவிழாக்கள், கண்கவர் வாணவேடிக்கைகள் மற்றும் ஹொக்கைடோவின் இதமான காலநிலை பயணிகளை ஈர்க்கின்றன. முதன்முறையாக வெளிநாடு செல்பவர்களுக்கு இங்கிருக்கும் சிறப்பான போக்குவரத்து வசதி பெரும் உதவியாக இருக்கும். விசா விவரம்: சுற்றுலா விசா (இ-விசா வசதி உண்டு). கிடைக்கப் பெறும் காலம்: 5 முதல் 7 வேலை நாட்கள். கனடா இயற்கை எழில் கொஞ்சும் இடங்களையும், நவீன நகர வாழ்க்கையையும் ஒரே பயணத்தில் அனுபவிக்க விரும்புபவர்களுக்கு கனடா ஒரு வரப்பிரசாதம். குறிப்பாக பான்ஃப் (Banff) தேசியப் பூங்கா மற்றும் வான்கூவர் நகரங்கள் உலகத்தரம் வாய்ந்தவை. தரம் மற்றும் பாதுகாப்பில் இது முன்னணியில் உள்ளது. விசா விவரம்: சுற்றுலா விசா (பயோமெட்ரிக்ஸ் அவசியம்). கால அளவு: 3 முதல் 6 வாரங்கள். நியூசிலாந்து பரபரப்பில்லாத தனிமையான சூழலை விரும்புபவர்களுக்கு நியூசிலாந்து மிகச்சிறந்த தேர்வு. நாம் கோடையை அனுபவிக்கும் போது, அங்கு நிலவும் பனிப்பொழிவு மற்றும் மலைப்பாதையோர பயணங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவத்தைத் தரும். விசா விவரம்: ஆன்லைன் சுற்றுலா விசா. கால அளவு: 3 முதல் 5 வாரங்கள். போர்ச்சுகல் ஐரோப்பாவில் மக்கள் நெரிசல் குறைவான, அதே சமயம் கலாச்சாரம் மற்றும் சுவையான உணவுகள் நிறைந்த இடத்தைத் தேடுபவர்களுக்கு போர்ச்சுகல் ஏற்றது. இங்குள்ள கட்டிடக்கலை மற்றும் கடற்கரைகள் மனதிற்கு நிம்மதியைத் தரும். விசா விவரம்: ஷெங்கன் (Schengen) விசா. கால அளவு: 15 நாட்கள் முதல் சீசனைப் பொறுத்து மாறுபடும் சிங்கப்பூர் சுத்தம் மற்றும் ஒழுங்கிற்குப் பெயர்பெற்ற சிங்கப்பூர், இந்தியர்களுக்கு மிகவும் நெருக்கமான சுற்றுலாத் தலமாகும். 'கார்டன்ஸ் பை தி பே' மற்றும் லிட்டில் இந்தியா போன்ற இடங்களை மிகக் குறுகிய கால அளவிலேயே சுற்றிப் பார்த்துவிடலாம். விசா விவரம்: சுற்றுலா இ-விசா. கால அளவு: 3 முதல் 5 வேலை நாட்கள். ஐஸ்லாந்து இயற்கையின் விந்தைகளை ரசிக்க விரும்புபவர்கள் ஐஸ்லாந்தைத் தேர்ந்தெடுக்கலாம். அங்கு நிலவும் 'நள்ளிரவு சூரியன்' (Midnight Sun), பிரம்மாண்ட நீர்வீழ்ச்சிகள் மற்றும் எரிமலைப் பாறைகள் ஒரு மாய உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லும். விசா விவரம்: ஷெங்கன் விசா. கால அளவு: 15 நாட்கள், முன்கூட்டியே விண்ணப்பிப்பது நல்லது.
பட்ஜெட் மட்டுமில்ல... பாதுகாப்பும் முக்கியம்; 2026-ன் டாப் டிராவல் லிஸ்ட் இதுதான்
|15 மணி நேரம் முன்|nagalekshmi rajasekar|The Indian Express
